இலங்கையில் 7 இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்களில் குறைபாடு

இலங்கையில் 700,000 இற்கும் அதிகமான மோட்டார் வாகனங்கள் குறைபாடுள்ள காற்றுப் பைகள் மற்றும் ஏனைய பாதுகாப்பு குறைபாடுகளுடன் இருப்பதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிசாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். தற்போது இலங்கையின் வீதிகளில் பழுதடைந்த காற்றுப் பைகள் கொண்ட எஸ்யுவி உட்பட பல நவீன கார்கள், எவ்வித பரிசோதனையும் இன்றி பயணிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, வாகன இறக்குமதி முகவர்கள், பாதுகாப்பு குறைபாடுகளுடன் அடையாளம் காணப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் தொடர்பான விபரங்களை திணைக்களத்திடம் இருந்து … Read more

<span class="follow-up">NEW</span> உலகை உலுக்கிய துருக்கி நிலநடுக்கம்! இலங்கை பெண்ணின் சடலம் மீட்பு

புதிய இணைப்பு துருக்கி நிலநடுக்கத்தில் காணாமல் போன இலங்கை பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். துருக்கிக்கான இலங்கை தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.  குறித்த பெண்ணின் சடலத்தை அவர் மகள் அடையாளம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  69 வயதுடைய வயோதிப பெண் ஒருவரே இவ்வாறு நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.  குறித்த பெண்,  கலகெதர பகுதியைச் சேர்ந்தவர் என்றும், இருபது வருடங்களுக்கு முன்னர் அவர் துருக்கி சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  முதலாம் இணைப்பு துருக்கி நிலநடுக்கத்தில் காணாமல் போன இலங்கை பெண்ணை தேடும் … Read more

இலங்கையில் 10 வருட நடைமுறையில் ஏற்படும் மாற்றம்

இலங்கையில் பணவீக்கத்தை அளவிட பத்து ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த முறையை மாற்ற அமைச்சரவை  முடிவு செய்துள்ளது.  அதற்கமைய, 2013ஆம் ஆண்டு பொருட்களின் விலையை அடிப்படையாகக் கொண்ட பணவீக்க அளவீடு இரத்து செய்யப்படும். அதற்கமைய, எதிர்கால பணவீக்கத்தை அளவிடுவதற்கு 2021 ஆம் ஆண்டில் பொருட்களின் விலைகளின் அடிப்படையில் கணக்கீடுகளை செய்ய அரசாங்கம் முடிவு செய்திருந்தது. தற்போதைய பணவீக்கத்தை கணக்கிடும் முறை நடைமுறைக்கு மாறானது என்ற விமர்சனம் காரணமாக அமைச்சர்கள் குழு இந்த முடிவை எடுத்துள்ளது. 2021ஆம் ஆண்டை அடிப்படை கொண்டு … Read more

சர்வதேச நாணய நிதியக்கடனைப் பெறுவதற்கான இலங்கையின் முயற்சிகள் குறித்து வெளியான தகவல்

சுதந்திரத்திற்குப் பின்னர் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியக்கடனைப் பெறுவதற்கான இலங்கையின் முயற்சிகள் உலகளாவிய புவிசார் அரசியலின் குறுக்குவெட்டில் சிக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. சீனா தனது கடன்களை மறுசீரமைப்பதில் சர்வதேச நாணய நிதிய விதிமுறைகளுடன் ஒத்துப்போக மறுத்து, அதற்கு பதிலாக இரண்டு வருட கால அவகாசத்தை வழங்குகிறது. இந்தியா, ஜப்பான் உட்பட்ட தரப்புக்கள் மறுசீரமைப்புக்கு உடன்பட்டுள்ளன. எனவே, தற்போதைக்கு இலங்கை சர்வதேச புவிசார் அரசியலில் சிக்கியுள்ளது. இது சர்வதேச நாணய நிதிய … Read more

திட்டத்திற்கு இணங்கியவுடன் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடன்

தற்போது இலங்கை எடுத்துள்ள வெளிநாட்டுக் கடனை எவ்வாறு பேணுவது என்பது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் தயாரித்துள்ள திட்டத்தை இலங்கையும் கடனாளி நாடுகளும் ஏற்று அங்கீகரிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இலங்கைக்கான கடன் நிவாரணத்திற்கான பணிப்பாளர் சபையின் பிரேரணை நிதியத்தின் நிர்வாக சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் போது கடன் வழங்கும் நாடுகள் மற்றும் பிணை முறி பத்திரங்களை எடுத்த சர்வதேச கடன் வழங்குநர்களின் கருத்துகளையும் சர்வதேச நாணய நிதியம் பரிசீலிக்கிறது. வெளிநாட்டுக் கடன் … Read more

