5500 புதிய ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக கல்வி அமைச்சரின் அறிவிப்பு

பல பாடங்களுக்கு புதிதாக 5500 ஆசிரியர்களை இணைத்துக்கொள்வது தொடர்பாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பௌதீகவியல், இரசாயனவியல், உயிரியல், கணிதம், தொழிநுட்பம் மற்றும் விசேட மொழிப் பாடங்களுக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்.. அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பணிபுரியும் 22,000 பட்டதாரிகளை ஆசிரியர்களாக உள்வாங்குவது தொடர்பான … Read more

உள்நாட்டு பால்மா உற்பத்தியை பாதுகாக்க இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது – வர்த்தக அமைச்சர்

உள்நாட்டு பால்மா உற்பத்தியை பாதுகாக்கும் நோக்கில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பால் மா இறக்குமதி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே வர்த்தக அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த வர்த்தக அமைச்சர்… உள்நாட்டு; பால்மா உற்பத்தியை பாதுகாக்கவும், பால் மா இறக்குமதியை குறைக்கும் வகையிலும் இந்த வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளன. … Read more

அடுத்த வருடம் பரீட்சைகளை தாமதமின்றி நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் – கல்வி அமைச்சர்

2025ஆம் ஆண்டுக்குள் பரீட்சைகளை தாமதமின்றி நடத்துவதற்கு தேவையான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்தி இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த நாட்களில் நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி நிறைவடையவுள்ளதாகவும், விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் தற்போது தயாராகி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த வருட உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு கடந்த வருடம் வழங்கப்பட்ட … Read more

பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளல் தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை

பாடசாலைகளில் தரம் 01 இற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால் வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக, பாடசாலைகளுக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். அதற்கமைய, அதிபர்களினூடாக நேர்முகப்பரீட்சைகள் நடாத்தப்பட்டு மாணவர்கள் உள்வாங்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் nரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை புள்ளிகளின் அடிப்படையில் மாத்திரமே, தரம் 06 க்கு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள். 2024 ஆம் ஆண்டுக்கு தரம் 01, 05 மற்றும் 06 தவிர்ந்த ஏனைய இடைநிலை வகுப்புகளுக்கு ( உயர்தரம் உள்ளிட்ட) … Read more

சமுர்த்தி ரன்விமன வீடமைப்பு திட்டத்தின் வீடு கையளிப்பு!!

கோறளைப்பற்று மத்தி மாவடிச்சேனையில் 2023ம் ஆண்டின் சமுர்த்தி திணைக்கள நிதியொதுக்கீட்டிலும் பயனாளி மற்றும் மக்கள் பங்களிப்பிலும் கட்டி முடிக்கப்பட்ட சமுர்த்தி ரன்விமன வீடு உரிய பயனாளியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், உதவிப்பிரதேச செயலாளர் எம்.ஏ.சி றமீஸா, மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளர் எம்.எஸ்.பசீர், மாவட்ட செலக சமுர்த்தி சிரேஷ்ட … Read more

“பயங்கரவாத எதிர்ப்பு” சட்டமூலம் தொடர்பான மனுக்கள்

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “பயங்கரவாத எதிர்ப்பு” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆறு மனுக்களின் பிரதிகள் தனக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (ஜன. 23) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். “நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை” சட்டமூலம் தொடர்பான மனுக்கள் அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு மனுக்களின் பிரதிகளும் தனக்குக் … Read more

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஜனவரி 23ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜனவரி 23ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா … Read more

கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை அதிகாரிகள் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்!!

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன் தலைமையில் கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை அதிகாரிகள் மாவட்ட செயலகத்தில் (22) திகதி கலந்துரையாடல் மேற்கொண்டனர். இதன் போது மாவட்டத்தில் பருவபெயர்சி மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு நஸ்டஈடு வழங்கள் தொடர்பாக விசேடமாக கலந்துரையாடப்பட்டுள்ளது. விவசாய அமைச்சினால் வெளியிடப்பட்ட காப்புறுதி சுற்று நிருபத்திற்கமைய நஸ்டஈடு மதிப்பிடப்பட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கவுள்ளதாக இதன் போது கருத்துக்களை தெரிவித்தனர். இதனை முன்னிட்டு மாவட்டத்தில் கமநல நிலையங்களில் பதியப்பட்ட … Read more

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தினரால் மகஜர் கையளிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் வயல் அழிவிற்கான இழப்பீடு கிடைக்க ஆவன செய்யக்கோரி இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தினால் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் அவர்களிடம் மகஜர் ஒன்று நேற்று (22) கையளிக்கப்பட்டது. இன்றைய தினம் காலை 10.00 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு சென்ற விவசாயிகள் தமக்கு காலபோக நெற் செய்கையில் ஏற்பட்டுள்ள நட்டத்திற்கு இழப்பீடு வழங்க கோரியே ஜனாதிபதிக்கான மகஜரை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தனர். மேலும், குறித்த மகஜரின் பிரதி கடற்றொழில் … Read more

ஜனாதிபதி பணிப்புரையில் மொபிடெல் உபகார பெகேஜ் சலுகைகள் தொடர்ந்தும்

அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் இந்த நன்மை வழங்கப்படும். மொபிடெல் நிறுவனத்தினால் அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்கப்படும் உபகார பெகேஜை, புதிய சலுகைகளுடன் மீண்டும் வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, இதன் பயனை அனைவருக்கும் வழங்குமாறும், அந்த சலுகை பெகேஜை அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவுசெய்துள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி,மேலும் பணிப்புரை … Read more