மகிந்தவுக்கு அழைப்பு விடுத்துள்ள ரணில்

கடந்த 24ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடியிருந்தார். கொண்டாட்ட நிகழ்வின் போது பிரபல அரசியல்வாதிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் பிறந்த நாள் விழாவில் கலந்துக் கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். எனினும் பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொள்வதை மகிந்த புறக்கணித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கலந்து கொள்ளாமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை. Source link

தொற்றா நோய்களில் இருந்து பாதுகாப்புப் பெற சுறுசுறுப்பாக வாழ்வு மிகவும் அவசியம்

தொற்றா நோய்களில் இருந்து பாதுகாப்புப் பெற சுறுசுறுப்பான வாழ்வு மிகவும் அவசியம் என்று சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் பணிப்பாளர், சமூக மருத்துவ நிபுணர் ஷெரின் பாலசிங்கம் தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் கடந்த 29 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் மாதம் உடல் ரீதியாக சுறுசுறுப்பு மிகுந்த மாதமாக பெயரிடப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் மாதத்தில் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்க பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு … Read more

இலங்கை முன்னேற இதுவே இறுதிச் சந்தர்ப்பம் – ஜனாதிபதி

ஒருவரையொருவர் குற்றம் சாட்டாமல், அடுத்த தலைமுறைக்கு வளமான சமுதாயத்தை உருவாக்க ஒன்றிணைவோம் – “IMF மற்றும் அதற்கு அப்பால்”கலந்துரையாடலில், பிரதான உரையாற்றிய ஜனாதிபதி தெரிவிப்பு. இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இதுவே கடைசி சந்தர்ப்பம் எனவும், பரஸ்பரம் குற்றம் சுமத்தாமல் அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான சமூகத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தினார். கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் (30) முற்பகல் நடைபெற்ற “IMF மற்றும் அதற்கு அப்பால்” கலந்துரையாடலில் பிரதான … Read more

தொழிலுக்கு செல்லும் அனைத்து படகுகளும் கடற்படையினரின் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்- கடற்தொழில் அமைச்சர்

யாழ். வடமராட்சியில் இருந்து தொழிலுக்கு செல்லும் அனைத்து படகுகளும் கடற்படையினரின் சோதனை சாவடியை தாண்டியே செல்ல வேண்டும் அவ்வாறு செல்வதன் மூலம் சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுவோர் கைது செய்யக்கூடியதான சாத்தியக்கூறு காணப்படுவதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் குற்ற செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் (29) மாலை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற போதே இதனைத் தெரிவித்தார். மேலும் தீவுப் பகுதியில் … Read more

இலங்கை முன்னேற இதுவே இறுதிச் சந்தர்ப்பம்

ஒருவரையொருவர் குற்றம் சாட்டாமல், அடுத்த தலைமுறைக்கு வளமான சமுதாயத்தை உருவாக்க ஒன்றிணைவோம் – “IMF மற்றும் அதற்கு அப்பால்”கலந்துரையாடலில், பிரதான உரையாற்றிய ஜனாதிபதி தெரிவிப்பு. இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இதுவே கடைசி சந்தர்ப்பம் எனவும், பரஸ்பரம் குற்றம் சுமத்தாமல் அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான சமூகத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தினார். கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இன்று (30) முற்பகல் நடைபெற்ற “IMF மற்றும் அதற்கு அப்பால்” கலந்துரையாடலில் … Read more

நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையிலான முரண்பாடு! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையில் தேவையற்ற முரண்பாடுகள் உருவாக்கப்படுவதை தடுக்க நீதி சேவைகள் ஆணைக்குழு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை நீதி சேவைகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 1953ஆம் ஆண்டு 21ஆம் இலக்க நாடாளுமன்ற சிறப்புரிமை சட்டத்தை துஷ்பிரயோகம் செய்து நீதித்துறைக்கும், நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையில் தேவையற்ற மோதலை ஏற்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுவதாக மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நீதிச்சேவை சங்கம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மக்களின் ஆணையைப் பாதுகாப்பதற்காக தாக்கல் செய்யப்பட்ட … Read more

எனக்கு பதவி வேண்டாம் – தேவையெனில் ரணில் தருவார் – மஹிந்த பரபரப்பு தகவல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியை ஏற்குமாறு கட்சி உறுப்பினர்கள் சிலர் அழுத்தம் பிரயோகித்து வருவதாக தெரியவந்துள்ளது. எனினும் மஹிந்த ராஜபக்ஷ அதற்கு பெரிய அளவில் விரும்பவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.  தனக்கு ஒரு தேவை என்றால் அதனை நிறைவேற்றி வைப்பதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் தயாராக இருக்கும் நிலையில் பதவி ஏற்கும் தயார் நிலையில் அவர் இல்லை என தெரியவந்துள்ளது. அத்துடன் அரசாங்கத்திற்கு அவசியமான நேரத்தில் ஆலோசனை வழங்குவதற்கும் மஹிந்த ராஜபக்ஷ தயாராகவே உள்ளார் … Read more

சுதந்திர வர்த்தக ஒப்பந்த விவகாரம்! இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளில் சீனா

கடன் மறுசீரமைப்பு மூலம் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளில் சீனா ஈடுபடுவதாக கொழும்பைத் தளமாகக் கொண்ட ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கையை கட்டாயப்படுத்துவதற்கு, சீனா அதன் நிதி செல்வாக்கைப் பயன்படுத்தக்கூடும் என்று சில நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இலங்கையின் நிலைமையானது வெளிநாட்டுக் கடன்களை அதிகமாக நம்பியிருப்பதால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தியை மூலோபாய நலன்களுடன் சமநிலைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. சீனாவின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகள்  இறுதியில் … Read more

வெடுக்குநாறிமலை ஆலயம் சிதைப்பு! ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு

வவுனியா – வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விளைவிக்கப்பட்ட சேதம் குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்த ஜனாதிபதி, தொல்பொருள் திணைக்களத்துடன் வவுனியாவிலும், கொழும்பிலும் இரண்டு சந்திப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் இது குறித்து தெரிவிக்கையில் இவ்வாறான பிரச்சினைகள் இன்றும் தொடர்கின்றன எனினும், இன்னும் அந்த பிரச்சினைகள் இலங்கையில் தொடர்வது மட்டுமல்லாமல் வனபாதுகாப்பு திணைக்களத்துடனும் இவ்வாறான பிரச்சினைகள் உள்ளன. அவ்வாறான பிரச்சினைகள் வடக்கில் மாத்திரமன்றி வடமத்திய மாகாணத்திலும் மொனராகலை மாவட்டத்திலும் உள்ளதாக … Read more

இலங்கை இராணுவத்தை பலவீனப்படுத்துவதில் இரகசிய நகர்வு! அமெரிக்க புலனாய்வு பல மில்லியன் முதலீடு

‘‘தற்போது இலங்கை இராணுவத்தின் நிலையை பார்க்கும் போது இரு தரப்பாக படைத்தரப்பு பிரிந்திருக்கின்றது. ஒரு தரப்புக்கு எதிராக இன்னொரு தரப்பு செயற்படுவதற்கு அல்லது அந்த அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு விரும்பவில்லையென தெரிகிறது. எனவே இலங்கை இராணுவம் பலவீனமான நிலையை அடைந்துள்ளது அல்லது இருப்பிரிவாக பிரியக்கூடிய ஒரு சாத்தியக்கூறுகளே காணப்படுவதாக‘‘ இராணுவ ஆய்வாளர் ஆரூஸ் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ‘‘இலங்கை இராணுவத்தை பலமாக வைத்திருந்தால், … Read more