கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாநாடு!!

இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழக பல்துறை ஆராய்ச்சிக்கான நிலையம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அத்துடன் இந்தியாவின் ஈ.எஸ்.என் பதிப்பகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த “நாளைய சவால்களுக்கான நிலைத்திருக்கும் தன்மை, புத்தாக்கம், இடைநிலை ஆராய்ச்சி” என்ற தலைப்பிலான சர்வதேச மாநாடு கிழக்குப் பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது. கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் ஆரம்ப உரையாற்றிய இம்மாநாட்டில், தேசிய விஞ்ஞான மன்றத்தின் தலைவரும் றுகுணு பல்கலைக்கழக பயிர் விஞ்ஞானத்துறையைச் சேர்ந்த வாழ்நாள் பேராசியருமான ரஞ்சித் … Read more

சட்டவிரோதமான முறையில் சங்குகள் பிடித்த 03 பேர் கல்பிட்டி கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது

கல்பிட்டி இப்பண்தீவு கடல் பகுதியில் 2024 ஜனவரி 25 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, அங்கீகரிக்கப்பட்ட சட்ட வரம்பு இல்லாத 1856 சங்குகளுடன் மூன்று சந்தேகநபர்கள் மற்றும் ஒரு டிங்கி படகு கைது செய்யப்பட்டது. அதன்படி, 2024 ஜனவரி 25 ஆம் திகதி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தின் கடற்படையினரால் கல்பிட்டி இப்பண்தீவு கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான படகொன்று … Read more

இனிப்புப் பண்டத் தொழில்துறையை முன்னணி ஏற்றுமதித் துறையாக மாற்ற அரசாங்கம் ஆதரவளிக்கும்!

இனிப்புப் பண்டத் உற்பத்தியாளர் சங்கத்தின் 30ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு. இனிப்புப் பண்டத் தொழில்துறையை முன்னணி ஏற்றுமதித் துறையாக மாற்றுவதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். கொக்கோ உள்ளிட்ட பயிர்களைப் பயிரிடுவதற்கு அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டங்களை குத்தகை அடிப்படையில் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் (24) பிற்பகல் நடைபெற்ற இலங்கை இனிப்புப் பண்ட உற்பத்தியாளர் சங்கத்தின் 30ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி … Read more

பியகமவை முன்மாதிரியாகக் கொண்டு அடுத்த சில வருடங்களுக்குள் நாட்டை முன்னேற்றுவோம்

நாடு முழுவதிலும் ஏற்றுமதி வலயங்கள் நிறுவப்படும் -ஜனாதிபதி தெரிவிப்பு. பியகமவை முன்மாதிரியாகக் கொண்டு அடுத்த சில வருடங்களுக்குள் நாட்டை முன்னேற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த பியகம தேர்தல் தொகுதிக்கு அன்று தான் வந்த போது அந்தப் பிரதேசம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பியகம முதலீட்டு வலயத்தை நிறுவுதல் உள்ளிட்ட சரியான பொருளாதார தீர்மானங்களினால் பியகம மிக குறுகிய காலத்தில் பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளதெனவும் தெரிவித்தார். அதே … Read more

75 மில்லியன் செலவில் செங்கலடி வந்தாறுமூலை தெற்கு செட்டியார் வீதி காப்பெட் வீதியாக செப்பனிடும் பணிகள் ஆரம்பம்!!

ஏறாவூர்ப்பற்று செங்கலடி வந்தாறுமூலை தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் 2.3km நீளமான செட்டியார் வீதியானது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திரகாந்தனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 75 மில்லியன் காப்பெட் வீதியாக செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தினை முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் ஆரம்பித்துவைத்துள்ளார். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தின் கள உத்தியோகத்தர்களான … Read more

தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் நாளையிலிருந்து மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஜனவரி 26ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜனவரி 26ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் நாளையிலிருந்து மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி … Read more

மீனவர்களின் ஆரோக்கியம் மற்றும் நலன்புரிக்காக ‘தீவர சுவ சவிய’ வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும்

இந்நாட்டு மீனவர்களின் ஆரோக்கியம் மற்றும் நலன்புரி செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையில் ‘தீவர சுவ சவிய’ என்ற புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தெரிவித்தார். இதன் முதற்கட்ட வேலைத்திட்டம் வென்னப்புவ, வெல்லமங்கரய மீன்பிடித் துறைமுகத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 26ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (24) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் … Read more

புது தில்லியின் இலங்கை புதிய உயர்ஸ்தானிகர் இராணுவ தளபதியை சந்திப்பு

புதுதில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஆலோசகரான இலங்கை கடற்படையின் கெப்டன் வைஐடி சில்வா ஆர்டபிள்யூபீ பீஎஸ்சீ அவர்கள் நாட்டை விட்டு செல்வதற்கு முன்னர் இராணுவ தளபதி லெப்டினன் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை நேற்று (ஜனவரி 24) மரியாதை நிமித்தம் இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார். நியமனம் பெற்ற சிரேஷ்ட அதிகாரிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த இராணுவத் தளபதி, நாட்டின் சிறந்த நலன்களுக்காக ஒரு பாதுகாப்பு ஆலோசகராக அவர் ஆற்றக்கூடிய முக்கிய இராஜதந்திர … Read more

இராணுவ புலனாய்வு தகவலுக்கமைய அம்பலத்தோட்டையில் இரகசிய கஞ்சா விநியோக நிலையம் முற்றுகை

2024 ஜனவரி 22 ஆம் திகதி அம்பலாந்தோட்டை ரெதியகமவில் இரகசிய கஞ்சா விநியோக நிலையம் ஒன்றை அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள் முற்றுகையிட்டனர். இந்த சோதனையில் 2 கிலோ கஞ்சாவுடன் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கை இராணுவத்தின் இராணுவ புலனாய்வு படையணிக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையம் இந்தச் சுற்றிவளைப்பை முன்னெடுத்தது. இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

குகுலேகங்க லயா லெஷர்வில் ‘உணவு களஞ்சிய முகாமை அமைப்பு அறிமுகம்

தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தினரால் உருவாக்கப்பட்ட உணவு களஞ்சிய முகாமை அமைப்பு என்ற புதிய மென்பொருள் குகுலேகங்க லயா லெஷரில் சனிக்கிழமை (ஜனவரி 13) அறிமுகப்படுத்தப்பட்டது. இது பாரம்பரிய களஞ்சியப் பதிவு செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஒரு திட்டமாகும். மேலும் ஊழியர்களுக்கு ஒரு அடிப்படை பயிற்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது. உணவு களஞ்சிய முகாமை அமைப்பு என்பது ஒரு ஒருங்கிணைந்த இணைய அடிப்படையிலான தளமாகும், இது களஞ்சிய கட்டுப்பாட்டு செயல்முறைகளை நெறிப்படுத்தவும் நிர்வகிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. களஞ்சிய நிலைகளை மேம்படுத்துதல், பொருத்தமான … Read more