நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு நுவரெலியாவின் அதிகபட்ச பங்களிப்பினை பெற்றுக்கொள்வதற்கு புதிய வேலைத்திட்டம்

நகரத்திற்கு நீர் முகாமைத்துவம் மற்றும் குடிநீர் பிரச்சினைக்கு நிலையான தீர்வை வழங்குவதற்கு ஜனாதிபதி அறிவுரை. உயர்ந்த கட்டிடங்களுக்கு மாறாக ரம்மியமான சூழலுடன் நுவரெலியாவை அபிவிருத்தி செய்ய வேண்டும். சம்பிரதாய முறைமைகளை விடுத்து நாட்டிற்கு அவசியமான புதிய வேலைத்திட்டத்திற்காக அனைவரும் ஒன்றிவோம் -ஜனாதிபதி தெரிவிப்பு. நான்கு வருடங்களுக்குள் இந்நாட்டின் ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கான பிரதான சுற்றுலா நகரமாக காணப்படும் நுவரெலியாவின் அதிகபட்ச பங்களிப்பினை பெற்றுக்கொள்ளவதற்கான திட்டமிடலுடன் வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அதிகாரிகளுக்கு … Read more

மலையகத்திற்கு பல்கலைக்கழகம் – ஜனாதிபதி உத்தரவு

மலையகத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார் என்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாவட்ட செயலகத்தில் நேற்று (10) நடைபெற்றது. இதன்போது, பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் நான் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை விடுத்தேன். அதற்கினங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார் … Read more

இரு அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் மற்றும் தூதுவர் ஒருவரின் நியமனத்துக்குப் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி

இரண்டு அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் மற்றும் புதிய தூதுவர் ஒருவரின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி அண்மையில் (06) கிடைத்திருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார். இதற்கமைய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் புதிய செயலாளராக டபிள்யூ.எஸ். சத்யானந்தாவின் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது. அத்துடன், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் புதிய செயலாளராக எம்.எம். நைமுதீனின் நியமனத்துக்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி … Read more

விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு

இம்முறை பெரும்போகத்தில், விவசாயிகள் பயிரிட்ட சோளம், விவசாயிகளிடம் கையிருப்பில் இருப்பதனால், அவற்றை உடனடியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கமத்தொழில் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது சோளத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மீண்டும் சோளத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சோளத்தின் விலை உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் சில விவசாயிகள் அவற்றை களங்சியப்படுத்தி வைத்திருந்தாலும், சோளம் இறக்குமதி செய்தால் அதன் விலை குறைவடையலாம். எனவே, தற்போது சோளத்திற்கு நல்ல விலை கிடைத்துள்ளதால், விவசாயிகள் தமது கையிருப்பில் உள்ள … Read more

கச்சத்தீவை மீட்பதே தமது முதன்மையான நிகழ்ச்சி நிரல்: தமிழக அரசாங்கம்

கச்சத்தீவை மீட்பதே தமது முதன்மையான நிகழ்ச்சி நிரல் என்று தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளது. நேற்றைய தினம் (05.04.2023) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் கலந்து கொண்ட தமிழகத்தின் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், கச்சத்தீவை மீட்பதும், பாரம்பரிய மீன்பிடியை மீட்டெடுப்பதும் தமிழக அரசின் முதன்மையான செயல்திட்டமாக இருக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் தமிழக கடற்றொழிலாளர்கள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை கடக்கிறார்கள் என்று காரணத்தைக் காட்டி இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது … Read more

திருமண கனவில் இருந்த யுவதி – எதிர்பாராத வகையில் பறிக்கப்பட்ட உயிர்

கொழும்பு – கண்டி செல்லும் பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தானை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ரசாஞ்சலி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காதலனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற வேளையில் எதிர்பாராத விதமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தேவையின் நிமித்தம் வீதி ஓரத்தில் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளிற்கு அருகில் நின்ற யுவதி உயிரிழந்துள்ளார். ​​ அதிவேகமாக கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளின் அருகில் நின்றிருந்த யுவதி … Read more

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு!கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

இலங்கையில் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புக்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும், தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு கல்விமானிப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சில பகுதிகளுக்கு அனுமதி இல்லை இதற்கமைய, வடக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ, தென் மற்றும் மேல்மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக கல்விமானிப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் 2023 … Read more

சித்திரை புத்தாண்டில் ராஜ யோகத்தில் மிதக்க போகும் 8 ராசிக்காரர்கள்! பல நன்மைகளுடன் வெளியான ராசிப்பலன்

சித்திரை மாதம் என்பது தமிழ் மாதங்களில் முதல் மாதம் என்பதால் அம்மாதப் பிறப்பை தமிழர்கள் புத்தாண்டு தினமாக கொண்டாடுகின்றார்கள். சூரியன் மேஷ இராசிக்குள் நுழையும் ஆரம்பம் சித்திரை மாதத்தில் நிகழ்கிறது. எனவே எதிர்வரும் 14ஆம் திகதி பிறக்கவிருக்கும் சோபகிருது சித்திரை புத்தாண்டில் மேஷ ராசிக்காரர்களுக்கு குருவினது ஸ்தாப பலம் என்பது மிகவும் நன்மை தரும் வகையில் அமைந்துள்ளது. மேலும் நோய், கடன், வழக்கு பிரச்சினைகள் என்பன காணமல் போகும் நிலை காணப்படுகின்றது. குரு – ராகு சஞ்சாரம் … Read more

வடக்கு, கிழக்கை முடக்குவோம்! அமைச்சர்கள் வர முடியாத நிலையை ஏற்படுத்துவோம் – பகிரங்க எச்சரிக்கை

புத்த சாசனம், மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ஒரு இனவாதி என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடுமையாக சாடியுள்ளார். அத்துடன் வடக்கு, கிழக்கில் எங்கு மலைகளைக் கண்டாலும் புத்தரை அமரவைப்பது தான் வேலை என சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை தொல்லியல் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகளை நிறுத்தாவிட்டால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை முடக்குவோம், இனவாத அமைச்சர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்க வர முடியாத நிலையை ஏற்படுத்துவோம் எனவும் … Read more

நாட்டை வாங்குமளவு பலம் படைத்த புலம்பெயர் இலங்கையர்கள்: வெளிநாட்டு பணம் அனுப்புவதில் ஏன் நெருக்கடி..!

புலம்பெயர் இலங்கையர்களாலும் இலங்கையின் பொருளாதாரத்தில் கனிசமான அளவு செல்வாக்கை செலுத்த முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி அல்லது இலங்கையின் பெறுமதி என்று பார்ப்போமாக இருந்தால் இப்போது 70 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொண்டதான ஒரு பொருளாதாரமாக இருப்பதாக இருக்கிறது. சில புலம்பெயர் இலங்கையர்களின் நிதி … Read more