கிளிநொச்சியில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி மகளிர் விவகார அமைச்சினால் வழங்கி வைப்பு!
வட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சினால் கிளிநொச்சியில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித் திட்டங்கள் கடந்த வெள்ளிக்கிழமை(19) வழங்கி வைக்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த பதினொரு பயனாளிகளுக்கு குறித்த உதவித்திட்டங்கள் … Read more