ஆபத்தான நிலையில் இருந்த நாட்டின் பொருளாதாரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சரியான பாதையில் செலுத்தினார் – அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன

சுதந்திரத்தின் பின்னர் ஆபத்தான நாட்டின் பொருளாதாரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட அரசாங்கத்தினால் 20 23 இல் மீண்டும் சரியான பாதையில் வைக்கப்பட்டதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பேராசிரியர் பந்துல குணவர்தன (02) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது தெரிவித்தார். புது வருடம் மிகவும் தீர்மானமிக்க ஆண்டாவதுடன் தற்போதைய பொருளாதார சவால்கள் 2027 வரை காணப்படும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் … Read more

மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் டெங்கு ஒழிப்பு மற்றும் அது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில் வெற்றி

பங்களித்தவர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு. மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் டெங்கு ஒழிப்புக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திடடங்களின் முன்னேற்றம் தொடர்பிலான மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டலை பின்பற்றி முப்படையினர் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் டெங்கு தொற்று அதிகமான காணப்படும் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு டெங்கு ஒழிப்பு மற்றும் அதுகுறித்த விழிப்புணர்வு … Read more

எரிபொருள் இல்லாத, உரம் இல்லாத, வீழ்ச்சியடைந்த பொருளாதார யுகத்திற்கு திரும்பிச் செல்ல முடியாது

2025 இல் 5% பொருளாதார வளர்ச்சியை அடைய, நாம் உடன்பாட்டுடன் பயணிக்க வேண்டும். பணம் அச்சடிப்பதும் அரச வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதும் ரூபாயின் மதிப்பை மீண்டும் குறைக்கும். பல தியாகங்களுக்கு மத்தியில் உருவாக்கிய நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை மாற்றியமைக்க முடியாது. சிரமங்களுக்கு மத்தியிலும் எதிர்காலத்தில் மக்களுக்கு சாத்தியமான அனைத்து நிவாரணங்களையும் வழங்குவோம். கைவினைத் துறையை விரைவில் அந்நியச் செலாவணி ஈட்டும் துறையாக மாற்ற வேண்டும் – கைப்பணி விருது வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. எரிபொருள் இல்லாத, … Read more

சிம்பாப்வே அணியுடனான ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியின் பெயர் பட்டியல்

சிம்பாப்வே அணியுடனான ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான 17 வீரர்கள் கொண்ட இலங்கை அணியின் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் தலைவராக குசல் மெண்டிஸ், உப தலைவராக சரித் அசலங்க, பெத்தும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, சஹன் ஆரச்சிகே, நுவனிது பெர்னாண்டோ, தசுன் ஷானக, ஜனித் லியனகே, மஹிஷ் தீக்ஷன, டில்ஷான் மதுஷங்க, துஷ்மந்த சமிர, துனித் வெல்லாலகே, பிரமோத் மதுஷான், ஜெப்ரி வென்டசே, அகில தனஞ்சய மற்றும் வனிது ஹசரங்க ஆகியோர் … Read more

புதிய வருடத்தில் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஜனவரி 09ஆம் திகதி

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை புனரமைப்பு செய்யப்படாமல் மக்கள் பாவனைக்கு உதவாத வகையில் காணப்படும் வீதிகளை அபிவிருத்தி செய்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் உயர் மட்ட அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளீதரன் அவர்களின் எற்பாட்டில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (03) திகதி நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தினை … Read more

கால நிலைமாற்றம் பொருளாதார நெருக்கடி ஆகிய சவால்களுக்கு ஈடு கொடுக்கும் வகையிலான சமூக பொருளாதார உணவு உற்பத்தித் திட்டம் அமுல்

கால நிலைமாற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகிய சவால்களுக்கு ஈடு கொடுத்துத் தாக்குப் பிடிக்கும் வகையில் சமூக பொருளாதார உணவு உற்பத்தித் திட்டம் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் வாகரை, வெருகல், சேருவில, மூதூர் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் அந்தந்தப் பிரதேச செயலாளர்களின் பங்குபற்றுதலுடன் (01) ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் 20ஆயிரம் மரங்களை நடும் இத்திட்டத்தின் கீழ் காலநிலை மாற்ற சவால்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தென்னை, தேக்கு, இலுப்பை உள்ளிட்ட நீண்ட காலப் பயன்தரும் … Read more

இலங்கை-பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலர்கள் தலைமையில் இலங்கை-பாகிஸ்தான் நான்காவது பாதுகாப்பு கலந்துரையாடல் ஆரம்பம்

இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் நான்காவது இலங்கை-பாகிஸ்தான் பாதுகாப்பு கலந்துரையாடல் நேற்று (ஜனவரி 03) ஜயவர்தனபுரயிலுள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் நடைபெற்றது. இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையில் இலங்கை பிரதிநித்துவப்படுத்தி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமை தாங்கியதுடன், பாகிஸ்தான் பிரதிநித்துவப்படுத்தி அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ஹமூத் உஸ் ஸமான் கான் தலைமை வகித்தார். கடந்த பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளின் முன்னேற்றம் குறித்து இரு தரப்பும் விரிவாக ஆராய்ந்ததுடன், … Read more

பாதுகாப்பு அமைச்சின் புதிய பதில் மேலதிக செயலாளர் – (பாதுகாப்பு) நியமனம்

பாதுகாப்பு அமைச்சின் புதிதாக நியமிக்கப்பட்ட பதில் மேலதிகச் செயலாளர் – (பாதுகாப்பு) திரு.ஹர்ஷ விதானாராச்சி 2024 ஜனவரி 01ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார் இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட தர அதிகாரியான திரு. விதானாராச்சி, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது சேவையில் பல அமைச்சுக்களிலும், சுவீடனில் உள்ள இலங்கைத் தூதரகத்திலும் பணியாற்றியுள்ளார். இந்த நியமனத்தை பொறுப்பேற்பதற்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராக (பாதுகாப்பு) பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவதற்கு நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் ஆற்றிய பங்களிப்புக்காக பிரதமர் தினேஷ் குணவர்தன பாராட்டு

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும், தனது பதவிக்காலம் முடிவடைந்து நாடு திரும்பும் நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்பள்டனுக்கும் இடையிலான சந்திப்பொன்று 2024.01.02 அன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. நியூசிலாந்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை விரைவில் மீண்டும் திறக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். கொவிட்-19 இன் சவால்கள் மற்றும் முன்னெப்போதுமில்லாத பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை குறிப்பிடத்தக்க வகையில் மீண்டுள்ளதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். 3 வருடங்களுக்கு முன்னர் தாம் இலங்கைக்கு வந்த போது, நாடு … Read more

பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் லெப்டினன் ஜெனரல் (ஓய்வு) ஹமூத் உஸ் சமான் கான் (Lt Gen (Retired) Hamood uz Zaman Khan) நேற்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். பாதுகாப்பு தலைமையகத்தில் நேற்று (03) நடைபெற்ற மூன்றாவது இலங்கை – பாகிஸ்தான் பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக அவர் இலங்கை வந்துள்ளார். பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை சிநேகபூர்வமாக வரவேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். … Read more