உள்ளூர் உற்பத்தி தொழில் நிறுவனமான நாகா பசுமை நிலையம் திறந்து வைப்பு!!

மட்டக்களப்பில் உள்ளூர் உற்பத்தி தொழில் நிறுவனமான நாகா பசுமை நிலையம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரனால் மட்டக்களப்பு பொது சந்தை கட்ட தொகுதியில் நேற்று (24) திறந்து வைக்கப்பட்டது. நாகா பசுமை நிலையத்தின் ஸ்தாபகர் திருமதி கோகிலாதேவி ரஞ்சித்குமார் தலைமையில் இந் நிகழ்வுகள் இடம் பெற்றன. மாவட்டத்தில் உள்ளூர் தொழில் முயற்ச்சியாளர்களை ஊக்குவித்து நாட்டின் பொருளாதாரத்தில் பங்கு கொள்ள செய்வதற்காக பல வேலைத்திட்டங்கள் மாவட்டத்தில் முன்னேடுக்கப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பெறப்படும் விளை … Read more

கிளிநொச்சியில் சட்ட விரோத மணல் அகழ்வு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்ட விரோத மணல் அகழ்வு தொடர்பில் விசேட கலந்துரையாடல் நேற்று (24) புதன்கிழமை காலை 11.30மணிக்கு நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் : கிளிநொச்சி மாவட்டத்தில் சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக கடந்த கூட்டங்களில் பொலீஸ், இராணுவம், கடற்படை பிரிவுகளுக்கு … Read more

நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

பாராளுமன்றத்தில் நேற்று (24) மற்றும் நேற்று முன்தினம் (23) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் நேற்று (24) மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் முடிவடைந்ததும் பி.ப 5.00 மணிக்கு எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ லக்ஷ்மன் கிரியல்ல அவர்களினால் வாக்கெடுப்புக் கோரப்பட்டது. இதற்கு அமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்கும் எதிராக 62 வாக்குகளும் பதிவாகின. இதற்கமை இந்தச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதன் … Read more

மட்டக்களப்பில் சுகாதார அதிகாரிகளால் உணவகங்களில் திடீர் பரிசோதனை!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பின் தரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளை இரவிலும் பரிசோதிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி . சுகுணனின் ஆலோசனைக்கிணங்க அவரின் தலைமையிலான குழுவினர் இச்செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். மட்டக்களப்பு நகரில் செயற்படும் உணவகங்கள், சிற்றுண்டிசாலைகள் மற்றும் அவற்றில் தயாரிக்கப்படும் உணவின் தரம் தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பொதுச்சுகாதார உத்தியோகத்தர்களால் திடீர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பாவனைக்கு உதவாத … Read more

மாத்தறை நகரின் குடிநீர் மற்றும் வெள்ளப் பிரச்சினை தொடர்பாக வழிவகைகள் பற்றிய குழுவில் அவதானம்

நீர்ப்பாசனத் திணைக்களம், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகம், இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் சம்பந்தப்பட்ட சகல நிறுவனங்களையும் இணைத்து நில்வளா வெள்ளம் குறித்து திட்ட ஆய்வொன்றை மேற்கொண்டு வெள்ளப்பெருக்கு எதிர்காலத்தில் ஏற்படாதிருப்பதற்கு ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடவடிக்கை எடுக்க வழிவகைகள் பற்றிய குழு பரிந்துரை கடந்த வருடத்தில் ஏற்பட்ட பயிர்களுக்கான சேதம் குறித்து அறிக்கை கோரல் வெள்ளப்பெருக்குக் காரணமாக ஒன்பது போகங்கள் பாதிப்பை எதிர்கொண்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு பெற்றுக் … Read more

யாழ். மாவட்ட சித்த வைத்தியசாலைக்கான புதிய கட்டடம்..

ஆயுர்வேத சித்த வைத்தியசாலையில் உள்நோயாளர்களின் யாழ்ப்பாண மாவட்ட சித்த வைத்தியசாலைக்கான புதிய கட்டடம் திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் அச்சுவேலியில் இயங்கும் மாவட்ட சித்த வைத்தியசாலையின் சேவையினை விஸ்தரிக்கும் நோக்கில் புதிய கட்டடத் தொகுதி வடமாகாண ஆளுநர் கெளரவ பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களால் (23.01.2024) திறந்துவைக்கப்பட்டது. நிகழ்வில் ‘ஆகார ஒளடதம்’ என்னும் பாரம்பாரிய உணவு தொடர்பான இறுவட்டு, ‘சித்தமருந்து செய்முறை தொகுப்பு’ எனும் நூலின் இறுவட்டும் வெளியிட்டுவைக்கப்பட்டன.

ஜனாதிபதியின் சரியான பொருளாதார வேலைத் திட்டத்தினால் நாட்டின் பொருளாதாரம் குறித்து சர்வதேச அளவில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது

புதிய பொருளாதார பார்வையுடன் அத்தியாவசிய மறுசீரமைப்புகளை ஜனாதிபதி முன்னெடுக்கின்றார் – சாகல ரத்நாயக்க. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட சரியான பொருளாதார வேலைத்திட்டத்தினால் சர்வதேச சமூகத்தில் இலங்கையின் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடிந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். நிதி, சட்டம் மற்றும் நிர்வாகத் துறைகளில் மறுசீரமைப்புகளை மேற்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த புதிய பொருளாதார பார்வையுடன் ஜனாதிபதி செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். … Read more

வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் உள்ள காணிகள், விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைக்காக மீண்டும் விடுவிக்கப்படும்

வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் உள்ள காணிகளை விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைக்காக விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார். மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் விவசாயத் துறையின் அபிவிருத்திக்காக 61 குளங்களின் புனரமைப்புப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் இவ்வாறு தெரிவித்தார். இங்கு … Read more

மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் வழங்கும் விஷேட திட்டம் மட்டக்களப்பில் முன்னெடுப்பு!!

மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் வழங்கும் விஷேட வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. ஜப்பான் சர்வதேச முகவாண்மையகம், சமூக சேவை திணைக்களம், மனித வலு மற்றும் வேலை வாய்ப்பு திணைக்களம் ஆகியவை இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் வழங்கும் விஷேட திட்டமொன்றை கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுத்து வரும் நிலையில் அதன் மற்றுமொரு கட்டம் இன்று (24) திகதி கல்லடி தனியார் விடுதியில் இடம்பெற்றது. ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவாண்மையகத்தின் திட்ட பணிப்பாளர் சிமிசூ … Read more

கொமடோர் அனில் போவத்த கடற்படையின் பதில் நிர்வாக பணிப்பாளர் நாயகமாக பொறுப்பேற்றார்

இலங்கை கடற்படையின் பதில் நிர்வாக பணிப்பாளர் நாயகமாக கொமடோர் அனில் போவத்த நேற்று (2024 ஜனவரி 23) கடற்படை தலைமையகத்தில் உள்ள பணிப்பாளர் நிர்வாக அலுவலகத்தில் பதவியேற்றார். கொமடோர் அனில் போவத்த, பதில் நிர்வாக பணிப்பாளர் நாயகமாக பதவியேற்கு முன்னர் கிழக்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதியாக பணியாற்றினார். இதன்படி, தற்காலிக பதில் நிர்வாக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய கொமடோர் இந்திக டி சில்வா, புதிய பதில் நிர்வாக பணிப்பாளர் நாயகமாக பொறுப்பேற்ற கொமடோர் அனில் போவத்தவிடம் அந்த … Read more