எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் இன்று அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு (Live)

எரிபொருள் விலை குறைக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் (10.03.2023) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.  மேலும் தெரிவிக்கையில், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளால் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வடைந்து வருகின்றது. புதிய எரிபொருள் இருப்புக்கள் கொள்வனவு அண்மைய நாட்களில் ரூபாயின் பெறுமதி வலுவடைந்து வருவதால், புதிய எரிபொருள் இருப்புக்கள் குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்படும். அத்துடன், கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்படும் சரக்குகள் குறைந்த விலையில் இறக்குமதி … Read more

மாணவர்களுக்கான. சீருடை துணி விநியோகத்தை துரிதப்படுத்த நடவடிக்கை

2023 ஆம் கல்வி ஆண்டுக்கு தேவையான பாடசாலை சீருடை துணிகளில் 70 வீதத்தை இலவசமாக வழங்குவதற்கான பொறுப்பை ஏற்ற  சீன அரசாங்கம், அதில் 1/3 பகுதியை ஏற்கனவே வழங்கியிருந்ததுடன், மிகுதி 2/3 பகுதியையும் தற்போது வழங்கியுள்ளது. இதற்கமைய சீன அரசாங்கத்தினால் இலவசமாக வழங்க பொறுப்பேற்ற அனைத்து பாடசாலை சீருடை துணிகளும் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றை  சீனத் தூதுவர் Qi. Zhengho ,கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் நேற்று (09) கல்வி அமைச்சில்  கையளித்தார்.  இதற்கமைய, தற்போது … Read more

பொருளாதார நிலைமைகளால் பாதிக்கப்பட்ட நுண்பாக, சிறிய . நடுத்தர தொழில்முயற்சிகளுக்கும் தனிப்பட்டவர்களுக்குமான சலுகை வழிமுறைகள்

கொவிட்-19 நோய்ப்பரவல் அத்துடன் அதனைத்தொடர்ந்து வந்த பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகள் மூலம் பாதிக்கப்பட்ட கடன் பெறுநர்களுக்கு உதவும் முகமாக இலங்கை மத்திய வங்கியினால் மேற்பார்வை செய்யப்படுகின்ற நிதியியல் நிறுவனங்க;டாக பலவகையான கடனை காலந்தாழ்த்தி செலுத்தும் வசதிகளையும் சலுகைத் திட்டங்களையும் இலங்கை மத்திய வங்கி நடைமுறைப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட கடன் பெறுநர்களுக்காக நீடிக்கப்பட்ட மீள்கொடுப்பனவுக் காலங்கள், சலுகை வட்டி வீதங்கள், தொழில்படு மூலதனக் கடன்கள், படுகடனை காலந்தாழ்த்திச் செலுத்தும் வசதி மற்றும் கொடுகடன் வசதிகளை மறுசீரமைத்தல்ஃ மீள அட்டவணைப்படுத்தல் போன்றவற்றை … Read more

75ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தைக் குறிக்கும் ஞாபகார்த்த நாணயக் குற்றியின் விற்பனை

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை குறிக்கும் முகமாக வெளியிடப்பட்ட சுற்றோட்டம் செய்யப்படாத மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான ஞாபகார்த்த நாணயக் குற்றிகள், 2023.03.09ஆம் திகதி தொடக்கம் முதலில் வருவோருக்கு முதலில் வழங்குதல் அடிப்படையில் தனிப்பட்ட அடையாள விபரங்களைப் பெற்று, குற்றியொன்றுக்கு ரூ.6,000 விலையில் விற்பனைக்காகக் கிடைக்கப்பெறும் என்பதுடன் பின்வரும் மத்திய வங்கி விற்பனை நிலையங்களில் ஆளொருவருக்கு ஒரு குற்றி வீதம் என விற்பனை மட்டுப்படுத்தப்படும். முழுவடிவம் https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/press/pr/press_20230308_sale_of_the_commemorative_coin_issued_to_mark_the_75th_independence_celebration_of_sri_lanka_t.pdf

