மலையகத் தமிழ் சமூகத்திற்கான அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்த நடவடிக்கை

இந்நாட்டின் தேசியப் பொருளாதாரத்திற்கு முன்னணிப் பங்காற்றுகின்ற மலையகத் தமிழ்ச் சமூகத்தின் சமூகப் பொருளாதார மற்றும் கலாசார வாழ்வியலை மேம்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை உடனடியாக நிறைவேற்றி அதன் பலன்களை மக்களுக்கு கூடிய விரைவில் வழங்க வேண்டும் என சுற்றாடல், வனசீவராசிகள், வனவளங்கள், நீர்வழங்கல், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் (23) மாலை உரிய நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் பி.கே.பிரபாத் சந்திரகீர்த்தியும் … Read more

பாதுகாப்பு குழுக்களின் பிரதானி, இராணுவ தளபதி, கடற்படை தளபதி மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பு.

பாதுகாப்பு குழுக்களின் பிரதானி ஷவேந்த்ர சில்வா, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே, கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று (24) காலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. புதிய பிரதமரின் நியமனத்தின் பின்னர் பாதுகாப்பு பிரதானிகளை சந்தித்த முதற் சந்தர்ப்பம் இதுவாகும். பிரதமர் ஊடக பிரிவு

நாட்டின் பல பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஒக்டோபர் 25ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஒக்டோபர் 24ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் … Read more

வவுனியா மாவட்டத்தில் 25 231.29 ஹெக்டேயர்களில்   பெரும்போக நெல் செய்கை 

வவுனியா மாவட்டத்தில் இவ்வருட  பெரும்போகத்தில் 25 231.29 ஹெக்டேயர்களில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட செயலாளர் திரு.பி.ஏ.சரத்சந்ர தெரிவித்துள்ளார்.  மாவட்டத்தில் உரிய நேரத்தில் மழை பெய்ததால், நெல் விதைப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது. வவுனியா, வவுனியா தெற்கு, நெடுங்கேணி, செட்டிக்குளம் ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பெரும்போக நெல் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத் தேர்தல் 2024 : வாக்காளரைப் பரிசோதித்தலும் தோதான குறியீட்டை இடுதலும்

2024 பாராளுமன்ற தேர்தலின் போது தோதான குறியீட்டை இடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள விடயம் குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. 2024.09.21 ஆம் திகதி நடைபெற்ற சனாதிபதித் தேர்தலின் போது ஏற்கெனவே வாக்காளரின் இடது கை சுண்டு விரலில் தோதான குறியீடு இடப்பட்டுள்ளமையாலும், அத்துடன் 2024.10.26 ஆந் திகதி நடாத்தப்படவுள்ள அல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வாக்காளர்களின் இடது கைப் பெருவிரலில் தோதான குறியீடு இடுவதற்கு உள்ளமையாலும், 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் … Read more

பாதுகாப்பு குழுக்களின் பிரதானி, இராணுவ தளபதி, கடற்படை தளபதி மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பு

.பாதுகாப்பு குழுக்களின் பிரதானி ஷவேந்த்ர சில்வா, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே, கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று (24) காலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. புதிய பிரதமரின் நியமனத்தின் பின்னர் பாதுகாப்பு பிரதானிகளை சந்தித்த முதற் சந்தர்ப்பம் இதுவாகும். பிரதமர் ஊடக பிரிவு2024.10.24

அரச சேவையில் செயற்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த அரச சேவை டிஜிட்டல்மயப்படுத்தப்பட வேண்டும்

அரச சேவையில் செயற்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்கு அரச சேவை டிஜிட்டல்மயப்படுத்தப்பட வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். நேற்று (23) மாலை கொழும்பில் இடம்பெற்ற இலங்கை தகவல் தொழில்நுட்ப பட்டய நிறுவனத்தின் 26ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தகவல் தொழில்நுட்ப தேசிய விருது வழங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இலங்கையை டிஜிட்டல்மயப்படுத்தும் தொலைநோக்கு பார்வை … Read more

மாத்தறை தாதியர் கல்லூரிக்கு 167 மில்லியன் ரூபா செலவில் நான்கு மாடிகளைக் கொண்ட விரிவுரை மண்டபங்கள்..

சுகாதார அமைச்சின் 167 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மாத்தறை தாதியர் கல்லூரியில் (Nilwala College of Nursing) நவீன வசதிகளுடன், தாதியர் கல்வி நடவடிக்கைகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட நான்கு மாடிகளைக் கொண்ட விரிவுரை மண்டபங்கள் நேற்று (23) திறந்து வைக்கப்பட்டது. மாத்தறை தாதியர் கல்லூரியின் அபிவிருத்திக்காக சுகாதார அமைச்சினால் 410 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் செயற்திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் அதன் பயனாக இந்த நான்கு மாடிகளை கொண்ட விரிவுரை மண்டபங்கள் இன்று சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர். … Read more

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் மாரி-நொயில் டூரிஸ் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு..

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் மாரி-நொயில் டூரிஸ் நேற்று (23) பிரதமர் அலவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தார். இதன்போது இடம்பெற்ற கலந்துரையாடலில் இலங்கையுடனான பிரான்சின் நீண்டகால நட்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கைக்கு தொடர் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இந்த கலந்துரையாடலில் இலங்கை மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவின் 75 வருட ஆண்டு நிறைவு குறித்தும் விசேடமாக கருத்து வெளியிடப்பட்டதுடன் இரு நாடுகளுக்குமிடையிலான பல்வேறு துறைகள் சார்ந்த ஒத்துழைப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

துல்லியமான தகவல்களை வழங்குவதனூடாக 2024 குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்புக்கு ஆதரவளியுங்கள் – தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

வீடுகளுக்கு வரும் தொகைமதிப்பு கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு துல்லியமான தகவல்களை வழங்குவதனூடாக 2024 குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்புக்கு ஆதரவளிக்குமாறு தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டீ.டீ.ஜீ.ஏ. செனவிரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி ‘தொகை மதிப்பு தினம்’ என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கையின் தொகைமதிப்பு வரலாற்றில் முதற் தடவையாக … Read more