75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்காக இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்
75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக வருகை தந்த இந்தியா, பூட்டான், பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் மாலை தீவு ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை நேற்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வி. வி.முரளீதரன் (V. Muraleedharan) முதலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களைச் சந்தித்ததுடன், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது மற்றும் இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் … Read more