யாழில் சட்டத்தரணி சுகாசை வீதியில் இழுத்துச் செல்லும் பொலிஸார் (Video)

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. இதன்போது, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் பொலிஸார் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களுள், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் பிரபல சட்டத்தரணி சுகாஸ் உள்ளடங்குவர். இந்த நிலையில், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் சட்டத்தரணி சுகாஸை பொலிஸார் இழுத்துச் செல்லும் காணொளிகள் வெளியாகியுள்ளன. Source link

இரண்டாவது பேரழிவை சந்திக்கும் ஆபத்தில் நிலநடுக்கத்தில் உயிர்பிழைத்தவர்கள்! உலக சுகாதார ஸ்தாபனம் கவலை

துருக்கி – சிரியாவில் நிலநடுக்கத்திலிருந்து உயிர்பிழைத்தவர்களை தொடர்ந்தும் உயிருடன் வைத்திருக்க பாதுகாப்பதில் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் 5ஆவது நாளாக மீட்புப் பணி நீடித்து வரும் நிலையில், உயிருடன் மீட்கப்பட்டவர்கள் கடுங்குளிர் மற்றும் பசியின் காரணமாக கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இரண்டாவது பேரழிவு இந்த அனர்த்ததிலிருந்து உயிர்தப்பிய ஆயிரக்கணக்கானவர்கள் திறந்தவெளியில் மோசமான நிலைகளில் காணப்படுகின்றனர். அவர்களுக்கான உணவு,எரிபொருள்,மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தற்போது … Read more

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ள வசந்த முதலிகே

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். செயற்பாட்டாளர்களின் உரிமைகளை மீறியதற்காக அமைச்சரொருவர் மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. போலியான ஆதாரங்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் செயற்பாட்டாளர்களை தடுத்து வைக்க போலியான ஆதாரங்களை தயாரித்ததாக அந்த முறைப்பாட்டில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.  பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ், பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன மற்றும் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஆகியோருக்கு … Read more

ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளை தீர்த்துவைப்போம்! தொழிலதிபரிடம் அண்ணாமலை உறுதி!!

 ஈழத்தமிழர்களின் நீண்டகாலப் பிரச்சனைகளைத் தீர்த்துவைக்க பா.ஜ.க. திடசங்கற்பம் பூண்டுள்ளதாக பா.ஜ.க. தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் கொண்டுள்ள பா.ஜ.க. தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும், பிரபல தமிழ் தொலதிபரான கந்தையா பாஸ்கரன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பின்போதே அவர் இந்த உறுதியை வழங்கியுள்ளார். இலங்கைக்கு விஜயம் கொண்டுள்ள பா.ஜ.க. தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள், பிரபல தமிழ் தொலதிபரான கந்தையா பாஸ்கரன் அவர்களை . நேற்றைய தினம் யாழ்பாணத்தில் சந்தித்துள்ளார். அண்ணாமலை … Read more

இலங்கையில் முதன்முறையாக அறிமுகமான புதிய கார் – ஆரம்பித்து வைத்தார் ரணில்

 இலங்கையில் முதல் முறையாக ஒருங்கிணைக்கப்பட்ட வாகனம் ஒன்று சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் முதன்முறையாக ஒருங்கிணைக்கப்பட்ட செய்யப்பட்ட Hyundai Grand i10 காரை இன்று கொழும்பு சிட்டி சென்டரில் அறிமுகம் செய்யும் நிகழ்வு இடம்பெற்றதுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த காரை ஓட்டிப்பார்த்துள்ளார். புத்தம் புதிய வாகனமொன்றை இலங்கை சந்தைக்கு அறிமுகம் செய்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மிக விரைவில் மீண்டு வரும் என்ற நம்பிக்கை உறுதிப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். Hyundai Grand … Read more

உலக நாடுகளை உலுக்கிய துருக்கி நிலநடுக்கம்! ஒரே இடத்தில் புதைக்கப்படும் சடலங்கள்

உலக நாடுகளை உலுக்கிய துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 22,765 கடந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், கட்டட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது. மேலும் துருக்கி மற்றும் சிரியாவில் 5ஆவது நாளாக மீட்புப் பணி நீடித்து வரும் நிலையில், உயிருடன் மீட்கப்பட்டவர்கள் கடுங்குளிர் மற்றும் பசியின் காரணமாக கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடல் நீரின் … Read more

அத்தியாவசியமான அரச செலவினங்களுக்கு மாத்திரமே நிதி ஒதுக்கீட்டை வழங்குமாறு ஜனாதிபதியிடமிருந்து திறைசேரிக்கு அறிவுறுத்தல்

அரச வருமான நிலைமை மேம்படும் வரை அரச சேவையைப் பேணுவதற்கு அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மாத்திரம் வழங்குமாறு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், திறைசேரி செயலாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். முன்னர் மேற்கொள்ளப்பட்டது போன்று அரசாங்க நடவடிக்கைகளுக்கான நிதி விடுவிப்பு, மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் தடையாக இருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி ரணில் … Read more

நலன்புரி நன்மைகள் சபையின் தரவுக் கணக்கெடுப்பு தொடர்பான மீளாய்வுக் கூட்டம்

நலன்புரி நன்மைகள் சபையின் தரவுக் கணக்கெடுப்பு தொடர்பான மீளாய்வுக் கூட்டம் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் நேற்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களையும் குறைந்த வருமானம் பெறுபவர்களையும் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை விரைவாக வழங்குவதே இதன் நோக்கமாகும். நலன்புரி நன்மைகளை வழங்கும்போது வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். அதற்கு தகுதியானவர்களை அடையாளம் காண்பது சமூகப் பாதுகாப்பு நன்மைகள் குறித்த … Read more

புதிய சட்டம் தயார்! இரத்த ஆறு ஓடலாம் – முப்படையினருக்கும் ஜனாதிபதி விசேட உத்தரவு: அரசியல் ஆய்வாளர் தகவல்(Video)

எந்த எல்லைக்கும் சென்று,  நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நிறுத்துவதற்கான முழு காய்நகர்த்தல்களையும் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்வார் என்று இலங்கையில் இருக்கும் அரசியல் ஆய்வாளரும், புலனாய்வுச் செய்தியாளரும், சட்டவாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.  லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  இதேவேளை, தற்போது இலங்கையில் இருக்கும் சூழ்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய சட்டத் திருத்தம் ஒன்றை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.  அது என்ன சட்டத்திருத்தம்?  … Read more

‘ஆர்ட் ஒப் ஶ்ரீலங்கா’ சித்திரக் கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்

75ஆவது தேசிய சுதந்திர தினத்தையொட்டி கொழும்பு 07 இல் அமைந்துள்ள கட்புல, அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் ஜே.டி.ஏ பெரோ அரங்கில் நடைபெற்று வரும், ‘ஆர்ட் ஒப் ஶ்ரீலங்கா’ எனும் சித்திரக் கண்காட்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நேற்று (09) பிற்பகல் பார்வையிட்டார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘ஆர்ட் ஒப் ஶ்ரீலங்கா’ சித்திரக் கண்காட்சியை இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் பொஜ் ஹார்ன்பொல் (Poj Harnpol) கடந்த 04 ஆம் திகதி … Read more