2024 முதல் காலாண்டு முடிவில், மக்கள் மீதான சுமை 75% குறைக்கப்படும் -வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்ணான்டோ

2024ஆம் ஆண்டை சாதகமான பொருளாதார வேகத்துடன் ஆரம்பிப்பதன் காரணமாக இந்த வருடத்தின் முதல் காலாண்டு இறுதிக்குள் மக்கள் மீதான சுமை 75% குறைக்கப்படும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்ணான்டோ தெரிவித்தார். நுகர்வோர் அதிகார சபைக்கான வேலைத்திட்டம் இவ்வருடத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என்றும் அதனால் நுகர்வோர் உரிமைகள் மேலும் பாதுகாக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (03) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் நலின் பெர்ணான்டோ இவ்வாறு … Read more

ஜனவரி 06 ஆம் திகதி முதல், 6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு சின்னமுத்து தடுப்பூசி மேலதிக டோஸ்…

தெரிவு செய்யப்பட்ட 09 மாவட்டங்களில் 6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு சின்னமுத்து தடுப்பூசி மேலதிக டோஸ் ஒன்றை வழங்கும் தேசிய வேலைத்திட்டம் ஜனவரி 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் பிரதம தொற்றுநோய் நிபுணர் சமித்த கினிகே தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று (03) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐரோப்பிய மற்றும் தெற்காசிய நாடுகள் உள்ளிட்ட உலகில் உள்ள … Read more

கிழக்கு, ஊவா மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த 2 நாட்களில் குறைவடையும் சாத்தியம்..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஜனவரி 03ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜனவரி 02ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த 2 நாட்களில் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா … Read more

சாமரி நியூசிலாந்தில் தனது சகலதுறை ஆட்டத்தையும் வெளிப்படுத்தினார்

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் Super Smash Twenty – 20 லீக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவி சாமரி அத்தபத்து, தான் பங்கேற்ற முதல் போட்டியிலேயே தனது சகலதுறை ஆட்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். வெலிங்டன் அணிக்கெதிராக நேற்று மவுன்ட் மௌங்கானுவில் நடைபெற்ற போட்டியில் சாமரி அதபத்து 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 19 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்தார். அவர் 2 கேட்ச்களை காப்பாற்றி 16 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 19 ஓட்டங்களை … Read more

JN 1 புதிய கொவிட் பிறழ்வு குறித்து அவதானத்துடன் இருக்கின்றோம்

கொவிட் காலத்தில் பின்பற்றிய முறையான சுகாதார நடைமுறைகளை மீண்டும் பின்பற்றவும். அடுத்த வாரம் முதல் தட்டம்மையை கட்டுப்படுத்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை – கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண. இந்தியாவில் பதிவாகியுள்ள JN 1 புதிய கொவிட் பிறழ்வு தொடர்பில் சுகாதார அமைச்சு தொடர்ந்து அதானத்துடன் இருப்பதாகவும், இதுவரை நடத்தப்பட்ட மாதிரிப் பரிசோதனைகளில் இலங்கையில் எந்த ஒரு நோயாளியும் பதிவாகவில்லை என்றும் கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்தார். இருப்பினும், கடந்த … Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம்; அனர்த்தத்தினால் 7225 பேர் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வட கீழ் பருவப் பெயர்ச்சி மழையின் தொடராக பெய்து வரும் மழையினால் கடந்த 48 மணித்தியாலங்களின் மாவட்டத்திலுள்ள குளங்கள், ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்ததுடன், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் நிறைந்துள்ளதை அவதானிக்கலாம். நேற்றுமுன்தினம் (01) பிற்பகல் இரண்டு மணியளவில் பெய்யத் தொடங்கிய மழை தொடர் மழை நேற்று (02) காலை ஆறு மணியளவில் ஓய்ந்தது. நேற்றுமுன்தினம் முதல் நேற்று காலை வரையிலான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 164.9மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது. இதனால் மாவட்டத்தின் மண்முனை … Read more

வடக்கு புகையிரதப் பாதையில் மஹாவாயிலிருந்து ஓமந்தை வரை சீர்திருத்தப்பணிகள் ஜனவரி 07 முதல் ஆரம்பம்

வடக்கு புகையிரதப் பாதையைத் திருத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மஹாவாயிலிருந்து ஓமந்தை வரை ஒரு பகுதியைத் திருத்தும் பணிகள் ஜனவரி 7ஆம் திகதி ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.   அங்கு சீர்திருத்தப்பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் அனுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதியில் இடம்பெறும் சமய சடங்குகளில் பங்கேற்பதற்காக கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை புகையிரதத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன மஹாவ புகையிரத நிலையத்தில் விசேட விஜயமொன்றில் கலந்துகொண்டு பயணித்தார். இதன்போது … Read more

மகாவெளி கங்கையின் நீர் மட்டம் மீண்டும் அதிகரிப்பு – மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது

மீண்டும் மகாவெளி கங்கையின் நீர் மட்டம் 5.31 மீற்றர் வரை உயர்ந்துள்ளமையினால் மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதி மறு  அறிவித்தல் வரை கல்லேல்லயிலிருந்து மன்னம்பிட்டி வரையான பகுதி முற்றாக மூடப்பட்டுள்ளதாக பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு  அறிவித்துள்ளது. இதனிடையே பொலன்னறுவை தொடக்கம் மன்னம்பிட்டி வரை புகையிரத சேவை நேற்று பிரதான வீதியில் பஸ் போக்குவரத்து மேற்கொள்ளக்கூடியதாக இருந்ததனால் தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஆனால் இன்று (02) மீண்டும் மகாவெளி கங்கை நீர் மட்டம் … Read more

அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் 2024 புது வருடத்தில் தமது பணிகளை(01) ஆரம்பித்தனர்

அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் திணித் சிந்தாக கருணாரத்னவின் தலைமையில் அனைத்து திணைக்களத்தின் சகல உத்தியோகத்தர்களும் ஒன்றுகூடியதுடன் அங்கு பணிப்பாளர் நாயகத்தினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் பாடப்பட்டு, அரச சேவை சாத்தியப்பிரமாணத்தையும் வாசித்தனர்.   இதன்போது உரையாற்றிய அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் திணித் சிந்தாக கருணாரத்ன புது வருடம் அரசங்கத் தகவல் திணைக்களத்திற்கு விசேட பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படும் வருடம் எனக் குறிப்பிட்டார். சவால்களை வெற்றி கொள்வதற்கும், சந்தோசமாகவும், ஒத்துழைப்புடனும், வினைத்திறனாக செயற்பட உதவும் புதுவருடமாகட்டும் … Read more

சரியான தீர்மானங்களுடன் 2024 ஆம் ஆண்டில் நாட்டை துரித வளர்ச்சிக்கு இட்டுச் செல்வோம்

சரியான தீர்மானங்களுடன் 2024 ஆம் ஆண்டில் நாட்டை துரித வளர்ச்சிக்கு இட்டுச் செல்வோம் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதற்கான கடினமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு துரித நிவாரணத்தை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – விமானப்படை தலைமையகத்தை திறந்து வைத்து ஜனாதிபதி உரை. சரியான தீர்மானங்களுடன் இவ்வருடத்திற்குள் இலங்கையை துரித பொருளாதார அபிவிருத்தியை நோக்கி கொண்டுச் செல்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். அதற்குத் தேவையான கடினமாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், நாட்டின் நலன் கருதிய தீர்மானங்களையே தாம் மேற்கொண்டிருப்பதாகவும், … Read more