அரச ஊழியர்களுக்கு ஜனவரி முதல் 5,000 ரூபா கொடுப்பனவு..

அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படுவதாக இருந்த, வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 10,000 ரூபாவிலிருந்து 5,000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குனவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.   இது தொடர்பான அமைச்சரவைத் தீர்மானம் வருமாறு… … Read more

TIN இலக்கம் தொடர்பான பிரச்சினைகளுக்கு பிரதேச செயலகத்தின் ஊடாக தீர்வுகாணப்படும்

தமக்கு TIN இலக்கம் கிடைக்காவிடின் அல்லது இலக்கத்தைப் பெறுவதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் மாகாண உள்நாட்டு இறை வரித் திணைக்களத்திற்கு அல்லது பிரதேச செயலகத்திற்கு அறிவிக்க முடியும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (09) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் … Read more

இலங்கையில், விஞ்ஞான தொழிநுட்பவியல் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவ அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கையில், விஞ்ஞான தொழிநுட்பவியல் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி; பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (09) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   இது தொடர்பான அமைச்சரவைத் தீர்மானம் வருமாறு…   01. விஞ்ஞான தொழிநுட்பவியல் பல்கலைக்கழகத்தை நிறுவுதல்    புதிய … Read more

சாரணர் இயக்கத்தின் அங்கத்துவத்தை 15,000 ஆக அதிகரிப்பதே இவ்வருடத்தின் இலக்கு

சாரணர் இயக்கத்தின் அங்கத்துவத்தை 15,000 ஆக அதிகரிப்பதே இவ்வருடத்தின் இலக்கு என்று இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதம சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி ஜனப்ரித் பெனாண்டோ தெரிவித்தார்.  

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் மாபெரும் பொங்கல் திருவிழா

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானை,1500 பரத நாட்டிய கலைஞர்கள்,500 கோலங்களுடன் பொங்கல் விழா. இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானையுடன் ,1500 பரத நாட்டிய கலைஞர்களுடன்,500 கோலங்களுடன் பொங்கலை வரவேற்கும் முகமாக மாபெரும் பொங்கல் திருவிழா கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் நேற்று (08) திருகோணமலை மக்கேசர் விளையாட்டரங்கில் இடம்பெற்றது. பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் இலங்கை வரலாற்றில் முதல் … Read more

பங்களாதேஷின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷேக் ஹசீனாவுக்கு ஜனாதிபதி வாழ்த்து

பங்களாதேஷிற்கும் இலங்கைக்கும் இடையிலான நெருக்கமான நட்புறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி. பங்களாதேஷில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஷேக் ஹசீனாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஷேக் ஹசீனாவுக்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பங்களாதேஷ் மக்களுக்கு ஷேக் ஹசீனா வழங்கிய சேவையும் தொலைநோக்கு பார்வையும் கொண்ட தலைமைத்துவமே இந்த மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார். ஷேக் … Read more

பொருளாதார வளர்ச்சிக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது

யுத்தத்தின் போது இழந்த வருமானத்தை வடக்கிற்கு மீள வழங்குவதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்போது மதத் தலைவர்கள் ஆற்றக்கூடிய பங்கு மகத்தானது. அனைத்து மதம் தொடர்பிலும் செயற்பட ஆலோசனைக் குழு. யாழ்ப்பாணம் – தெற்கு கைலாயத்தை மையமாகக் கொண்ட இந்து மத மேம்பாட்டுத் திட்டம் -ஜனாதிபதி. மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு வடக்கின் மதத் தலைவர்களின் ஆசி. பொருளாதார அபிவிருத்திக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி ரணில் … Read more

தடகளப் போட்டிகளில் சர்வதேச அளவில் பல சாதனைகளைப் படைத்த அகிலா திருநாயகி ஜனாதிபதியை சந்தித்தார்

ஜனாதிபதிக்கும் வடக்கில் உள்ள பனை கைத்தொழிற்துறையினருக்கும் இடையில் சந்திப்பு – பனை கைத்தொழில் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதியினால் குழு. வடமாகாண சட்டத்தரணிகள் சங்கமும் ஜனாதிபதியுடன் சந்திப்பு. பொருளாதாரத்தை சரியான திசையில் கொண்டு செல்ல பிரபலமல்லாத எந்த ஒரு முடிவையும் எடுக்கத் தயார்- யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஐ. தே. க செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி வலியுறுத்தினார். 5000 மீற்றர் மற்றும் 1500 மீற்றர் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களையும் 800 மீற்றர் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தையும் வென்ற … Read more

கொழும்பு இளைஞர் பௌத்த சங்கத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழா ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது

நிகழ்காலத்தை விட எதிர்காலம் தொடர்பில் கவனம் செலுத்தி அனைவரும் ஒரே இலங்கை நாட்டவர்களாக முன்னேற வேண்டும் – ஜனாதிபதி. அனைத்து குடிமக்களையும் உள்ளடக்கி சமூக, கலாசார, சமய மற்றும் கல்வி ரீதியாக நாட்டில் வலுவான அடித்தளத்தை உருவாக்க முன்னோடியாகப் பணியாற்றியவர் மறைந்த டி.பி. ஜயதிலக்க முன்னெடுத்தது போன்ற வேலைத்திட்டமொன்று நாட்டுக்கு அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். நிகழ்காலத்தை விட எதிர்காலத்தில் கவனம் செலுத்தி ஒரே இலங்கையர்களாக அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் எனவும் ஜனாதிபதி … Read more

“வித்யோதயா இலக்கிய விருது விழா 2023” இருக்கான படைப்புக்களை ஏற்றுக்கொள்ளல்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மனித நேயம் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் வெளியீட்டுக் குழுவின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட “வித்யோதய இலக்கிய விருது விழா 2024” இற்காக 2023ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட படைப்புக்களை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்படைப்புக்கள் பெப்ரவரி 28ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவிருப்பதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மனித நேயம் மற்றும் சமூக விஞ்ஞான பீட பீடாதிபதி பேராசிரியர் ஷிரந்த ஹின்கெந்த இன்று (08) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் … Read more