பிறப்பு முதல் இறப்பு வரை நல்ல மன ஆரோக்கியத்தை பேணுவது முக்கியம்.

2024 உலக மனநல தினம், பணியிடத்தின் பௌதீக சூழல் நிலைமை, மன அழுத்த மேலாண்மை செய்தல் முதல் செயல்படுத்தல் மற்றும் சமூகதிற்கு இயைவாக்குதல் வரையான முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. பணியிடத்தில் மனநலத்திற்கு முதலிடம் கொடுப்போம் என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருள். மன ஆரோக்கியத்திற்கும் பணியிடத்திற்கும் இடையிலான இருதரப்பு உறவைப் புரிந்துகொள்வதும் முக்கியம். ஆரோக்கியமான பணியாளர்கள் கூட மோசமான பணிச்சூழலில் உடல் மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். பணியாளர்கள் உணர்ந்து மனநலத்தில் கவனம் செலுத்தினால், அது ஊழியர்களின் மன … Read more

சுமார் ஆறு இலட்சம் (600,000) போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2024 ஒக்டோபர் 9 ஆம் திகதி பொரளை பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட சுமார் ஆறு இலட்சம் (600,000) போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் (01) மற்றும் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு வாகனத்தை (01) கைது செய்தனர். அதன்படி, இலங்கை கடற்படையின் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த விசேட தகவலின் பிரகாரம், கடற்படையினரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து, 2024 ஒக்டோபர் … Read more

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 04 இந்திய மீன்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை மற்றும் கடலோரக் காவல் திணைக்களம் இணைந்து 2024 ஒக்டோபர் 09 ஆம் திகதி யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு (04) இந்திய மீன்பிடி படகுகளுடன் 21 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். வெளிநாட்டு மீன்பிடிப் படகுகள் இந்நாட்டு கடற்பகுதியில் மேற்கொள்கின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கவும், உள்ளூர் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு … Read more

விடுமுறை நாட்களில் மாணவர்கள் பஸ்களில் பயணிக்கும்போது மாதாந்த பருவச் சீட்டைப் பயன்படுத்த அனுமதி

சனி, ஞாயிறு மற்றும் ஏனைய அனைத்து விடுமுறை நாட்களிலும் பாடசாலை மாணவர்கள், தொழிநுட்ப கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மாதாந்த பருவச் சீட்டைப் பயன்படுத்தி பஸ்களில் தடையின்றி பயணிக்க அனுமதிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத் போக்குவரத்து சபைத் தலைவருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். விடுமுறை நாட்களில் மாணவர்கள் மேற்கொள்கின்ற போக்குவரத்தின் போது பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக கிடைக்கப்பெற்றுள்ள பல முறைப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, அதற்கான ஒரு தீர்வாக குறித்த மாதத்திற்கான பருவச் சீட்டைப் பயன்படுத்தி அம்மாதம் … Read more

உலக உணவுத் திட்டம் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கும்

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர். உலக உணவுத் திட்டத்தின் ஊடாக இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு பிரதிநிதிகள் இதன்போது இணக்கம் தெரிவித்தனர். இலங்கையில் உணவு நெருக்கடி நிலைமை தற்போது குறைவாக உள்ள போதிலும், தேவை ஏற்படும் போது புதிய வேலைத்திட்டங்கள் மூலம் இலங்கைக்கு ஆதரவளிக்க உலக உணவுத் திட்டத்தின் தலைவர்கள் ஜனாதிபதியின் செயலாளரிடம் விருப்பம் … Read more

ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த வாரம் முதல் ரூ.3000 மாதாந்தக் கொடுப்பனவு – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபாவை அடுத்த வாரம் முதல் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இடைக்கால கொடுப்பனவான 3000 ரூபா ஒக்டோபர் மாத ஓய்வூதியத்துடன் சேர்க்கப்படாமை தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி, அதே தொகையை அடுத்த வாரத்திற்குள் ஓய்வூதியதாரர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் நிதியமைச்சின் உயர் அதிகாரிகளுடன் நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் … Read more

கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்புத் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை …

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கடும் கொந்தளிப்பாகக் காணப்படும் என கடற்தொழில், நீரியல் வளத்துறை திணைக்களம் அறிவித்துள்ளது. 2024 அக்டோபர் 11ஆம் திகதி காலை ஏழு மணி வரையான தகவலுக்கு இணங்க புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்துட்டை வரையான கடற் பகுதியில் சகல மீன்பிடி போக்குவரத்துக்களையும் மறு அறிவித்தல் வரை மேற்கொள்ள வேண்டாம் என சகல மீனவர்கள் மற்றும் கடல் தொழிலில் … Read more

அமெரிக்கா இலங்கைக்கு விமானம் அன்பளிப்பு

இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட பீச்கிராப்ட் கிங் எயார் (Beechcraft King Air 360ER) விமானம் நேற்று (10) கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா (ஓய்வு), பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அமெரிக்க தூதுவர் அதிமேதகு ஜூலி சங் மற்றும் அமெரிக்க பசிபிக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஸ்டீபன் கோஹ்லர் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இலங்கை … Read more

இலங்கை மத்திய வங்கி, 2024ஆம் ஆண்டிற்கான நிதியியல் உறுதித்தன்மை மீளாய்வினை வெளியிட்டிருக்கிறது

2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 70(1)இன் நியதிகளில் இலங்கை மத்திய வங்கி 2024 ஆம் ஆண்டிற்கான நிதியியல் உறுதித்தன்மை மீளாய்வினை வெளியிட்டிருக்கின்றது. இச்சட்டரீதியான அறிக்கை, நிதியியல் முறைமையின் உறுதித்தன்மை மீதான கணிப்பீட்டுடன் தொடர்பான இடர்நேர்வுகள் மற்றும் பாதிக்கப்படும் தன்மைகள் என்பனவற்றை அடையாளம் கண்டு, மதிப்பீடு செய்வதோடு மத்திய வங்கி மற்றும் ஏனைய ஒழுங்குமுறைப்படுத்தல் அதிகாரசபைகளினால் செயற்படுத்தப்பட்ட கொள்கை வழிமுறைகளையும் மேற்கோடிடுகிறது. 2024ஆம் ஆண்டின் யூன் வரையான தரவுகளை அறிக்கை உள்ளடக்குகின்றது. எனினும், … Read more

மியாவாடியில் உள்ள இணைய குற்ற மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களின் விடுதலைக்கு உதவுங்கள்

– பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தாய்லாந்து அரசாங்கத்திடம் கோரிக்கை.- மியான்மர் அரசாங்கம் மற்றும் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) மூலம் மியான்மாரின் மியாவாடி பிராந்தியத்தில் இணைய குற்ற மையங்களில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலதிக இலங்கையர்களை மீட்பதற்கு தாய்லாந்து அரசாங்கத்தின் உதவியை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கோரினார். தாய்லாந்து தூதுவர் பைட்டூன் மஹாபன்னபோர்ன் (Paitoon Mahapannaporn, ) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையில் நேற்று (10.10.2024) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் … Read more