விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் உள்ளாரா..! இலங்கை இராணுவத்தின் அறிவிப்பு குறித்து வெளியான தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்தமைக்கான ஆதாரம் உள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.  இந்த விடயத்தை இலங்கை இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருப்பதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்திருந்தார். உயிரிழப்பிற்கான ஆதாரம் இதனைத்தொடர்ந்து, 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி இடம்பெற்ற இறுதிக்கட்ட போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் … Read more

இலங்கைப் பிரஜைகளுக்காக இந்திய அரசாங்கம் வழங்கும் முழுமையான அனுசரணையுடனான புலமைப் பரிசில்கள்

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் முழுமையான அனுசரணையுடன் வழங்கப்படும் 200க்கும் அதிகமான புலமைப்பரிசில்களுக்கு பல்வறு மட்டங்களையும் சேர்ந்த இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மருத்துவம்/துணைமருத்துவம், நவநாகரீக வடிவமைப்பு, மற்றும் சட்டத்துறை சார்ந்த கற்கைகள் தவிர்ந்த பல்வேறு துறைகளில் முன்னணி இந்திய நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வியினைக் கற்பதற்காக இப்புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன. இலங்கை பிரஜைகளுக்கென பிரத்தியேகமாக வழங்கப்படும் இப்புலமைப்பரிசில்கள் 2023-2024 கல்வி ஆண்டுக்கானது. 2.  இந்த திட்டத்தின் கீழ் பின்வரும் கற்கைநெறிகளுக்காக புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன;   நேரு ஞாபகார்த்த … Read more

மலையக சமூகத்தின் 'ஆதர்ஷ சிற்பி' – கவிதை, கட்டுரை போட்டிகள்

மலையக சமூகத்தின் ‘ஆதர்ஷ சிற்பி’ அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஜனன, சிரார்த்த தினத்தை முன்னிட்டு கவிதை கட்டுரை போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மலையக சமூகத்தின் அரசியல், தொழிற்சங்க நகர்வுகள் அதிரடியானவை, ஆச்சரியப்பட வைப்பவை, எண்ணியதை எடுத்துச் சொல்ல என்றுமே தயங்காத தலைவர் என மூத்த பத்திரிகையாளரும், இ.தொ.கா  சிரேஷ்ட ஊடக இணைப்பளாருமான தேவதாஸ் சவரிமுத்து தெரிவித்துள்ளார். சுயநல அரசியலுக்கப்பால் கொள்கை அரசியலை முன்னெடுத்து புதிய கலாசாரத்தை வளர்ப்பதிலும், மலையக சமூக மாற்றத்திற்கும், … Read more

எல்லை தாண்டிச் சென்று மீன்பிடியில் ஈடுபட்ட உறவுகளை மீட்டுத்தருமாறு கடற்றொழில் அமைச்சரிடம் கோரிக்கை

எல்லை தாண்டிச் சென்று மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இந்தியச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களின் உறவினர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் தமது படகுகளையும் உறவுகளையும் மீட்டுத்தருவதற்கான கோரிக்கையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முன்வைத்துள்ளனர். இன்று (13) காலை கடற்றொழில் அமைச்சில் கடற்றொழில் அமைச்சரை சந்தித்து தமது கோரிக்கையை முன்வைத்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது. இதன்போது சட்ட ரீதியாக படகுகளை விடுவிப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

துருக்கி, சிரியாவுக்கு மேலும் இந்தியாவின் நிவாரண பொருட்கள்

துருக்கி, சிரியா நாடுகளுக்கு இந்தியாவின் நிவாரண பொருட்களுடன் 7 ஆவது விமானம் சென்றடைந்துள்ளது. அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா சார்பில் தொடர்ந்து நிவாரண பொருட்களும் அனுப்பப்பட்டு வருகின்றன. உணவு பொருட்கள், மருந்துகள், போர்வைகள் என ஏராளமான பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் ஏராளமான நிவாரண பொருட்களுடன் 7 ஆவது இந்திய விமானப்படை விமானம் நேற்று (12) இரு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் சோலார் விளக்குகள், அவசர கால மருந்துகள் உள்பட 35 தொன் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. … Read more

ஒரு கிலோ நெல்லுக்கு 100 ரூபா உத்தரவாத விலை வழங்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஒரு கிலோ நெல்லை அரசாங்கத்தின் ஊடாக நூறு ரூபா வீதம் உத்தரவாத விலையில் கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கைக்கு உணவு வழங்கக்கூடிய மாகாணமாக வட மாகாணமும் யாழ்ப்பாண மாவட்டமும் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் பரந்தன் வயல்வெளியில் நடைபெற்ற வடக்கு நெல் அறுவடை செய்யும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.   பரந்தன் வயல்வெளிக்கு விஜயம் செய்த … Read more

கடல் அலைகள்  மேலெழும்பக் கூடிய சாத்தியம்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல்நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது.  அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023 பெப்ரவரி 13ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: கொழும்பிலிருந்து காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்குதிசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ … Read more

யாழ்ப்பாண கலாசார நிலையம் மக்களுக்கு உரித்தாக்கப்பட்டது

இந்திய அரசாங்கத்தின் நன்கொடையின்கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார நிலையம், இலங்கை ஜனாதிபதி அதி மேதகு ரணில் விக்ரமசிங்க, இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை &  தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர்  மாண்புமிகு டாக்டர்.எல்.முருகன்,  இந்திய உயர் ஸ்தானிதர் கோபால் பாக்லே, மீன்பிடித்துறை அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா, புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ விதுர விக்ரமநாயக்க, கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான், ஏனைய … Read more

மர்ம காய்ச்சல் காரணமாக 6 வயது சிறுமி மரணம்

இந்தியா – தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியில் மர்ம காய்ச்சல் காரணமாக 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் ஆலங்குளம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், நள்ளிரவு மீண்டும் திடீரென காய்ச்சல் அதிகமான நிலையில் மீண்டும் ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். இதன்போது வரும் வழியிலேயே சிறுமி உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  Source link

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிந்து சென்றமை குறித்து ஈஸ்வரபாதம் சரவணபவன் கருத்து

சி.வி.விக்கினேஸ்வரனுடன் சென்றால் பெரிதாக சாதிக்கலாம் என்ற எண்ணத்துடனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிந்து சென்றதாகவும் ஆனால் சி.வி.விக்கினேஸ்வரன் சமர்த்தியமாக பிரித்து விட்டு ஒதுங்கிக் கொண்டுள்ளார் எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கான அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று (11.02.2023) சங்கானை நிகர வைரவர் ஆலயத்தின் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவிததுள்ளார். பங்காளி கட்சிகளின் … Read more