75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றும் விசேட உரை.

75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றும் விசேட உரை. சங்கைக்குரிய மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களே,அன்பான நாட்டு மக்களே,உலகெங்கிலும் வாழும் இலங்கையர்களே,அன்புள்ள குழந்தைகளே, நான் இன்று நிகழ்த்தப்போவது பாரம்பரிய சுதந்திர தின உரை அல்ல. சுதந்திரம் கிடைப்பதற்கு அர்ப்பணித்த, கடுமையாக உழைத்த டி.எஸ். சேனநாயக்க உள்ளிட்ட அனைவருக்கும் மரியாதை செலுத்தி, நான் பேசப்போவது எமக்கு கிடைத்த சுதந்திரத்தைப் பற்றி அல்ல. இன்று நாம் இழந்திருக்கும் … Read more

இலங்கை அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் அழுத்தத்தை தொடர்ந்தும் உணர ஆரம்பித்துள்ளது. “நீங்கள் தனியாக இல்லை என்பதை ஒவ்வொரு இலங்கையரும் அறிய வேண்டும் என்பதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன்.” – செயலாளர் நாயகம், பொதுநலவாயம்

“இலங்கை அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் அழுத்தத்தை தொடர்ந்தும் உணர ஆரம்பித்துள்ளமையை நான் அறிவேன். இந்த அழுத்தம் தாங்க முடியாத சுமையாக இருக்கலாம். இது ஸ்திரமின்மை, தனிமை மற்றும் பயங்கரமானதாக இருக்கலாம். நீங்கள் தனியாக இல்லை என்பதை ஒவ்வொரு இலங்கையரும் அறிய வேண்டும் என்பதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன். நீங்கள் சிறந்த விலைமதிப்பற்ற பொதுநலவாய குடும்பத்தின் ஒரு பகுதியாவீர்கள் என பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகம் பற்றீசியா ஸ்கொட்லன்ட் தெரிவித்தார். புவிசார் அரசியல் வரைபடவியலாளர்களுக்கான ஆரம்ப விரிவுரையை ஆற்றியபோதே அவர் … Read more

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களுக்கு ‘ஸ்ரீ லங்காபிமானி’ கௌரவ விருது

முன்னாள் சபாநாயகரும் நன்மதிப்பிற்குரிய அரசியல்வாதியுமான கரு ஜயசூரியவுக்கு ‘ஸ்ரீ லங்காபிமானி’ கௌரவ விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தலைமையில் நேற்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கரு ஜயசூரிய தேசத்திற்கு ஆற்றிய, சிறந்த சேவையைப் பாராட்டி அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் கரு ஜயசூரிய அவர்களுக்கு பதக்கம் அணிவித்து விருது வழங்கி கௌரவித்தார்.   இந்நிகழ்வின் போது ‘கரு ஜயசூரியவின் பெருமைமிக்க வாழ்க்கைப் பயணத்தின் சுவடுகள்’ … Read more

தனது பிள்ளைக்காக ஆசையாக சென்ற இளம் தந்தை பரிதாபமாக மரணம்

ஹொரனையில் இடம்பெற்ற கோர விபத்தில் இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கோனாபொல கும்புக பிரதேசத்தில் பாதுகாப்பற்ற வீதித் தடையில் கார் மோதி உயிரிழந்துள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவிக்கின்றனர். தனது குழந்தையின் பால் தானத்துக்காக பூக்களுடன் சொகுசுக் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் கோனாபொல கும்புக கிழக்கில் வசிக்கும் 37 வயதுடைய நனோ தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானி என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் இன்று காலை தனது மூன்று … Read more

