“சீகல்” பயிற்சி 2024 வெற்றிகரமாக நிறைவு

வடக்கு கடல் பகுதியில் யாழ் குடாநாட்டு பாலைத்தீவில் “சீகல்” எனும் நீர் பயிற்சி ஜனவரி 08 – 11 வரை முப்படையினரின் பங்கேற்புடன் இடம்பெற்றது. இந்த பயிற்சியில் படையினருக்கு நீர் பணி படையைத் தூண்டுதல், கடற்கரையை கைப்பற்றல் மற்றும் பாதுகாத்தல், முக்கியப் படையை தரையிறக்குதல், எதிர் படையை நடுநிலையாக்குதல், பணயக்கைதிகளை மீட்டல், உயிரிழந்தவர்களை வெளியேற்றுதல் மற்றும் அனர்த நிவாரணத்திற்காக மனிதாபிமான உதவிகளை வழங்குதல் போன்றன பயிற்சிகள் வழங்கப்பட்டன. இராணுவத்தின் 42 அதிகாரிகள் மற்றும் 360 சிப்பாய்கள், கடற்படையின் … Read more

கலேவெல பொது மைதானம் இராணுவத்தினரால் மாற்றியமைப்பு

கலேவெலயில் புனரமைக்கப்பட்ட பொது விளையாட்டு மைதானம் 21 ஜனவரி 2024 ம் திகதியன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பதில் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன், மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜானக பண்டார தென்னகோன், மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ ஆகியோர் கலந்துகொண்டனர். பொது மைதானத்தை புனரமைப்பதற்கான திட்டத்தை கௌரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்களினால் இராணுவ தளபதிக்கு விடுத்த … Read more

இராணுவ புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கமைய பொலிஸாரினால் கஞ்சா கைப்பற்றல்

இலங்கை இராணுவத்தின் இராணுவ புலனாய்வு படையணி படையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் 2024 ஜனவரி 21 ஆம் திகதி யால வனப் பகுதியில் 220 கிலோ கிராம் கஞ்சாவை கொனகனார பொலிஸார் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட 220 கிலோ கஞ்சா உடனடியாக அந்த இடத்திலேயே அழிக்கப்பட்டது. விசாரணைகளை முன்னெடுத்த கொனகனார பொலிஸ் நிலையம் சட்டவிரோத நடவடிக்கையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

91% குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது – கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண

இந்நாட்டில் 91% குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண தெரிவித்தார். தட்டம்மை நோய் இந்நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள போதிலும், கடந்த காலங்களில் தட்டம்மை நோய் மீண்டும் தலைதூக்கியதையடுத்து, இவ்வாறான தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரமேஷ் … Read more

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஜனவரி22ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜனவரி 21ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. வடமத்தியஇ கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய … Read more

மட்டக்களப்பில் விதாதா செயற்திட்ட விசேட கலந்துரையாடல்

2024ம் வருடத்திற்கான விதாதா செயற்திட்ட விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று 22 திகதி இடம் பெற்றது. கைத்தொழில் அமைச்சின் விதாதா பிரிவின் மேலதிக செயலாளர் ஏ.லக்கதாஸ் பங்குபற்றுதலுடன் கலந்துரையாடல் இடம் பெற்றது. மாவட்டத்தின் பிரதேச விதாதா வள நிலையங்களினால் செயற்படுத்தி வரும் செயல் திட்டங்கள் தொடர்பாக இதன் போது கருத்துக்கள் பரிமாறப்பட்டது. விதாதா நிலையத்தினால் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்தல், … Read more

பாராளுமன்றத்தில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து வன்முறைகள் இடம்பெற்று வருவதாகவும், அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனவும் வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை

பாராளுமன்றத்தில் பெண் ஊழியர்களுக்கும் ஒரு சில பெண் உறுப்பினர்களுக்கும் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெற்று வருவதாகவும், அது தொடர்பில் உரிய விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்றும் வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அறிவித்துள்ளார்.   பாராளுமன்றத்தில் ஒழுக்க மீறல் சம்பவங்களின் போது, அது தொடர்பான விசாரணைகள் கௌரவ சபாநாயகரின் வழிகாட்டுதலின் கீழ் மிகவும் பக்கச்சார்பற்ற முறையில் மேற்கொள்ளப்படுவதாகவும், விரைவான விசாரணைகளுக்கு சபாநாயகர் தனது அதிகபட்ச பங்களிப்பை வழங்குவதாகவும், … Read more

1626 மில்லியன் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான 65 கிலோவிற்கும் அதிக ஹெரோயின் போதைப்பொருள் தெற்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

தேவுந்தர முனையிலிருந்து சுமார் 100 கடல் மைல் (சுமார் 185 கி.மீ) தொலைவில் உள்ள தெற்கு கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 65 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் கொண்ட (பொதி எடையுடன்) இலங்கையின் பல நாள் மீன்பிடிக் கப்லொன்று (01) மற்றும் அதற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு பல நாள் மீன்பிடிக் கப்பலொன்றும் பதினொரு (11) சந்தேக நபர்களும் (2024 ஜனவரி 20) கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் அச்சுறுத்தலை … Read more

ஜனாதிபதி மற்றும் பாலஸ்தீன வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கிடையே சந்திப்பு

பாலஸ்தீன அரசுக்கான இலங்கையின் உறுதிப்பாட்டை ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தினார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பாலஸ்தீன வெளிவிவகார மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பான அமைச்சர் கலாநிதி ரியாட் மல்கிக்கும் (Dr. Riyad Malki இடையிலான சந்திப்பொன்று நேற்று (21) நடைபெற்றது. உகண்டாவின் கம்பாலா நகரில் நேற்று (21) ஆரம்பமான “G77 மற்றும் சீனா” 3 ஆவது தென் துருவ மாநாட்டுடன் இணைந்ததாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போது, காஸா பகுதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், … Read more

இலங்கை – உகண்டா ஜனாதிபதிகளுக்கிடையில் சந்திப்பு

சரிவிலிருந்து இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் தலைமைத்துவத்திற்கு உகண்டா ஜனாதிபதி பாராட்டு. உகண்டாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் உகண்டா ஜனாதிபதி யொவேரி முசேவேனி (Yoweri Museveni) ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு (20) பிற்பகல் நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிநேகபூர்வமான வரவேற்பளித்த உகண்டா ஜனாதிபதி, சிறிது நேரம் சுமூகமாக கலந்துரையாடிய பின்னர் இரு நாட்டு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தையை ஆரம்பித்தனர். தனது அழைப்பையேற்று வருகைத் தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு … Read more