யாழ். பல்கலைகழக மாணவிகள் இருவருக்கிடையில் மோதல்!
யாழ். பல்கலைகழகத்தில் இரு மாணவிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழக மாணவிகள் இருவர் தாம் வாடகைக்கு தங்கியுள்ள வீட்டில் இன்றைய தினம் மதியம் மோதிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது காயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். Source link