அரச ஊழியர்களின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாத சம்பளம்! வெளியான மற்றுமொரு அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்திலிருந்து பெறப்படும் பணத்தின் ஒரு பகுதி அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்கவுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   அதன்படி, அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வழங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் வருமானம் போதாது அந்தக் கொடுப்பனவுகளுக்கு அரசாங்கத்தின் வருமானம் போதாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், … Read more

அரச ஊழியர்களின் சம்பளத்தில் பெருந்தொகை முப்படையினருக்காக செலவு

இலங்கையின் முன்னணி பல்கலைக்கழகங்களின் ஆய்வின் முடிவில் அரச ஊழியர்களின் சம்பள மொத்தத் தொகையில் (48.8 சதவீதம்) முப்படையினருக்கு செலவிடப்படுவது தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட ஆய்வானது பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தலைமையில் ருஹுனு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிரசன்ன பெரேரா மற்றும் கலாநிதி நந்தசிறி கிஹிம்பியஹெட்டி ஆகியோரால் நடத்தப்பட்டுள்ளது. நான்கில் ஒரு பங்கு  பொலிஸ் மற்றும் முப்படையைச் சேர்ந்தவர்கள் நாட்டில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ஆண்டுக்கு 69,491 கோடி ரூபாய் … Read more

திருமணம் முடிந்த சந்தோஷத்தில் குத்தாட்டம் போட்ட மணமகன்: உறைந்து போய் நின்ற மணமகள்: வீடியோ

திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமகனின் வெறித்தனமான ஆட்டத்தை கண்டு மணமகள் உறைந்து போய் நிற்கும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகத்தில் வேகமாக பரவி வருகிறது. மணமகனின் குத்தாட்டம் பொதுவாகவே சமூக ஊடகத்தில் வித்தியாசமான  திருமண நிகழ்ச்சிகள் குறித்த வீடியோக்கள் அதிகமான பயனர்களால் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் திருமணம் ஒன்றில் மணமகனும், மணமகளும் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் மாலை மாற்றும் சடங்கு முடிந்து மணமக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை … Read more

நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது. பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களில் கடன் பெற்று அதனை செலுத்த முடியாத சுமார் ஆயிரம் பேரிடம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கடன் நிவாரண சபை திணைக்களம் தெரிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டளவில் 55 வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் நாட்டில் இயங்கி வந்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டளவில் அதனை 35 குறைக்க … Read more

டெலிகொம் நிறுவனத்தை பெற கடும் போட்டிபோடும் வெளிநாட்டு நிறுவனங்கள்

இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை கொழும்பு பங்குச் சந்தையின் ஊடாக கொள்வனவு செய்வதற்கு சர்வதேச முதலீட்டாளர்கள் பலர் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதுள்ள சட்ட நிலைமைக்கமைய, தொலைத்தொடர்பு நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை மலேசியாவில் வசிக்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஜி.ஆனந்த கிருஷ்ணனுக்கு சொந்தமான மேக்சிஸ் நிறுவனத்திடம் உள்ளமையினால் மீதமுள்ள பங்குகளை வாங்க அந்நிறுவனத்தை அழைக்க வேண்டும். அந்த நிறுவனத்தினர் விரும்பினால் புதிய முதலீட்டாளர்களையும் அழைக்கலாம். டெலிகாம் நிறுவனத்தை வாங்குவதில் இந்திய வர்த்தகக் குடும்பமான மிட்டல் … Read more

சைவ சமயத்தவர்களை மதமாற்றும் நோக்குடன் வருபவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள்: மறவன்புலவு சச்சிதானந்தம் எச்சரிக்கை(Photo)

சைவ சமயத்தவர்களை மதமாற்றம் செய்யும் நோக்குடன் கிறிஸ்தவர்களோ, முகமதியர்களோ அல்லது வேறு சமயத்தவர்களோ நடவடிக்கைகள் மேற்கொண்டால் விரட்டியடிக்கப்படுவார்கள் என மறவன்புலவு சச்சிதானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் அவர் குறிப்பிடுகையில்,”இராவணன் ஆண்ட சிவ பூமியில் பத்தாயிரம் ஆண்டுகளிற்கு மேலாக சைவ சமயத்தினை பின்பற்றுகின்ற மக்களின் மரபுகளை அழித்து இல்லாதொழிப்பதற்காக கடந்த 400 ஆண்டுகளாக வேறு நாடுகளிலிருந்து வருகை தருகின்றனர். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் … Read more

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதார பூச்சியியல் நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் நிஜித் சுமணசேன குறிப்பிட்டுள்ளார். வீடுகள் மற்றும் சுமார் 20% சுற்றுச்சூழலில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக நிஜித் சுமனசேன மேலும் குறிப்பிட்டுள்ளார். Source link

61 பில்லியன் டொலராக உயரும் இலங்கையின் அரசமுறை கடன்

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் கடனை தொடர்ந்து இலங்கையின் அரசமுறை கடன் 61 பில்லியன் டொலராக உயர்வடையும் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.  ஆகவே நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றதையிட்டு மகிழ்ச்சியடைவதும், பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதும் அர்த்தமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.  நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வின் போதே தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  தொடர்ந்தும் தெரிவிக்கையில்,   சர்வதே ச நாணய நிதியத்தின் நிபந்தகைளை செயற்படுத்தும் போது சமூக கட்டமைப்பில் என்றும் … Read more

பொதி செய்யப்பட்ட அரிசி தொடர்பான விசேட அறிவிப்பு

சந்தையில் பொதி செய்யப்பட்ட பெரும்பாலான உள்ளூர் அரிசிகளின் நிகர எடை குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. பதுளை மாவட்டத்தின் சூப்பர் ஸ்டோர்களில் நடத்தப்பட்ட தேடுதலில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்நாட்டு அரிசிப் பொதிகளில் இந்த நிலைமை காணப்படுகின்ற போதிலும், இறக்குமதி செய்யப்படும் அரிசிப் பொதிகளின் எடையில் எவ்வித வித்தியாசமும் இல்லை என பதுளை மாவட்ட உதவி அளவீட்டு அலகு சேவை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை இதேவேளை நாட்டில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இறக்குமதி … Read more

ரூபாவின் பெறுமதி உயர்ந்ததால் ஏற்பட்டுள்ள சாதகமான நிலைமை! விலைக் குறைப்பு தொடர்பில் அறிவிப்பு

ரூபாவின் பெறுமதி அதிகரித்தல் மற்றும் உலக வங்கி போன்ற நிறுவனங்கள் விவசாயத்திற்கு வழங்கும் உதவிகளினால் உரங்களின் விலை எதிர்காலத்தில் மேலும் குறையும்  என ஜனாதிபதி அலுவலகப் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  பெரும்போகத்திற்கு தேவையான அனைத்து வகை உரங்களை விநியோகிப்பது தொடர்பிலான கலந்துரையாடல் கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே, விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் மற்றும் கமநல சேவை ஆணையாளரிடம் சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட ஆலோசனை உரம் வழங்கும் வேலைத்திட்டங்களை அடுத்த … Read more