வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும்..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஜனவரி 27ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜனவரி 27ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்றும் வீசக்கூடும் நுவரெலியா மாவட்டத்தில் … Read more

மாற்று யோசனைகள் இருக்குமாயின் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடலுக்குத் தயாராகுமாறு ஜனாதிபதி கட்சித் தலைவர்களிடம் தெரிவிப்பு

தேர்தலுக்குத் தயாராகும் அரசியல் கட்சிகளிடம் நாட்டை முன்னேற்றுவதற்கான திட்டம் இருக்க வேண்டும். 2023 இல் பெறப்பட்ட சுங்க வருமானத்திற்காக ஜனாதிபதி சுங்கத் திணைக்களத்திற்கு பாராட்டு. அரசாங்கம் எதிர்பார்க்கும் வருமான அதிகரிப்புக்கு சுங்கச் சேவை மிகவும் செயற்திறன்மிக்கதாக இருக்க வேண்டும். சுங்கம் உள்ளிட்ட அரசாங்கத்துக்கு வருமானம் ஈட்டித்தரும் நிறுவனங்கள் எதிர்காலத்தில் நவீனமயமாக்கப்படும். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் அதன் முகாமைத்துவப் பணிப்பாளருடன் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து … Read more

உமாஓயா திட்டத்தின் கீழ் பெப்ரவரி மாதம் முதல் 120 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்படும் 

உமாஓயா திட்டத்தின் கீழ் பெப்ரவரி 15ஆம் திகதி முதல் 120 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும், 31 நீர்த் தேக்கங்கள் மூலம் நீரில் மிதக்கும் சோலார் பேனல்களைப் பயன்படுத்தி 3,077 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்து தேசிய மின்கட்டமைப்பில் இணைக்க முடியும் எனவும் இதற்குப் பொருத்தமான நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (26) நடைபெற்ற … Read more

முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் ஜனன தின நிகழ்வில் ஜனாதிபதி பங்​கேற்பு

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும், அரச சேவை ஒன்றிணைந்த தாதியர் சங்கத் தலைவரும், மேல் மாகாணத்துக்கான பிரதான சங்கநாயக்கருமான முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் ஜனன தினமான நேற்று (26) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் இறுதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் உரையாற்றிய, முருத்தெட்டுவே ஆனந்த தேரர், மக்கள் நலனுக்காக முன்னெடுக்கும் அனைத்து திட்டங்களிலும் ஜனாதிபதிக்கு மகா சங்கத்தினரின் ஆதரவு கிடைக்கும் என்றும் தெரிவித்தார். எனவே பஞ்ச சீல கொள்கையை … Read more

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திடமிருந்து மேலும் 1.5 பில்லியன் ரூபா திறைசேரிக்கு

லிட்ரோ எரிவாயு நிறுவனம் 2023ஆம் ஆண்டில் இலாபமாகப் பெற்றுக்கொண்ட மேலும் 1.5 பில்லியன் ரூபா நிதியை திறைசேரிக்கு வழங்கியது. லிட்ரோ நிறுவனத்தின் தாய் நிறுவனமான இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திடம் இதற்கான காசோலை நேற்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது. குறித்த காசோலையை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். இதன்பின்னர், குறித்த காசோலையை இலங்கை காப்புறுதி நிறுவனத்தின் பிரதம … Read more

அம்பாறை உகண மகாஓய வீதியை 3000 மில்லியன் செலவில் காபெட் வீதியாக செப்பனிடும் பணிகள் ஆரம்பம்!!

பதுளை செங்கலடி மீள்நிர்மாண மற்றும் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் 25km நீளமான அம்பாறை உகன மகாஓய வீதியை காபெட் வீதியாக செப்பனிடும் பணிகள் சவூதி அரேபிய நாட்டின் நிதி உதவியுடன் சுமார் 3000 மில்லியன் செலவில் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத் துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேற்படி திட்டமானது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திரகாந்தனின் கோரிக்கைக்கு அமைவாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு … Read more

சனத் நிஷாந்த அவர்களின் மறைவைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பாராளுமன்றம் அறிவிப்பு

புத்தளம் தேர்தல் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் கௌவர சனத் நிஷாந்த அவர்களின் மறைவைத் தொடர்ந்து 2024 ஜனவரி 25ஆம் திகதி முதல் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவருக்கான வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் சார்பில் பாராளுமன்ற பதவியணித் தலைமை அதிகாரியும், பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(1) ஆம் பிரிவின் பிரகாரம் பாராளுமன்ற செயலாளர் நாயகம் சார்பில் … Read more

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் பெப்ரவரி 07 ஆம் திகதி

நான்காவது கூட்டத்தொடரை நேற்று (26) நள்ளிரவு முதல் முடிவுக்குக் கொண்டுவரும் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களினால் நேற்று நள்ளிரவு (26) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அரசியலமைப்பின் 70 (1) உறுப்புரைக்கு அமைய அவருக்குரித்தாக்கப்பட்ட தத்துவங்களுக்கு அமைய பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதுடன், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 07 ஆம் திகதி மு.ப 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 33 உறுப்புரையின் (அ) மற்றும் (ஆ) உப பிரிவுகளுக்கு … Read more

வாழைச்சேனையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான வாழ்வாதார உதவிகள் விநியோகம்!!

புனர்வாழ்வளிக்கப்பட்ட நபர்கள் மற்றும் போதைப் பொருள் பழக்கத்திலிருந்து புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு சுயதொழில் உதவி வழங்கும் நிகழ்வு (25) கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. உதவிப்பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ரமீஸா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுய தொழிலில் ஈடுபடுவதற்கான வாழ்வாதார உதவிகளாக நிலத்தராசு, தோணி, வலை, மீன் பதனிடும் பெட்டி போன்றவை பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.நிஸாம் மற்றும் முகாமைத்துவ அதிகாரிகளான எம்.ஸலாம், எஸ்.லயிஸ் உட்பட பலர் கலந்து … Read more

மட்டக்களப்பில் காணிப்பயன்பாட்டுத் திட்டமிடல் பிரிவின் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுவின் 2024ஆம் ஆண்டு முதலாம் காலாண்டுக்கான கலந்துரையாடல் இன்று (26) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜே ஜே முரளீதரன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தெரிவுசெய்யப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் காணிகளை பல்வேறு வேலைத்திட்டங்களுக்காகப் பயன்படுத்துவதற்கு அனுமதிப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதன்போது கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை, மண்முனை வடக்கு மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை ஆகிய பிரதேச … Read more