இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்திற்கு வரி விதிப்பதன் மூலம் உள்நாட்டு அறுவடைக்கு நியாயமான விலை – அமைச்சரவைப் பேச்சாளர்
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் மீதான வரி விதிப்பினால் உள்நாட்டு விவசாயிகள் தனது விளைச்சலை நியாயமான விலையில் விற்பனை செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வெகுஜன ஊடகத்துறை, புத்தசாசன, மத கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர்; விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (08) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். … Read more