எரிபொருள் விலையை 100 ரூபாவால் குறைக்க தீர்மானம்

அடுத்த மாதம் முதல் எரிபொருள் விலைய குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த எரிபொருளின் விலையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்படும் விலை சூத்திரத்திற்கமைய முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பெட்ரோல் விலை 100 ரூபாயில் குறைக்க தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டுக்கான எரிபொருள் விலை சூத்திரத்தின் மூலம் மாத்திரமே எரிபொருள் விலைகள் தீர்மானிக்கப்படும் மற்றும் மின்சாரச் சட்டமூலம் 06 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். … Read more

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

நேற்று முன்தினம் (20) டுபாயில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட முக்கோண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி பங்களாதேஷ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 229 ஓட்டங்களை பெற்றது. இதனை தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 44 ஓவர்களுக்கு 5 விக்கெட் இழப்புக்கு 234 ஓட்டங்கள் பெற்று இப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை … Read more

IMFஆதரவை ஜனாதிபதி பெற்றுள்ளார் – இச்சந்தர்ப்பத்தில் நாம் நாட்டுக்காக ஆதரவளிக்க வேண்டும் – பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆதரவை ஜனாதிபதி பெற்றுள்ளார். எனவே, தற்போது நாம் அனைவரும் நாட்டுக்காக ஆதரவளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி மேற்கொண்டுள்ள உடன்படிக்கை தொடர்பில் இன்று (22) பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை பெற்றுக் கொள்வதற்காக … Read more

இலங்கை உயர்ஸ்தானிகர் – இந்திய நிதி அமைச்சர் சந்திப்பு!

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பு நேற்றைய தினம் (21.03.2023) டெல்லியில் நடைபெற்றுள்ளது. இந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் இலங்கைக்கான உதவிகள் தொடர்பாக 2021ஆம் ஆண்டு நவம்பர் முதல் அமைச்சர் சீதாராமனுடன் உயர்ஸ்தானிகர் மொரகொட நடத்தி வரும் தொடர்ச்சியான சந்திப்புகளின் அடிப்படையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டை நனவாக்குவதற்கு இந்திய அரசாங்கம் எடுத்த தலைமைத்துவத்திற்காக அமைச்சர் … Read more

லெஜண்ட்ஸ் லீக் போட்டியில் ஆசிய லயன்ஸ் அணி வெற்றி…

லெஜண்ட்ஸ் லீக் போட்டியில் ஆசிய லயன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. லெஜண்ட்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் (20) தோஹாவில் உள்ள வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடிப்பெடுத்தாடிய World Giants அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்களை பெற்றது. World Giants அணி சார்பாக ஜெக் காலிஸ் 54 பந்துகளில் 78 ஓட்டங்களையும், ரொஸ் டேலர் … Read more

சர்வதேச முதலீடுகளும், ஒத்துழைப்புக்களும் வரவேற்கப்படுகின்றன – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

சர்வதேச முதலீடுகளும், ஒத்துழைப்புக்களும் வரவேற்கப்படுகின்றன என எகிப்து தூதுவரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் மாலைதீவுக்கான எகிப்து தூதுவர் மாகட் மொஷ்லே அவர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் நேற்று (21) இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இந்த இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் கடற்றொழில் சார்ந்த அபிவிருத்தியில் எகிப்தின் அனுபவங்களையும், ஒத்துழைப்புக்களையும் பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது, கடற்றொழிலாளர்களுக்கும், கடலுணவு உற்பத்தியாளர்களுக்கும் உதவுவதற்கு தாம் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்த எகிப்து தூதுவர், தமது … Read more

இலங்கைக்கு IMF விதித்துள்ள கடுமையான நிபந்தனைகள்

வங்குரோத்து அடைந்த இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் முதற்கட்ட கடன் தொகையை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. அடுத்து வரும் சில தினங்களில் கடன் தொகை கிடைக்கவுள்ள நிலையில், கடுமையான கட்டுப்பாடுகளை சர்வதேச நிதியம் விதித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியின் முதல் தவணையாக 333 மில்லியன் டொலர்கள் சில தினங்களில் கிடைக்கவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் நிபந்தனைகளை நிறைவேற்றுவதன் அடிப்படையில் இந்த மூன்று பில்லியன் … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதியை இலங்கை பெற்றுக்கொள்வதன் மூலம் நாட்டில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது – அமைச்சரவைப் பேச்சாளர்

நாட்டின் கடனை செலுத்துவது தொடர்பாக இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. பிரான்சின் லசார்ட் நிறுவனம், கிளிபேர்ட் ஹான்ஸ் நிறுவனம், சர்வதேச நிபுணர்கள் மற்றும் இலங்கை நிபுணர்கள் இணைந்து கடன் மறுசீரமைப்பு திட்டத்தை ஆரம்பிப்பதற்கு தேவையான கலந்துரையாடல்களை நடத்துவார்கள் என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். … Read more

சர்வதேச நாணய நிதியக் கடனுதவி குறித்து மத்திய ஆளுனரின் அறிவிப்பு

 சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்க கருத்து வெளியிட்டுள்ளார். வங்குரோத்து அடைந்த நாட்டின் கடன் செலவுகளை குறைப்பதற்கு இந்த நிதி உதவி பயன்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த காலங்களில் சர்வதேச நாணய நிதியத்தினால் 16 தடவைகள் கடன் வழங்கப்பட்ட போதிலும் அவை கொடுகடன் தொகைகளை ஈடு செய்ய மட்டுமே போதுமானதாக காணப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். இம்முறை வழங்கப்படும் கடனுதவியானது அரசாங்கம் உள்நாட்டு சந்தைகளில் கடன் பெறுவதனை தவிர்க்கும் … Read more

இலங்கைக்கு இறுதி வாய்ப்பு – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சர்வதேச நாணய நிதியத்துடன் கிடைத்துள்ள இந்த கடைசி வாய்ப்பையும் இழந்தால் இலங்கை லெபனானாக மாறிவிடும் என பேராசிரியர் ரொஹான் சமரஜீவ எச்சரித்துள்ளார். லெபனானின் அரசியல் தரப்பினரால் ஒருமித்த கருத்தை அடைய முடியவில்லை மற்றும் வங்கி முறையை செயல்படுத்த முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். லெபனானிலுள்ள மக்கள் குறைந்த பட்சம் வங்கியில் இருந்து தங்கள் பணத்தை எடுக்க கூட முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் சிலர் பொம்மை கைத்துப்பாக்கிகளுடன் வங்கிகளில் குதித்து தமது பணத்தை கேட்பதாகவும் கூறினார். இது … Read more