ஜனாதிபதி தலைமையில் தேசிய புத்தரிசி விழா

தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் (02) அநுராதபுரத்தின் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ மஹாபோதிக்கு அருகில் இடம்பெற்றது. அறுவடை செய்யப்பட்ட நெல்லின் முதற் பகுதியை ஜய ஸ்ரீ மஹாபோதிக்கு காணிக்கையாக செலுத்தும் வருடாந்த புத்தரிசி விழா, அடமஸ்தானாதிபதி வண. பல்லேகேம ஹேமரதன நாயக்க தேரரின் ஆலோசனைக்கு அமைவாக விவசாய அமைச்சு மற்றும் கமநல சேவைகள் திணைக்களத்தினால் 56 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மன்னர் காலத்தில் இருந்து நடைபெற்று வரும் இந்த சம்பிரதாயத்திற்கு, நாடு … Read more

கர்ப்பமாக இருக்கிறாரா மணிமேகலை? அவரே வெளியிட்ட அசத்தலான பதிவு

மணிமேகலை கர்ப்பமாக இருக்கிறாரா எனக்கேட்ட கேள்விக்கு அவரே ஒரு சிறப்பான பதிவைக் கொடுத்திருக்கிறார். மணிமேகலை பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிகம் கவரப்பட்டது. இதனால் முதலாம், இரண்டாம், மூன்றாம் சீசன் என கடந்து தற்போது நான்காவது சீசன் வரை வந்திருக்கிறது. இந்நிகழ்ச்சியில், கோமாளியாக கலக்கிவருபவர் மணிமேகலை, விதவிதமாக கெட்டப் போட்டு அனைவரையும் கவர்ந்தவர். இவ்வாறு எல்லா மக்களாலும் விரும்பப்பட்டவர் திடீரென குக் வித் கோமாளி … Read more

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியம்! ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

புத்தாண்டு காரணமாக அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஏப்ரல் மாத சம்பளம் ஏப்ரல் 10ஆம் திகதிக்கு முன்னதாக வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஓய்வூதியமும் வழங்கப்படும் ஓய்வூதியம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் அன்றைய திகதிக்கு முன்னர் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். உரிய காலத்தில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். Source link

விமானப்படை “ஹெரலி பெரலி” வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

நாடு முழுவதும் சென்று மூன்று மில்லியன் பலா மரக்கன்றுகளை நடும் விமானப்படையின் “ஹெரலி பெரலி” வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் அநுராதபுரத்திலுள்ள விமானப்படை முகாமில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நேற்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பலா சார்ந்த உற்பத்திகளுக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும், பலா சார்ந்த உணவு உற்பத்திகளை இலங்கை மக்கள் மத்தியில் பிரபல்யபடுத்துவதுமே இதன் நோக்கமாகும். இந்த வேலைத்திட்டத்தின் கீழ் … Read more

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

இந்த வருடத்தின் இறுதியில் அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அவிசாவளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்தத் தகவலை வெளியிட்டார். வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இவ்வருட இறுதி காலாண்டில் அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும். இது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும். அதற்கமைய அரச … Read more

நான் ஜனாதிபதியாக இருக்கும் வரையில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளியேன்

• நாட்டின் பொருளாதார யுத்தத்தை வெற்றிகொண்டு பொருளாதார ஸ்திரத் தன்மையை ஏற்படுத்துவேன். • போதைப் பொருள் பாவனையைத் தடுக்க கடுமையான சட்டங்களைக் கொண்டுவருவேன்• நாடு வன்முறையை நோக்கிச் செல்வதை தடுத்தமைக்கு நன்றி-பாதுகாப்பு துறையினருக்கு ஜனாதிபதி உரை. தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதேபோல் தான் ஒருபோதும் பிரச்சித்தமான தீர்மானங்களை மேற்கொள்ளப் போவதில்லை எனவும், மாறாக சரியான தீர்மானங்களையே எடுப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, … Read more

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ரி20 போட்டி இன்று

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

திடீரென ஹோட்டல்களுக்குள் நுழைந்து கண்காணிப்பில் ஈடுபட்ட ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காலி கொக்கல மற்றும் அஹங்கம ஆகிய இடங்களில் பல சுற்றுலா ஹோட்டல்களுக்கு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். எவருக்கும் முன்கூட்டியே அறிவிக்காமல் நேற்று முன்தினம் காலை ஜனாதிபதி திடீரென ஹோட்டல்களுக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற ஜனாதிபதி சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார். சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டுவரப்பட்டது. இங்கு தங்கியிருந்த சில வெளிநாட்டவர்களுடனும் ஜனாதிபதி சிநேகபூர்வமாக உரையாடியுள்ளார். இதன் போது ஐக்கிய தேசியக் … Read more

விவசாயிகளுக்கு அரசாங்கம் தட்டுப்பாடின்றி பசளை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது – மஹிந்த அமரவீர

விவசாயிகளுக்கு அரசாங்கம் தட்டுப்பாடின்றி பசளை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அதிகாரிகள் மற்றும் விவசாயிகளிற்கிடையிலான கலந்துரையாடல் (31/03/2023) விவசாய அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நமது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியால் வீழ்ச்சியடைந்துள்ள விவசாயத்தை உயர்த்தி விவசாயத்தை மேம்படுத்துவதுடன் விவசாய அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றிற்கு தீர்வு காண்பதே இக்கூட்டத்தின் முக்கிய … Read more

ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை விவகாரம்! யாழினை சேர்ந்த நபர் பிரித்தானியாவில் கைது

யாழ்.ஊடகவியலாளர் நிமலராஜன் மயில்வாகனம் கொலை தொடர்பாக சந்தேகநபர் ஒருவரை பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவின் North Hampton shire பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 49 வயதுடைய யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. சந்தேகநபர் தொடர்பான விபரம் பிரித்தானிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் நிமலராஜன் கொலையுடன் தொடர்புடைய யாப்பாணத்தை சேர்ந்த சந்தேகநபர் பிரித்தானியாவில் கைது … Read more