இலங்கையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவுகளை வலுப்படுத்த தென்னாபிரிக்க அரசு விசேட கவனம்.

இலங்கையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் தென்னாபிரிக்க அரசு விசேட கவனம் செலுத்தியுள்ளதாக தென்னாபிரிக்கா உயர்ஸ்தானிகர் சென்டையில் எட்வின் ஷல்க் (Sandile Edwin Schalk) தெரிவித்துள்ளார்.  பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கு தென்னாபிரிக்கா அரசின் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு நேற்று (15) மாலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் இதனை தெரிவித்துள்ளார்.  இலங்கை மற்றும் தென்னாபிரிக்க நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர தொடர்புகளை மேம்படுத்தல், நாட்டின் உற்பத்தித் துறையை பலப்படுத்துதல், சுற்றுலாத் துறையை மேம்படுத்தல் … Read more

அனைத்து ஓய்வூதியதாரர்களின் கணக்குகளிலும் இன்று (16) மூவாயிரம் ரூபா மாதாந்த இடைக்கால கொடுப்பனவு வைப்புச் செய்யப்படும்

• தபால் நிலையங்கள் மற்றும் உப அலுவலகங்கள் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் 18 ஆம் திகதி முதல் பணத்தைப் பெறலாம் அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் இன்று (16) முதல் ரூ.3000 மாதாந்த இடைக்கால கொடுப்பனவு வழங்க ஓய்வூதிய திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கான உத்தேச மாதாந்த இடைக்கால கொடுப்பனவான 3000 ரூபா வழங்கப்படாமை தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதற்கான பணத்தை திறைசேரியிலிருந்து வழங்குமாறு அண்மையில் பணிப்புரை விடுத்தார். அந்த அறிவுறுத்தலின்படி, திறைசேரியிலிருந்து தேவையான பணம் ஓய்வூதியத் … Read more

உலகளாவிய தேவைகளைக் கருத்தில் கொண்டு இலங்கையின் கல்வி தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் .

• மாணவர்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்கி, அனைத்து மாணவர்களுக்கும் கல்விக்கான பிரவேசத்தை வழங்கும் பாடசாலைக் கல்வி சீர்திருத்தமொன்றை மேற்கொள்வது குறித்து விசேட கவனம் உலகளாவிய தேவைகளை கருத்திற் கொண்டு இலங்கையின் கல்வி தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கையின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் மனித வளத்தை மேம்படுத்துவதற்காக மாணவர்களை அறிவாற்றல் நிறைந்தவர்களாக மாற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அடுத்த பத்து ஆண்டுகளில் உலகிற்கு தேவையான மனித வளத்தை உருவாக்கும் … Read more

இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிளிநொச்சியில் நிரந்தர வீடு கையளிப்பு!

இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு குறைந்த வருமானம் பெரும் குடும்பத்தினருக்கு இராணுவத்தினரால் புதிதாக அமைக்கப்பட்ட நிரந்தர வீடு ஒன்று இன்று(16) கையளிக்கப்பட்டது. இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரி விக்கும் லியனுகே அவர்களின் எண்ணக் கருவுக்கமைவாக 55வது காலாட்படைப் பிரிவின் வழிகாட்டலுக்கு அமைவாக இது அமைக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு படையினரால் குறைந்த வருமானம் பெறும் கிளிநொச்சி பனங்கண்டி பகுதியில் குடும்பத்தினருக்கு புதிதாக வீடு ஒன்று இவ்வாறு நிர்மாணித்து கையளிக்கப்பட்டுள்ளது. யாழ் பாதுகாப்பு கட்டளை தளபதி மேஜர் … Read more

இலங்கையின் ஒளடத உற்பத்தியில் முதலீடு செய்வதற்கு கியூபா அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது

இலங்கையின் ஒளடத உற்பத்தியில் முதலீடு செய்வதற்கு கியூபா அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.இலங்கையின் ஒளடத உற்பத்தியில் கியூபா அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கைக்கான கியூபா தூதுவர் அன்த்ரேஸ் மாசெர்லோ கொன்சாலெஸ் கொரிடோ தெரிவித்துள்ளார். பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கு கியூபா அரசாங்கத்தின் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டு பிரதமர் அலுவலகத்தில் நேற்று (15) மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே தூதுவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் கியூபாவுக்கிடையில் காணப்படும் 65 வருடங்களைக் கடந்த நீண்டகால இராஜதந்திர தொடர்புகளை மேலும் வலுப்படுத்தி, கியூபாவின் … Read more

ஆயுதப்படையினர் வெள்ள நிவாரண பணியில்

நாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆயுதப்படை மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள் நிவாரணாப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் வெள்ளம் மற்றும் சிறிய நிலச்சரிவுகள் ஏட்பட்டுள்ள நிலையில் பல பிரதேசங்களில் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஆயுதப்படை மீட்புக் குழுக்கள் அனர்த்த முகாமைத்து நிலையத்துடன் ஒருங்கிணைந்து நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மல்வானை, கட்டுகொட, வடரெக்க, சீதாவக்க, மீதொட்டமுல்ல, கொலன்னாவ, நவகமுவ, பெலவத்தை, யடதொலவத்தை ஆகிய பிரதேசங்களுக்கு வெள்ள … Read more

அனர்த்த நிவாரண முகாம்களுக்கு மேற்கு பாதுகாப்பு படை உதவி

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள், வெல்லம்பிட்டிய வித்யாவர்தன வித்தியாலயம், சேதவத்தை சித்தார்த்த வித்தியாலயம் மற்றும் கொடுவில காமினி வித்தியாலயம் ஆகிய இடங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அனர்த்த நிவாரண முகாம்களை 14 ஒக்டோபர் 2024 அன்று பார்வையிட்டார். அவர் தனது விஜயத்தின் போது, இந்த முகாம்களில் வசிக்கும் 130 குடும்பங்களைச் சேர்ந்த 581 நபர்களின் வாழ்க்கை நிலைமைகளை ஆராய்ந்தார். மேலும், வெள்ள … Read more

சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்தின் முதல் கொடி ஜனாதிபதியின் செயலாளருக்கு அணிவிக்கப்பட்டது.

இன்றைய சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்துடன் இணைந்ததாக, கொடி விற்பனை வாரத்தை முன்னிட்டு நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அவர்களுக்கு முதல் கொடி அணிவிக்கப்பட்டது. இலங்கை பார்வையற்ற பட்டதாரிகள் சபையின் தலைவர் சுகத் வசந்த டி சில்வா ஜனாதிபதியின் செயலாளருக்கு கொடியை அணிவித்தார். கொடி விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தில் பார்வையற்ற மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்குவதுடன் அவர்களின் நலனுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என சங்கத்தின் தலைவர் … Read more

இரண்டாவது ரி20 போட்டியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் இலங்கை அணி 73 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க அதிகபட்சமாக 54 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் Romario Shepherd … Read more

மீனவர்களுக்கு எரிபொருள் விலையில் நிவாரணம்..

மீனவர்களுக்கான விசேட எரிபொருள் விலைச் சலுகைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக புத்தசாசனம், சமயம் மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த நாட்களில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டமை மீனவர்களுக்கு சலுகையளித்துள்ளதாகவும், மீன்பிடி தொழிலை குறிப்பிட்ட மட்டத்திற்கு உயர்த்துவதற்காக மேலும் எரிபொருள் சலுகையை வழங்க அமைச்சரவை … Read more