தீவிரமடையும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்று – இந்தியாவில் முதல் மரணம் பதிவு

இந்தியாவில் H3N2 வகை இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு காரணமாக, இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதற்கமைய, முதல் மரணம் கர்நாடக மாநிலத்திலும், 2 ஆவது மரணம் அரியானா மாநிலத்திலும் பதிவாகியுள்ளன. ஹாங்காங் காய்ச்சல் என்றும் அழைக்கப்படும், இன்ஃப்ளூயன்ஸா எச்3என்2 வைரஸால் பாதிக்கப்பட்ட 90 பேர் கடந்த காலங்களில் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளனர். நோய் அறிகுறிகள் இந்த இன்ஃப்ளூயன்ஸா H3N2 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கோவிட் அறிகுறிகளுடன் பல ஒற்றுமைகள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல், இருமல், … Read more

ஹரக் கட்டா உட்பட போதைப்பொருள் கடத்தல்காரர்களை நாட்டிற்க்கு அழைத்து வர நடவடிக்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் நாளை (11) மடகஸ்கர் நோக்கி பயணிக்கவுள்ளனர். மடகஸ்கரில் கைது செய்யப்பட்ட ´ஹரக் கட்டா´ மற்றும் ´குடு சலிந்து´ ஆகிய இரு போதைப்பொருள் கடத்தல்காரர்களை  நாட்டிற்க்கு அழைத்து வரும் நோக்கிலேயே அவர்கள் பயணிக்கவுள்ளனர். குறித்த இருவர் உள்ளிட்ட 8 பேர் கடந்த 01 ஆம் திகதி மடகஸ்கரில் உள்ள இவாடோ விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஹரக் கட்டாவின் மனைவியும் … Read more

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு தேடி அலையும் இளைஞர், யுவதிகளுக்கு முக்கிய தகவல்

இஸ்ரேல் நாட்டில் தாதியர் வேலை வழங்குவதாக கூறி ஒருவரிடம் இருந்து 1,195,000.00 ரூபாவை மோசடியான முறையில் பெற்றுக்கொண்ட பெண் ஒருவர் உட்பட இருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேல் நாட்டில் தாதியர் சேவை வேலை வழங்குவதாக வரக்காபொல பிரதேசத்தில் வசிக்கும் அரச தாதி ஒருவரிடம் இந்தப் பெண் பணம் பெற்றுள்ளார். அத்துடன், பாதிக்கப்பட்ட பெண் உரிய வேலை வழங்கப்படாததால் இது தொடர்பில் பணியக விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டிற்கமைய, கைது … Read more

700 ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள்: ஒருவர் கைது

விசேட அதிரடிப்படையினரால் 35 லட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 700 ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் இதில் அடங்கியுள்ளன. சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர் புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர். முல்லைத்தீவு முகாம் கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் பி.எச்.டி.சி.குமாரசிங்க உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பணம் அச்சிடப் பயன்படுத்தப்பட்ட கணினி உள்ளிட்ட உபகரணங்களும் கைப்பற்ற்பட்டன.

உயர் தர பரீட்சை பெறுபேறு தாமதமடையும்

உயர் தர பரீட்சை விடைத்தள்களை மதிப்பீடு செய்வோரின் வேலை நிறுத்தம் காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவது இரண்டு வாரங்கள் தாமதமாகும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு விடயத்தையும் வரிப்பிரச்சினையுடன் சேர்த்து குழப்ப வேண்டாம் என்றும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (10) இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கல்வி அமைச்சர் … Read more

இந்த மாதம் அதிக மழை பெய்யும்

2023ஆம் ஆண்டு சிறுபோகத்தில் நெற்செய்கை மற்றும் மேலதிக பயிர்ச் செய்கைகளுக்கு நீர் விடுவிப்பதற்கு தயாராக இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் விவசாய அமைச்சுக்கு அறிவித்துள்ளது. இதன்படி, மகாவலி மற்றும் சிறிய நீர்பாசன கால்வாய்களின் ஊடாக, எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வரை நீர் திறந்துவிடப்படவுள்ளது. இந்த மாதம் அதிக மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் மழை எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இடையூறு இன்றி நீரை வழங்க முடியும் என … Read more

இத்தாலியில் தொழில் ,இலங்கையர்கள் நேரடியாக விண்ணப்பிக்க முடியாது

இத்தாலியில் தொழில் வேலை வாய்ப்புக்கு இணையவழி ஊடாக விண்ணப்பிப்பது குறித்து இத்தாலியில் உள்ள இலங்கைத் தூதுவர் ஜகத் வெள்ளவத்த 2023.03.07 ஆம் திகதி இலங்கை வெளிநாட்டு வேலைவாப்புப் பணியகத்திற்கு விடுத்துள்ள அறிக்கையில் பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக  பணியகம் அறிவித்துள்ளது. அதன்படி, இலங்கை உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அல்லாத நாடுகளுக்கு இத்தாலிய அரசாங்கத்தினால் வருடாந்தம் வழங்கப்படுகின்ற கோட்டா முறையின் கீழ் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக, இத்தாலியில் உள்ள வேலை வழங்குபவர்களின் ஊடாக அல்லது வணிக நிறுவனங்களின் ஊடாக … Read more

ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் அதிகரிப்பு! இலங்கை மத்திய வங்கி

இலங்கை ரூபாவிற்கு நிகராக இன்று (10.03.2023) பதிவாகியுள்ள அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.  அதன்படி அமெரிக்க டொலரின் பெறுமதியில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் விலையில் மாற்றம் அந்த வகையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு விலை 311.62 ரூபாவாகவும், விற்பனை விலை 328.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி டொலரின் கொள்வனவு விலை 307.36 ரூபாவாகவும் விற்பனை விலை 325.52 … Read more

19வது பிம்ஸ்டெக் அமைச்சர்கள் கூட்டத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் உரை

2023 மார்ச் 09ஆந் திகதி இணையவழி மெய்நிகர் முறையில் நடைபெற்ற பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் (பிம்ஸ்டெக்) 19வது அமைச்சர்கள் கூட்டத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி உரையாற்றினார். கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் அலி சப்ரி, உலகப் பொருளாதார வளர்ச்சியின் பாதை ஆசியாவை நோக்கி நகர்வதால், பிம்ஸ்டெக் நாடுகளின் வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கூறுகள் தொடர்புடையதாக இருப்பதற்காக புத்துயிர் பெற வேண்டும் எனக் குறிப்பிட்டார். வர்த்தகம் மற்றும் முதலீட்டின் … Read more

பெந்தோட்டையில் நடைபெற்ற இந்திய-இலங்கை மன்றத்தினது பணிப்பாளர் சபையின் 38ஆவது அமர்வு

இந்திய-இலங்கை மன்றத்தின் பணிப்பாளர் சபையின் 38ஆவது அமர்வு 2023 மார்ச் 03 ஆம் திகதி பெந்தோட்டையில் நடைபெற்றது. இந்த அமர்வானது இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே மற்றும் இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் கௌரவ மிலிந்த மொரகொட ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்றது. இம்மன்றத்தின் உறுப்பினர்கள் தூதுவர் கோபாலசுவாமி பார்த்தசாரதி மற்றும் தூதுவர் பேர்னாட் குணதிலகே ஆகியோரும் இந்த அமர்வில் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  2.     பொருளாதாரம், விஞ்ஞானம், கல்வி, தொழில்நுட்பம் மற்றும் கலாசார ஒத்துழைப்பு, … Read more