75ஆவது சுதந்திர தின விழா சிறப்பு மத சடங்குகள் ஜனாதிபதி தலைமையில் கண்டியில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நேற்று முன்தினம் (02) மாலை கண்டி வரலாற்றுச் சிறப்பு மிக்க தலதா மாளிகையில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். 75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகளின் ஆரம்பமாக கண்டி தலதா மாளிகையில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. இதேவேளை, 75ஆவது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு விக்டோரியா அணைக்கட்டுக்கு முன்பாக நடைபெற்ற சிறப்பு பிரித் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார். அமரபுர மகா நிக்காயாவின் மகாநாயக்க தேரர் அக்கமஹா பண்டித வணக்கத்துக்குரிய தொடம்பஹல … Read more

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் இன்று

75ஆவது சுதந்திர தினம் இன்று (04) கொண்டாடப்படுகின்றது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயரின் காலனித்துவத்திற்கு உட்பட்டிருந்த இலங்கை 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி சுதந்திரமடைந்தது. 75ஆவது சுதந்திர தின பிரதான நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதலாவது தேசிய சுதந்திர தின வைபவம் ஆகும். 75 ஆவது சுதந்திர தினத்தை எதிர்வரும் 25 வருடங்களுக்கான புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டத்துடன் கொண்டாடுவதற்கு அரசாங்கம் … Read more

யாழ். மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பு (Photos)

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மாபெரும் பேரணிக்கு ஆதரவாக யாழ். மாட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. யாழ். நகரம் உட்பட மாவட்டத்திலுள்ள சகல நகரங்களிலும் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு ஹர்த்தாலுக்கு வர்த்தக சமூகம் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. மேலும் யாழ். நகரிலிருந்து இடம்பெறும் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை, இ.போ.ச சேவைகள் மட்டுமே இடம்பெற்று வருகின்றன. இதனால் நகர பகுதிகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைவடைந்து காணப்படுவதாக … Read more

பொருளாதரர ரீதியில் முன்னேறுவது சகலரினதும் எதிர்பார்ப்பாக அமைய வேண்டும் என பிரதமர் தெரிவிப்பு.

சவால்களை வெற்றிகொண்டு பொருளாதரர ரீதியில் முன்னேறுவது சகலரினதும் எதிர்பார்ப்பாக அமைய வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற மிக முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் 75வது சுதந்திர தினத்தை இன்று நாம் கொண்டாடுகிறோம். எங்களில் பெரும்பாலானவர்கள் சுதந்திர இலங்கையில் பிறந்ததன் பாக்கியத்தை அங்கீகரிக்கின்ற வகையிலும், இந்த முக்கியமான மைற்கல்லை அடைந்திருப்பதையிட்டு எமது தேசியக் கொடியை ஏற்றி … Read more

ஜனாதிபதி தலைமையில், காலிமுகத்திடலில் 75ஆவது தேசிய சுதந்திரதின விழா

75ஆவது தேசிய சுதந்திரதின விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (04) காலை காலிமுகத்திடலில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தேசியக் கொடியை ஜனாதிபதி ஏற்றி வைத்தார்.அதனைத் தொடர்ந்து 75 ஆவது சுதந்திர தின விழா ஆரம்பமானது. தேசிய கீதம் பாடப்பட்டதுடன் நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த போர் வீரர்களை நினைவு கூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. முப்படையினர், பொலிஸ்  விசேட அதிரடிப்படை  ,சிவில் பாதுகாப்புப் படை வீரர்கள் ஆகியோரின் இராணுவ அணிவகுப்பும் இடம்பெற்றது. இலங்கை … Read more

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் சுதந்திர தின முஸ்லிம் சமய நிகழ்வு

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முஸ்லிம் சமய நிகழ்வு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று (04) காலை நடைபெற்றது. முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் பைஸல் ஆப்தீன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. அமைச்சர்களான அலி சப்ரி, ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகியோர் கலந்து கொண்டனர். நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த படைப்பிரிவினருக்கும் பொலிஸாருக்கும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது உரையாற்றிய அமைச்சர் அலிசப்ரி, இலங்கையின் சுதந்திரத்திற்காக அனைத்து சமூகத்தினரும் செயற்பட்டனர். நாடு தற்போது எதிர்கொண்டுள்ள … Read more