தேரவாத பௌத்தத்தை உலகுக்கு எடுத்துச் செல்ல அவசியமான அரச அனுசரணை வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவிப்பு

தேரவாத பௌத்தத்தை உலகுக்கு எடுத்துச் செல்ல அவசியமான அரச அனுசரணை வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவிப்பு “சிங்கள தம்மசதகனீப்பகரண” நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. தேரவாத பௌத்தத்தை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு கையளிக்கவும் அதனை சர்வதேச மட்டத்தில் வியாபிக்கவும் அவசியமான அனைத்து அரச அனுசரணையையும் வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். “சிங்கள தம்மசதகனீப்பகரண” நூல் வெளியீட்டு விழா நேற்று (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே … Read more

இலங்கை ஏ அணி இரண்டாவது இன்னிங்ஸில் முன்னிலை

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை ஏ அணி இரண்டாவது இன்னிங்ஸில் 129 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது. காலியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடும் இலங்கை ஏ அணி நேற்று (09) மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களை பெற்றது. முதல் போட்டியில் இரட்டைச் சதம் பெற்ற நிஷான் மதுஷ்க 84 … Read more

புத்தல பிரதேசத்தில் 3 ரிக்டர் அளவு நிலநடுக்கம்

புத்தல பெலவத்த சீனி தொழிற்சாலைக்கு அருகாமையில் 3 ரிக்டர் அளவிலான நில நடுக்க சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப்; பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை . இது தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்திய மத்திய மீன் வளத்துறை இணை அமைச்சர் யாழ் வருகை – கடற்றொழில் அமைச்சர் பொன்னாடை போர்த்தி வரவேற்பு

இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய மத்திய அரசாங்கத்தின் மீன் வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட குழுவினரை கடற்றொழில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (09) பலாலி விமான நிலையத்தில் வரவேற்றார். பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கிய இந்திய மத்திய அரசாங்கத்தின் மீன்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பா.ஜ.க. தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோரை பொன்னாடை போர்த்தி கடற்றொழில் அமைச்சர் … Read more

பிரதேச விளையாட்டு கழகங்கள் சகல விளையாட்டுக்களிலும்  ஆர்வம் காட்ட  வேண்டும்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களை வலுவூட்டல் தொடர்பான கருத்தரங்கு,   ஓட்டமாவடி உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல் அமீன் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (09) இடம்பெற்றது. இதன் பொது கருத்துத் தெரிவித்த உதவிப் பிரதேச செயலாளர் எஸ். எம்.அல் அமீன் “விளையாட்டுக் கழகங்கள் கிரிக்கட் மற்றும் கால்பந்து போன்றவற்றில்  மாத்திரம் கவனம் செலுத்தாது, ஏனைய விளையாட்டுக்களிலும் ஆர்வம் காட்டுவது அவசியம்”  இதன் மூலம்  … Read more

தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான கொள்கை கட்டமைப்பை ஜனாதிபதி முன்வைத்தார்

தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான கொள்கை கட்டமைப்பை ஜனாதிபதி முன்வைத்துள்ளார் என்று துறைமுகங்கள், கப்றுரை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு  பிரேரணையின் இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.   இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…   பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான கொள்கை கட்டமைப்பையும் ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.   தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான கொள்கை … Read more

அரசாங்கத்துக்கும் GGGI இற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது

இலங்கையின் காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் பசுமை வளர்ச்சி அபிவிருத்தியை வலுவூட்டுதல் ஆகிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக, உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்துடன் (GGGI) இலங்கை அரசாங்கம் இன்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. இந்த ஒப்பந்தமானது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐ.நாவின் முன்னாள் செயலாளர் நாயகமும் பொதுச்சபையின் தலைவரும் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனச் சபையின் தலைவருமான பான் கி மூன் ஆகியோர் முன்னிலையில் இன்று (07) பிற்பகல் கைச்சாத்திடப்பட்டது. அரசாங்கமும் GGGIயும் பசுமை … Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் சற்றுமுன் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு (video)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி முன்னெடுக்க தேர்தல் ஆணைக்குழுவிற்கு சற்றுமுன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மனு தாக்கல் ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தரவினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தாமதிக்காது நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட கோரி, ஐக்கிய மக்கள் … Read more

திரும்பிச் செல்ல வேண்டும் என பிரித்தானிய நீதிமன்றில் கூச்சலிட்ட இலங்கையர்

கடந்த ஆண்டு குதிரை காவலர் அணிவகுப்பின் போது ஆயுதமேந்திய அதிகாரிகளை நோக்கி சென்றதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கையர் நீதிமன்றில் கூச்சலிட்டதாக இங்கிலாந்தின் செய்தித்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (08.02.2023) பதிவாகியுள்ளது. இந்நிலையில் 30 வயதான பிரசாந்த் கந்தையா என்ற இலங்கையரே  நீதிமன்றில் கூச்சலிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குதிரைப்படையினரின் அணிவகுப்பு ‘பிரித்தானியாவை நான் வெறுக்கின்றேன், நான் இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்புகின்றேன்’ என்று கூச்சலிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு ஏப்ரல் 18ஆம் திகதியன்று செயின்ட் ஜேம்ஸ் பூங்காவில் … Read more

உக்ரைன் ஜனாதிபதிக்கு கிடைத்த உயரிய விருது!

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு பிரான்சின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் தலைநகரிற்கு பயணம் மேற்கொண்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ஜனாதிபதி மேக்ரானை சந்தித்துள்ளார். பிரான்சின் உயரிய விருது இதன்போது பிரான்சின் உயரிய விருதான ”The Legion of Honor” விருதை மேக்ரான் அவருக்கு வழங்கியுள்ளார். Hommage à l’Ukraine et à son peuple.Hommage à toi, cher Volodymyr, pour ton courage et ton engagement. pic.twitter.com/6sN2iVUWrl — Emmanuel Macron (@EmmanuelMacron) … Read more