விடைத்தாள் மதிப்பீட்டுக்கான கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டிற்காக வழங்கப்படும் கொடுப்பனவை ,இரண்டு மடங்காக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (09) பாராளுமன்றத்தில் அறிவித்தார். பரீட்சை மேற்பார்வைப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின், கொடுப்பனவையும் 2000 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் தாமதமானால் அது ஏனைய பரீட்சைகள் மற்றும் வழமையான பாடசாலை தவணைகளையும் பாதிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் மாணவர்களின், … Read more

இலங்கையில் ஒரே வாரத்தில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்! கொழும்பில் இன்று பதிவாகியுள்ள நிலவரம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஒரு வாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது. அதன்படி தங்கப்பவுணொன்றின் விலை ஒரு வாரத்தில் சுமார் 39,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக தெரியவருகிறது. இந்த விடயத்தை விலைமதிப்பற்ற உலோகங்கள் பகுப்பாய்வு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தங்கத்தின் விலை இதேவேளை, தங்கத்தின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் நகைக்கடைகளில் நெருக்கடி நிலை பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அமெரிக்க டொலரின் பெறுமதி குறைந்துள்ளதன் காரணமாக உலக தங்கத்தின் விலையுடன் … Read more

நாட்டின் அரைப்பாகத்தில் மேகமூட்டமான வானம்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு.தேசியவளி மண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 மார்ச்10ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மார்ச்10ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் அரைப்பாகத்தில் மேகமூட்டமான வானம்காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலதடவைகள்மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

390 என்ற மோசமான பெறுமதியை அடைவுள்ள இலங்கை ரூபாய்

 அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை எதிர்கொள்ளும் என ஃபிட்ச் நிறுவன மதிப்பீடுகள் கணித்துள்ளது. சமகாலத்தில் அமெரிக்க டொலருக்கு எதிரான வலுவான நாணயமாக இலங்கை ரூபாய் மாறியுள்ளது, ஆனால் வருட இறுதியில் இலங்கை ரூபாயின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சியடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருட இறுதிக்குள் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 20 வீதத்தால் வீழ்ச்சியடையும் என ஃபிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட … Read more

இத்ததாலியில் வேலை தேடும் இலங்கைர்களுக்கு முக்கிய தகவல்

 இத்ததாலியில் தொழில்வாய்ப்பிற்காக இலங்கையர்கள் நேரடியாக விண்ணபிக்க முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலை இத்தாலிக்கான இலங்கை தூதரகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்திடம் அறிவித்துள்ளது. இத்தாலிய அரசாங்கம் வருடாந்தம் வழங்கும் கோட்டா முறையிலான தொழில் வாய்ப்புக்களுக்கான விண்ணப்பம் இத்தாலியிலுள்ள தொழில் வழங்குனர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களினால் செய்யப்பட வேண்டும். அந்த தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையர்கள் நேரடியாக விண்ணப்பிக்க முடியாது என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இத்தாலியில் உள்ள தொழில் வழங்குனர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய இந்த வேலைகளைப் … Read more

காஷ்மீரில் தொடரும் பதற்றம்! இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் போர் ஏற்படும் அபாயம்

காஷ்மீரில் தொடரும் பதற்றம் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் போர் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனரக அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அச்சுறுத்தல் ஆய்வு அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த ஆய்வு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத குழுக்களை ஆதரிக்கும் செயற்பாடு இந்தியாவுக்கு எதிராக செயற்படும் பயங்கரவாத குழுக்களை ஆதரிக்கும் போக்கை கொண்ட நீண்டகால வரலாற்றை பாகிஸ்தான் கொண்டுள்ளது. இருப்பினும், பாகிஸ்தானின் தூண்டுதல்களுக்கு, பிரதமர் மோடி தலைமையின் … Read more