எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகம்..

புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் விநியோகிக்கப்படும் என்று புத்தசாசனம், சமயம் மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போது நாட்டில் வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகிப்பது தொடர்பாக சிக்கல்கள் காணப்படுவதாகவும், அதன்படி கோரப்பட்டுள்ள புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் ஒரு தொகை எதிர்வரும் சனிக்கிழமை நாட்டுக்கு … Read more

வாகனங்களை இறக்குமதி செய்வதை சரியான முறைமைக்கு உட்படுத்தப்பட வேண்டும்

நாட்டில் மீண்டும் டொலர் நெருக்கடி ஏற்படாத வகையில் வாகனங்களை இறக்குமதி செய்வதை சரியான முறைமைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று புத்தசாசனம், சமயம் மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வாகன இறக்குமதிக்கு இடமளிக்குமாறு பெரும் கோரிக்கைகள் விடுக்கப்பாட்டுள்ளன. … Read more

அத்தியாவசிய உணவுப் பண்டங்களின் மதிப்பீடு செய்யப்பட்ட விலை மட்டங்கள் 

இந்த வாரத்திற்கான அத்தியாவசிய உணவுப் பண்டங்களின் மதிப்பீடு செய்யப்பட்ட விலை மட்டங்கள் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது  பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மூலம் வெளியிடப்பட்டுள்ள மதிப்பீடு செய்யப்பட்ட விலை மட்டங்கள் தொடர்பான அறிக்கை பின்வருமாறு.    

அஞ்சல் வாக்காளிப்பு வசதியும் உத்தியோகபூர்வமான வாக்காளர் அட்டைகளின் விநியோகமும்

2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்காளர் இடாப்புக்கள் 2024.10.16 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்படுவதுடன் அஞ்சல் வாக்குச் சீட்டுக்களின் விநியோகமும் அஞ்சலுக்கு ஒப்படைத்தலும் 2024.10.23 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, மாவட்ட செயலக வளாகத்திலுள்ள அனைத்து அலுவலகங்கள், தேர்தல்கள் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் ஆகிய நிறுவனங்களின் அஞ்சல் வாக்காளர்களின் அஞ்சல் வாக்குகள், 2024.10.30 மற்றும் 2024.11.04 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளது. அரச நிறுவனங்களிலும் மற்றும் படைமுகாம்களிலும் அஞ்சல் வாக்காளர்களின் அஞ்சல் வாக்கு அடையாளமிடல் … Read more

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு விஜயம் செய்த கனடா உயர்ஸ்தானிகர் – மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடா உயர்ஸ்தானிகர் கெளரவ எரிக் வோல்ஸ் (Eric Walsh) அவர்கள் இன்றைய தினம் (15) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு விஜயம் செய்தார். இதன் போது அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களை சந்தித்து மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார். இக்கலந்துரையாடலின்போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள் பிரச்சினைகள் தொடர்பிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு அபிவிருத்தித் தேவைகள் தொடர்பிலும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க … Read more

சீரற்ற காலநிலைக்கு மத்தியில் கடற்படை வெள்ள நிவாரணக் குழுக்கள் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன

இலங்கையை பாதித்த சீரற்ற காலநிலை காரணமாக பெய்து வரும் கடும் மழையால் மேல் மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அதன் படி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் (DMC) ஒருங்கிணைந்து செயற்படும் 08 கடற்படை வெள்ள நிவாரணக் குழுக்கள் கம்பஹ, கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.  கடும் மழை காரணமாக களு கங்கை, களனி கங்கை, அத்தனகலு ஓய மற்றும் தெதுரு ஓய ஆகிய பிரதான மற்றும் கிளை … Read more

கடற்படையின் புதிய பிரதித் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்

இலங்கை கடற்படையின் புதிய பிரதித் தலைமை அதிகாரியாக பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள், ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் 2024 ஒக்டோபர் 11 ஆம் திகதி நியமிக்கப்பட்டதுடன், அதற்கான நியமனக் கடிதம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் (2024 ஒக்டோபர் 14) வழங்கப்பட்டது. மேலும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துணைத் தலைமை அதிகாரிக்கு தனது வாழ்த்துகளையும் கடற்படை தளபதி தெரிவித்துள்ளார். கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியின் சிறந்த பழைய மாணவரான ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ், ஜெனரல் … Read more

பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் வேன் மற்றும் பஸ் கட்டணங்களை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம்..

பாடசாலை மாணவர்கள் பயணிக்கும்; வேன் மற்றும் பஸ் கட்டணங்களை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும், இது தொடர்பாக அடுத்த இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் புத்தசாசனம், சமயம்; மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்.. அரசாங்கம் எரிபொருளின் … Read more

நாட்டின் பல பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் ஆங்காங்கே மழை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஒக்டோபர் 15ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2024 ஒக்டோபர் 15ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல், மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை … Read more

சீரற்ற காலனிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் –   84 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு 

தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் 84 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மேலதிக செயலாளர் கே.ஜி.தர்மதிலக்க தெரிவித்தார்.  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்.. சீரற்ற காலநிலை காரணமாக 16 மாவட்டங்களின் 69 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் … Read more