சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலர் இலங்கை வருகை

நாளை (04) இடம்பெறவுள்ள 75 ஆவது சுதந்திர தின தேசிய வைபவத்தில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டு அமைச்சர்கள் தூதுவர்கள் மற்றும் வெளிநாட்டு தூது குழுக்கள் தற்பொழுது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்கு வர ஆரம்பித்துள்ளனர். இதற்கமைவாக பங்களாதேஷ் வெளிநாட்டு அமைச்சர் அப்துல் மோபத், ஜப்பான் வெளிநாட்டு அமைச்சர் கே ஷுன்சுகே மற்றும் பூட்டான் கல்வி அமைச்சர் ஜாய் பின் ராய் ஆகியோர் தமது தூது குழுக்களுடன் இன்று (03) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். … Read more

சாரதி அனுமதிப்பத்திரங்களில் விரைவில் கொண்டு வரப்படும் மாற்றம்

விரைவில் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.  ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தொலைபேசிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் இந்த டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை, தமது கையடக்கத் தொலைபேசியின் ஊடாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என அவர் கூறினார்.  இந்த புதிய சாரதி அனுமதிப் பத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், இந்தப் பத்திரம் அனைத்து தரவுகளிலும் சேர்க்கப்படும் … Read more

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக

ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுசந்திகா ஜயசிங்க இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் திறமையான வீராங்கனைகளில் ஒருவரான சுசந்திகா ஜயசிங்க, இலங்கைக்காக ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற ஒரே வீராங்கனை ஆவார். அவர் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு பெறுமதிமிக்க சொத்தாக இருப்பார் என்று இலங்கை … Read more

கடற்பரப்பில் மூழ்கியுள்ள 47 கப்பல்களின் ஊடாக வருமானம் ஈட்ட புதிய திட்டம்

நாட்டின் கடற்பரப்பிற்குள் இடம்பெற்ற கப்பல் விபத்துக்களை கண்காணிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சு, கடற்படை மற்றும் தனியார் சுற்றுலா நிறுவனங்களையும் இணைத்துக் கொண்டு இவ்வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்று அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். நாட்டின் கடல் எல்லைக்குள் 47 கப்பல்கள் மூழ்கியுள்ளன. அக்கப்பல்களை பார்வையிடுவதற்கு ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் இருப்பதுடன், கடலுக்கு … Read more

சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான மழைவீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசியவளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 பெப்ரவரி 04ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023பெப்ரவரி 03ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு விலகிச் சென்றுள்ளது. அதனால், நாட்டின் வானிலையில் அதன் தாக்கம் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு,வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீக்கும் … Read more

திட்டங்களுக்கு அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களினதும் ஒத்துழைப்பு வேண்டும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

2023 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்களுக்கு அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களினதும், அதிகாரிகளினதும் பூரண ஆதரவை எதிர்பார்ப்பதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கேட்போர் கூடத்தில் நேற்று (02) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். இதன்போது நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஊடாக 2022 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மற்றும் அத்திட்டங்களின் குறைப்பாடுகளை இனம்கண்டு … Read more

சுயதொழில் கடனுதவி கிராம சக்தி மக்கள் சங்கத்திற்கான பயிற்சிப் பட்டறை

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் தியவட்டவான் கிராமத்தில் சுயதொழிலுக்கான கடனுதவி வழங்குவதற்கான முன்னாயத்தப் பயிற்சி பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எச். எம். எம். ருவைத் தலைமையில் இன்று (03) இடம்பெற்றது. நுண்நிதியைப் பெறுவதற்குப் பொருத்தமானவர்களை அடையாளம் காணுதல் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களை தொடர்ந்தும் தொழிலில் நிலைத்திருக்கச் செய்வதற்கு அவசியமான வழிகாட்டல்களை எவ்வாறு வழங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பாக தியவட்டவான் கிராம மக்கள் சக்தி சங்கத்திற்கு தெளிவூட்டப்பட்டது. அத்துடன் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்படும் கடனுதவியை … Read more

ஐக்கிய தேசமொன்றை கட்டியெழுப்ப ஒன்றுபட்டு செயற்படுவோம்

கிழக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்லாமிய சமய விசேட துஆ பிரார்த்தனை மற்றும் வழிபாட்டு நிகழ்வு நேற்று (2) திருகோணமலை அனுராதபுர சந்தி அல்ஹுலூர் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் தொடர்ந்து உரையாற்றுகையில்; காலனித்துவ வாதிகள் எமது நாட்டை தம் நலனுக்காகவே பயன்படுத்தினார்கள். நாம் எந்தவொரு நாட்டுக்கும் அடிபணிந்து செயற்பLtJ வேண்டிய அவசியம் கிடையாது. சுதந்திரம் அடைந்து 75 ஆவது ஆண்டை நிறைவு … Read more

இலங்கையுடன் பேச்சுக்களை ஆரம்பிக்க தயாராகும் சர்வதேச நாணய நிதியம்

இலங்கை அதிகாரிகளுடன் வழிகாட்டுதல் குழு மூலமாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயாராக இருப்பதாக பொன்ட் ஹோல்டர்ஸ் குரூப் என்ற இலங்கை பத்திரதாரர்களின் குழு உறுதிப்படுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டினா ஜோர்ஜீவாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறித்த உறுதிப்பாட்டை இலங்கை பத்திரதாரர்களின் தற்காலிக குழு தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் தங்கள் உத்தியோகபூர்வ கடனாளிகளுடன் இலங்கை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதை இலங்கை பத்திரதாரர்களின் குழு ஏற்றுகொண்டுள்ளது. இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை அத்தகைய ஈடுபாட்டின் … Read more

பொலன்னறுவை மாவட்டத்தில் கடும் மழை,பலத்த காற்று

பொலன்னறுவை மாவட்டத்தின் 05 பிரதேச செயலாளர் பிரிவுகளில் நேற்று வீசிய கடும் மழையுடன் கூடிய பலத்த காற்றினால் ,52 வீடுகள்  சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலான வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக பொலன்னறுவை மாவட்ட செயலாளர் டப்ளியு. ஏ. தர்மசிறி குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கடும் மழை காரணமாக லொன்னறுவை, பலுகஸ்தமன பகுதியில் சாக்கடை கால்வாய் ஒன்று நிரம்பி  வழிந்ததினால்  17 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக சமைத்த உணவு வழங்க நடவடிக்கை … Read more