பொல்வத்த தர்மகீர்த்தியாராம விஹாரையில் சுதந்திர தின பௌத்த மத வழிபாட்டு

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொல்வத்த தர்மகீர்த்தியாராம விஹாரையில் இன்று (04) காலை பௌத்த மத வழிபாட்டு நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன கலந்துகொண்டார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்து சமய வழிபாடுகள்

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்து சமய வழிபாடுகள் இன்று (04) பம்பலப்பிட்டி வஜிராபிள்ளையார் ஆலயத்திலும் இடம்பெற்றது. இந்த பூஜை நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்றார். நாட்டிற்கும்இ மக்களுக்கும் ஆசிவேண்டி வழிபாடு நடைபெற்றது.

சுதந்திர தினத்தில் தமிழ் மக்கள் புதிய தீர்மானம் ஏற்க வேண்டும். – சுதந்திர தினச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

நாம் இலங்கையராகவும் தமிழராகவும் வாழ்வதையே பெரு பேறாகக் கருதுகின்றோம், அந்த விருப்பத்தை சுமந்து நிற்கும் ஒவ்வொருவருக்கும் 75ஆவது சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் என்று விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும் அந்தச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது, தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தேசிய நல்லிணக்கத்தின் வழியிலேயே நிலையான தீர்வை சாத்தியமாக்க முடியும் என்பதே எமது நம்பிக்கையாகும். இலங்கை எங்கள் தாய் நாடு அதை மதிப்பதுடன், பவள … Read more

சிறைக்கைதிகள் 588 பேருக்கு பொதுமன்னிப்பு

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகள் 588 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதேவேளை, சிறைச்சாலையில் ஒழுங்க விழுமியங்களுக்கு உட்பட்டு சிறந்த முறையில் செயற்பட்ட 31 பேரும் இன்று விடுதலை செய்யப்படுவதாக சிறைச்சாலை மேலதிக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள அனைத்து நாடுகளையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள அனைத்து நாடுகளையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்• நாட்டில் அமைதியை முன்னெடுத்துச் செல்வதற்காக ஆபிரிக்க கண்டத்தின் தூதுவர்கள் ஜனாதிபதிக்கு பாராட்டு. தீர்வுகளை முன்வைப்பதற்காக நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள அனைத்து நாடுகளையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் கேட்டுக் கொண்டார். ஆபிரிக்க தூதுவர்களை நேற்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து உரையாடியபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். இச்சந்திப்பின்போது இலங்கை வெளிவிவகார கொள்கையின் புதிய கட்டம் தொடர்பில் விளக்கமளித்த ஜனாதிபதி, சிரமமான காலகட்டத்தின்போது … Read more

மீண்டும் பிரதமராகும் மஹிந்த! பதவியை ஒப்படைக்க தயாராகும் தினேஷ்

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பது தொடர்பில் ஆளும் கட்சிக்குள் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராக நியமிக்கப்படுவார் என அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அதற்கமைய, பிரதமர் தினேஷ் குணவர்தனவும் எந்த நேரத்திலும் பிரதமர் பதவியை ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும், அவர் ஏற்கனவே பிரதமர் பதவிக்கான சிறப்புரிமைகளை மிகவும் குறைவாகவே அனுபவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமர் பதவியை வகிப்பாரா இல்லையா என்பது தொடர்பில் … Read more

மருதானை பகுதியில் அமைதியின்மை! போராட்டக்காரர் மீது தாக்குதல் நடத்தியமைக்கான காரணத்தை வெளியிட்ட பொலிஸார்

மருதானை – எல்பிஸ்டன் மண்டபத்தின் முன்பாக முன்னெடுக்கப்பட்ட அமைதி சத்தியாக்கிரக போராட்டத்தில் மதுபோதையில் இருந்த சிலர் கலந்துக்கொண்டு குழப்பம் விளைவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாகவே போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், அமைதியான முறையில் தமது போராட்டத்தினை முன்னெடுக்க அனுமதி வழங்குமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதலாம் இணைப்பு மருதானை – எல்பிஸ்டன் மண்டபத்தின் முன்பாக அமைதி சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்ட காலிமுகத்திடல் போராட்டக்காரர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். நாளைய தினம் … Read more

சீனாவின் கடனை செலுத்த இலங்கைக்கு கால அவகாசம்! வெளியான அறிவிப்பு

இலங்கை அரசாங்கம், 51 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக்கடனை மறுசீரமைக்க போராடி வரும் நிலையில், கடனை திருப்பிச் செலுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசத்தை வழங்குவதை சீன அரசாங்கம் இன்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இந்த கடன் சேவையை நீடிக்க சீனா திட்டத்தை முன்வைத்துள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறியுள்ளதாக தெ இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. இலங்கையின் 10 சதவீத கடன் இதன்படி, எக்ஸ்சிம் வங்கிக் கடன்களுக்கான … Read more

இலங்கை தொடர்பில் இந்திய அரசியல் தலைவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை

இலங்கையில் 13 ஆவது திருத்த சட்டத்தில் எந்த மாற்றமுமில்லாமல் உடனடியாக நடைமுறைப்படுத்த, மத்திய அரசு தலையிட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழக பாஜக கட்சியின் தலைவர் அண்ணாமலை வழங்கியுள்ளார். இந்த மனுவை நேற்று மாலை வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடம் வழங்கியுள்ளார். அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கூட்டணியில் ஏற்பட்டுள்ள மனஸ்தாபத்தை தணிக்கை முடியாமல் பா.ஜனதா தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பரபரப்பான சூழல் இந்த பரபரப்பான சூழலில் தமிழக பா.ஜனதா … Read more

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் நாளை ,விசேட போக்குவரத்து ஏற்பாடு

75வது சுதந்திர தின வைபவத்தை முன்னிட்டு நாளை (பெப்ரவரி 4 ஆம் திகதி) கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  மேல் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் (போக்குவரத்து) ரொஷான் விஜேசிங்க தெரிவித்தார். நாளை 04 ஆம் திகதி நடைபெறவுள்ள சுதந்திர தின வைபவத்தை முன்னிட்டு கொழும்பு நகரின் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் வீதிகள் மூடப்படுவது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (02) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே … Read more