கடற்பகுதிகளில் இடியுடன் கூடிய மழை ,பலத்த காற்று

இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல்நிலை தேசியவளி மண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023 பெப்ரவரி 06ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் மற்றும் திருகோணமலை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ … Read more

ஜனாதிபதி உடனடியாக தலையிட வேண்டும்! இலங்கையின் வான்வெளியை அயல் நாட்டிற்கு இழக்க நேரிடும் என அச்சம்

இலங்கை வானூர்தி போக்குவரத்து சேவை தொடர்பில் இலங்கை வானூர்தி போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் திசர அமரானந்த எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், இலங்கை வானூர்தி போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களில் 19 பேர் ஒரு வருட காலத்திற்குள் பதவி விலகியுள்ளனர். இதன்காரணமாக இலங்கையில் செயல்படும் வானூர்தி போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் உள்ளது. வானூர்திப் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடையும் … Read more

உலகளாவிய காலாந்தர மீளாய்வின் 4வது சுழற்சியின் கீழ் இலங்கை மீளாய்வு செய்யப்படவுள்ளது

உலகளாவிய காலாந்தர மீளாய்வின் 4வது சுழற்சியின் கீழான இலங்கையின் தேசிய அறிக்கையானது, ஜெனிவாவில் நடைபெறவுள்ள அதன் 42வது அமர்வின் போது 2023 பெப்ரவரி 01ஆந் திகதி புதன்கிழமையன்று உலகளாவிய காலாந்தர மீளாய்வுக்கான ஐ.நா. செயற்குழுவினால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. மனித உரிமைகளை மேம்படுத்தி, தமது மனித உரிமை சார்ந்த கடமைகளை நிறைவேற்றுவதற்காக ஒவ்வொரு அரசும் தேசிய அளவில் முன்னெடுத்த நடவடிக்கைகளை அறிவிப்பதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில், அரசுகளால் இயக்கப்படும் தன்னார்வமயமான சக மீளாய்வு செயன்முறையாக, 2006ஆம் ஆண்டில் உலகளாவிய … Read more

அரசியல் தீர்வு கிடைக்காவிடின் தமிழர் தாயகம் பறிபோய்விடும் – பிறந்தநாளில் சம்பந்தன் எச்சரிக்கை

“அரசியல் தீர்வு ஏற்படாவிட்டால் எங்களுடைய தாயகம் – சரித்திர ரீதியாக எமது தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த பிரதேசங்கள் படிப்படியாக அபகரிக்கப்பட்டு விடும். எனவே, உடனடியாக அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்,இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். திடீர் சுகவீனமுற்று அண்மையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், நேற்றுமுன்தினம் (03) வீடு திரும்பிய நிலையில் இன்று  90 ஆவது பிறந்த தினத்தை … Read more

யாழில் இடம்பெற்ற கோர விபத்து: இளைஞர் ஒருவர் பலி(Photos)

யாழ்.தாவடி பகுதியில் இன்று மாலை மோட்டார் சைக்கிள் கயஸ் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு இளைஞர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருதனார்மடம் பகுதியிலிருந்து கொக்குவில் நோக்கி மூன்று மோட்டார் சைக்கிள்கள் மிகை வேகத்தில் பயணித்துள்ளன. அதில் இரண்டாவதாக வந்த மோட்டார் சைக்கிள் யாழ்ப்பாணத்திலிருத்து மருதனார்மடம் நோக்கி பயணித்த கயஸ் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஒருவர் கவலைக்கிடம் சம்பவத்தில் யாழ்.ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த அனுஜன் (வயது … Read more

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ : நட்டஈடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு

இலங்கையின் கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு பெறுவதற்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விபத்தின் காரணமாக ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்காக 6 பில்லியன் டொலருக்கும் அதிகமான நட்டஈட்டைப் பெறுவதற்கு சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை எதிர்பார்த்துள்ளது. சட்ட ரீதியான நடவடிக்கையை இம்மாதம் நடுப்பகுதியில் இருந்து ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 2021 ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதியன்று ,இலங்கையின் கொழும்பு துறைமுகத்தின் … Read more

இலங்கையில் றோவின் மறைமுக நகர்வு! தகவல்கள் அம்பலம்

அமெரிக்காவின் சீ.ஐ.ஏ உளவுப்பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முறைகேடுகள் பற்றிய தகவல்களை அம்பலப்படுத்தியதன் மூலம் உலக அளவில் எட்வர்ட் ஸ்னோவ்டன் பேசப்பட்டுள்ளார். ஒரு தசாப்தத்திற்கு முன்னதாக ஸ்னோவ்டன் வெளியிட்ட தகவல்கள் உலகையே தலைகீழாக மாற்றியமைத்தது. சீ.ஐ.ஏ உளவுப் பிரிவு உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் பிரபலங்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பதாகவும், மின்னஞ்சல் கணக்குகளில் ஊடுறுப்பதாகவும் அம்பலப்படுத்தியிருந்தார். இந்தியாவின் றோ உளவுப்பிரிவின் செயற்பாடுகள் அந்த வகையில், ஸ்னோவ்டன் போன்ற ஒருவர் இந்தியாவின் றோ உளவுப் பிரிவின் செயற்பாடுகள் குறித்த தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளதாக ஆங்கில … Read more

75 ஆவது சுதந்திர விழாவை முன்னிட்டு இந்திய அரசாங்கம் பேருந்துகள் அன்பளிப்பு

75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இலங்கையின் கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்த இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 500 பேருந்துகளில், 50 பேருந்துகள் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் அடையாள ரீதியிலாக கையளிக்கப்பட்டன. இதற்கான ஆவணங்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே, ஜனாதிபதியிடம் கையளித்தார். நாடாக்களை வெட்டி இரண்டு பேருந்துகளை திறந்து வைத்த ஜனாதிபதி, இந்தியா கையளித்த பேருந்துகளைப் பார்வையிட்டார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன … Read more

நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது  

கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிர்மாணத்துறையில் உள்ளோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நிர்மாணத்துறையில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதே இதன் நோக்கம்.   இதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளுமாறு அமைச்சில் இன்று (02) இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இலங்கை தேசிய நிர்மாண சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.   2014 ஆம் ஆண்டின் 33 ஆம் … Read more