அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்க பல வழிகளில் முயற்சி – சம்பிக்க

அரசாங்கம் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு பல வழிகளிலும் முயற்சித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்காக அரசாங்கம் 21 தடவைகள் முயற்சித்துள்ளதாக தெரிவித்துள்ளார். தற்பொழுது தேர்தல் நடாத்துவதற்கு பணத்தை வழங்குவதனை நிறுத்திக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் வருமானம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு நிதி வழங்குவதனை நிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சுக்களின் செயலாளர்கள் அரசியல் அமைப்பின் பிரகாரம் செயற்பட வேண்டியது அவசியமானது எனவும், நிதி அமைச்சின் செயலாளர் இதனை நினைவில் … Read more

அழிவுகரமான அபாயங்களுடன் கூடிய நில நடுக்கங்கள் இலங்கையில் ஏற்படுமா..! வெளியான புதிய அறிவிப்பு

இலங்கையில் கடந்த சில நாட்களாக நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் பதிவான நில அதிர்வுகள் தொடர்பில் பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிசார் பொறியியல் சிரேஷ்ட விரிவுரையாளர் உதேனி பண்டார அமரசிங்க அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், வெல்லவாய, புத்தல போன்ற பகுதிகளில் வாழும் மக்கள் சில நில அதிர்வுகளை உணர்ந்துள்ளனர் என்பது உண்மைதான். இது துருக்கியில் ஏற்பட்டது போன்ற நிலநடுக்கத்தை ஏற்படுத்துமா? என்ற தேவையற்ற அச்சம் ஏற்படக்கூடும். எங்கள் நிலப்பரப்பு மிகவும் நிலையானது. … Read more

நெதர்லாந்து தூதுவர் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம்  

நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் பொன்னி ஹார்பெக் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் இருவருக்கும் இடையிலான விசேட சந்திப்பு திருகோணமலை ஆளுநர் அலுவகத்தில் (10) இடம்பெற்றது. இதன்போது, தூதுவர் இலங்கையில் தற்போதைய அரசியல் நிலமையில் கிழக்கு மாகாணத்தில்; காணப்படும் புதிய முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பாக வினவினார். பதிலளித்த ஆளுநர்; கிழக்கு மாகாணம் இயற்கை வளங்களால் நிறைந்ததாகும். இங்கு முதலீடு செய்வதற்கு ஏதுவான சந்தர்ப்பங்கள் வேண்டியளவு காணப்படுகின்றன. அதைவிடவும் ஒல்லாந்தர் காலத்தில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு … Read more

பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜனாதிபதியை சந்தித்தார்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா (Sahir Shamshad Mirza) (10.02.2023) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். நட்பு நாடுகள் என்ற வகையில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலுள்ள நீண்டகால நெருங்கிய உறவை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா உள்ளிட்ட குழுவினருடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார். இச்சந்திப்பைக் குறிக்கும் வகையில் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா, ஜனாதிபதி … Read more

புத்தலவில் மீண்டும் நிலநடுக்கம் குறித்து….

புத்தல உனவட்டுன என்ற இடத்தில் நிலத்தில் அதிர்வு இடம்பெற்றதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்று காலை 8.53 தொடக்கம் 8.55 வரையிலான காலப்பகுதியில் இது இடம்பெற்றதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், இவ்வாறான நில அதிர்வு எதுவும் நேற்று பதிவாகவில்லை என புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் அகழ்வு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 2 நிலநடுக்கங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியாவில் இலங்கை கோடீஸ்வரர் மரணம் – விசாரணைகளுக்கு சி.ஐ.டியினர் தயார்

இந்தோனேசியாவில் இலங்கையைச் சேர்ந்த கோடீஸ்வரர் மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சி.ஐ.டியினர் அந்த நாட்டிற்கு செல்வதற்குத் தயாராக உள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் ஆடம்பர தொடர்மாடியொன்றில் இலங்கையைச் சேர்ந்த 45 வயதாக கோடீஸ்வரர் ஒனேஸ் சுபசிங்க கடந்த வாரம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரின் மரணம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பொலிஸ்மா அதிபருக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளையடுத்தே குறித்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. … Read more

ரயில் சாரதிகளின் தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு

ரயில் சாரதிகள் சிலர் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரயில்வே திணைக்கள அதிகாரிகள் உடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைக்கு அடுத்து இது முடிவுக்கு வந்துள்ளது. இந்த தொழிற்சங்க நடவடிக்கையினால் இன்று (13) காலை சேவையில் ஈடுப்படவிருந்த 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. ரயில் மேம்பாட்டுக்கான தொழிற்சங்க அமைப்பாளர் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். இன்று (13) மாலை அளவில் வழமை போல் ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன.

பாராளுமன்றம் எதிர்வரும் 21 முதல் 24 வரை கூடும்

பாராளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார். சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அன்மையில் (10) புதிய கூட்டத்தொடரில் முதன்முறையாகக் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தின் போது இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பெப்ரவரி 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப. 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது. மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 5.00 … Read more

செத்தல் மிளகாய் உற்பத்தியை 25 சதத்தினால் அதிகரிக்க நடவடிக்கை

செத்தல் மிளகாய் உற்பத்தியை 25 சதத்தினால் அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய பிரிவின் நவீன திட்டத்தின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பதுளை மாவட்டத்தில் மிளகாய் செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கும்பல்வெல பிரதேசத்தில் மிளகாய் செய்கையை அமைச்சர் பார்வையிட்டுள்ளார். அண்மையில், உமாஓயா திட்ட நிர்மாணப் பணி காரணமாக ஏற்பட்ட நீர்க்கசிவு காரணமாக பண்டாரவளை கும்பல்வெல மக்கள் பெருமளவான பாதிக்கப்பட்டனர். குறிப்பாக நெல் மற்றும் காய்கறி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உற்பத்தி பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்காக … Read more

தகுதியான இளைஞர் – யுவதிகளுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு

தகுதியான இளைஞர் – யுவதிகளுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு வழங்கப்படுமென்று ஜப்பான் பிமோ கிகாகு நிறுவனத்தின் பணிப்பாளர் ஹிரோசுகி பிமோடோரி தெரிவித்துள்ளார். சீதாவக்க மெதிசூரி ஜப்பான் மொழிப் பயிற்சி நிலையத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு ஜப்பான் மொழிப் பயிற்சி மற்றும் கலாசார கல்வியும் இங்கு வழங்கப்படவுள்ளது. அரசாங்கத்தினால் பயன்படுத்தப்படாத கட்டிடங்களை பயனுள்ள வகையில் பொதுமக்கள் மத்தியில் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்தக் கட்டிடம் சம்பந்தப்பட்ட மத்திய … Read more