அரச ஊழியர்கள் குறித்து இன்று நாடாளுமன்றில் வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்றைய தினம் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத் தோற்றும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் மார்ச் 9ஆம் திகதி முதல் ஏப்ரல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அடிப்படைச் சம்பளத்தை வழங்குவதற்கு நேற்று (03.04.2023) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்தார். நாடாளுமன்ற … Read more

அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்காக மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவை மேலும் வலுப்படுத்த வேண்டும் – பிரதமர்

அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்காக மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனத்திற்காக மக்கள் பிரதிநிதிகள் இன்மையால் அரசாங்கம் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அண்மையில் வருகை தந்த பிரதமர் இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்; மலைநாட்டு கிராம அபிவிருத்தி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டதற்கிணங்க ஏகாதிபத்திய வாதிகளின் ஆக்கிரமிப்பின் காரணமாக அநீதி இழைக்கப்பட்ட பொதுமக்களுக்காக ஏதேனும் நிவாரணமொன்றை … Read more

இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி20 போட்டி நாளை ஆரம்பம்

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி20 போட்டி நாளை (05) டனடின் நகரில் நடைபெறவுள்ளது. இதேவேளை நேற்று முன்தினம் (02) சுற்றுலா இலங்கை அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது ரி20 போட்டியில் இலங்கை அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஏப்ரல் 04ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஏப்ரல் 04ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 … Read more

பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பிறகு IMF ஒப்பந்தத்தில் முக்கிய விடயங்கள் சட்டமாக்கப்படும்

18 ஆவது தடவையாக சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்வதற்கு தான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை- ஜனாதிபதி தெரிவிப்பு சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் ஒப்பந்தத்தின் முக்கிய விடயங்கள் சட்டமாக கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டமூலம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் ஊழல் ஒழிப்பு சட்டமூலம் ஆகிய மூன்று வரைவுகளும் ஜூன் … Read more

கடற்பரப்புகளில் வானிலை, கடல்நிலை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஏப்ரல் 04ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை:மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் பொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் … Read more

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு

இந்தோனேசியாவின் நியாஸ் பகுதியில் சற்றுமுன்னர் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவாகியுள்ளது. ஐரோப்பிய – மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 90 கிமீ (55.92 மைல்) ஆழத்தில் இருந்ததாக EMSC தெரிவித்துள்ளது.  இதேவேளை, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்தோனேஷியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு பாதிப்பு கிடையாது என … Read more

யாழ்.பிரபல ஆண்கள் பாடசாலையில் ஆசிரியரால் தாக்குதலுக்குள்ளான மாணவன் (Photos)

யாழ்.பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவருக்கு சரீரத் தண்டனை வழங்கியமை சட்டத்துக்கு முரணாகவும் மாணவர் நலனுக்கு முரணானதாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்திற்கு எழுத்து மூலமான விளக்கக் கடிதத்தை வழங்கியுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவது, யாழ்ப்பாணத்தில் பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் ஆசிரியரால் தரம் 10ல் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் அண்மையில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய … Read more

விரைவில் நிகழவுள்ள 4 முக்கிய கிரக பெயர்ச்சிகள்! ஐந்து ராசியினருக்கு குபேர ராஜயோகம் – நாளைய ராசிபலன்

ஏப்ரல் மாதத்தில் சூரிய பெயர்ச்சியால் தமிழ் புத்தாண்டும், தொடர்ந்து குரு பெயர்ச்சி, சுக்கிர பெயர்ச்சி, புதன் வக்ர பெயர்ச்சி என 4 முக்கிய கிரக பெயர்ச்சிகள் நிகழவுள்ளது.  ஏப்ரல் 6 – சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷபத்திற்கு பெயர்ச்சி ஆகவுள்ளது,  ஏப்ரல் 14 – சூரிய பகவான் மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகி உச்சம் அடையவுள்ளது, ஏப்ரல் 21 – புதன் பகவான் மேஷத்தில் வக்ர பெயர்ச்சி மேற்கொள்ளவுள்ளது, ஏப்ரல் 22 – குரு பகவான் … Read more

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் காணாமல்போயுள்ளதாக முறைப்பாடு! விசாரணைகளில் வெளிவந்த உண்மை

மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் காணாமல்போய் விட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. 119 இற்கு அழைப்பை ஏற்படுத்தி, முட்டாள்கள் தினமான ஏப்ரல் முதலாம் திகதியன்று இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தியபோது நாடாளுமன்ற உறுப்பினர் கொழும்பில் இருந்ததாக தகவகள் வெளியாகியுள்ளது. போலித் தகவல்கள் இந்த அழைப்பை ஏற்படுத்தி போலி தகவல் வழங்கியது, சம்பந்தப்பட்ட அரசியல் வாதிக்கு நெருக்கமானவரென விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவசர பொலிஸ் பிரிவுக்கு அழைப்பை ஏற்படுத்தி போலித் தகவல்களை … Read more