அரச வாகனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள திடீர் முடிவு

அனைத்து அரச நிறுவனங்களிலும் முன்பதிவு செய்யப்பட்ட வாகனங்களை அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்தும் வகையில் கட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. திறைசேரி செயலாளர் சிறிவர்தன இது தொடர்பில் அனைத்து பிரதானிகளுக்கும் அறிவித்துள்ளார். முடிந்தளவில் ஒன்லைன் முறைகளைப் பயன்படுத்தி கூட்டங்கள் மற்றும் மாநாட்டு கலந்துரையாடல்களை நடத்துவதன் மூலம் போக்குவரத்துத் தேவைகள் ஏற்படுவதை மட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, எல்லை, பிரதேச, துணை அலுவலகங்களால் எளிதில் செய்யக்கூடிய கடமைகள் மற்றும் சேவைத் தேவைகளுக்கான போக்குவரத்து வசதிகளின் செலவைக் குறைக்கவும் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. Source … Read more

“மக்களின் மனப்பாங்கு மற்றும் அர்ப்பணிப்பிலேயே பொருளாதார வளர்ச்சியின் வேகம் தங்கியுள்ளது.”

  நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு மீண்டும் ஒரு பரந்த பங்களிப்பை வழங்கக்கூடிய வகையில் வடக்கு அபிவிருத்தி செய்யப்படும். – ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில்  தெரிவிப்பு நல்லிணக்கத்தின் ஊடாக மாத்திரம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும் பொருளாதார அபிவிருத்தியின் வேகம், மக்களின் மனப்பாங்கு  மற்றும் அர்ப்பணிப்பிலேயே தங்கியுள்ளது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். யுத்தத்திற்கு முன்னர் வடமாகாணம் தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, அந்த வலுவான பொருளாதாரத்தை வடக்கில் மீண்டும் ஏற்படுத்தத் தேவையான … Read more

“நாட்டை கட்டியெழுப்புவதற்காக பிரபலம் அல்லாத கடினமான தீர்மானங்களை எடுப்போம்”.

  இலங்கையில் முதன்முறையாக பொருத்தப்பட்ட Hyundai Grand i10 மோட்டார் வாகனத்தை சந்தையில் அறிமுகம் செய்யும் நிகழ்வில் ஜனாதிபதி, அரசியல் தலைவர்களிடம் கோரிக்கை.    • நாட்டின் பொருளாதாரம் மிக விரைவில் மீண்டு விடும் என்ற நம்பிக்கை இத்தகைய முதலீடுகளால் உறுதி.   பிரபலமான தீர்மானங்களால் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்பதால், நாட்டின் எதிர்காலத்திற்காக அனைத்து அரசியல் தலைவர்களும் பிரபலமற்ற ஆனாலும் நாட்டுக்கு சாதகமான கடினமான தீர்மானங்களை எடுப்பார்கள் என தான் நம்புவதாக ஜனாதிபதி … Read more

‘கலாசாரம் என்பது நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியின் பாலம்.’

  வீழ்ச்சியடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்ப சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம். – ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.   நல்லிணக்கம், அபிவிருத்தி மற்றும் கலாசாரம் என்பனவே அரசாங்கத்தின் கொள்கை என்றும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக புதிய எதிர்பார்புடன் அனைத்து இனத்தவர்களும் சகோதரத்துவத்துடன் கைகோர்த்து செயற்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.   இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது தலைவர் பொன்னம்பலம் இராமநாதன் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சிங்கள மற்றும் தமிழ் தலைவர்கள் இணைந்து செயற்பட்டால் நாட்டை … Read more

குஜராத்திலும் நிலநடுக்கம் பதிவானது

இந்தியாவின் – குஜராத் மாநிலத்தில் இன்று  நில அதிர்வு பதிவாகியுள்ளது.   இன்று காலை  அங்கு 3.8 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   அதிகாலை 12.52 மணியளவில் சூரத் நகரில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் 5.2 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.   ஆராய்ச்சியாளரின் கணிப்பு இந்த நில அதிர்வால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கட்டிடங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கி நிலநடுக்கத்தை முன்கூட்டிய கணித்த நெதர்லாந்தை … Read more