பொரளை ஆயுர்வேத வைத்தியசாலைக்கு 213 மில்லியன் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள்

ரூ. 213 மில்லியன் பெறுமதியான நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய படுக்கைகள் உட்பட நவீன மருத்துவ தொழில்நுட்ப உபகரணங்களை ஸ்வீடனின் ServeNow Sri Lanka பொரளை ஆயுர்வேத வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் திரு.சிசிர ஜெயக்கொடி மற்றும் ஸ்வீடனின் ServeNow Sri Lanka அமைப்பின் பணிப்பாளர் திருமதி ஜே.விதானகே ஆகியோரின் பங்களிப்புடன் இவை நேற்று (02) ஆயுர்வேத திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேகுணவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் தொடர் மழை குறித்து வெளியான தகவல் (Photos)

வவுனியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 189.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வவுனியா வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (02.02.2023) காலை முதல் இன்று (03.02.2023) காலை வரையான 24 மணித்தியாலயத்தில் குறித்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இன்று காலை வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா நகரில் நேற்று முதல் தொடர்ச்சியான மழை பெய்து வருகின்றது. இதனால் பல வீதிகள், தாழ் நிலங்களில் குடியிருக்கும் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும், குளங்கள் நிரம்பி வழிகின்றதுடன், வயல் நிலங்களில் வெள்ளம் சூழ்ந்து, … Read more

யாழ்.வலி வடக்கில் பாதுகாப்பு படையினரின் கைவசமிருந்த சுமார் 109 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் யுத்தத்தின் போது பாதுகாப்புப் படையினர் வசமிருந்த சுமார் 109 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு, (பெப்ரவரி 03 ஆம் திகதி) 197 குடும்பங்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இராணுவத்தினர் வசமிருந்த ஐந்து காணிகளும் கடற்படையினர் வசமிருந்த ஒரு காணியுமே இவ்வாறு மக்களிடம் கையளிக்கப்பட உள்ளன. இம்மாதம் பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கையின் 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வடக்கிலுள்ள காணிகளை விடுவித்து அவற்றை உரிமையாளர்களிடம் கையளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வழங்கிய வாக்குறுதியை … Read more

இலங்கை 'ஏ' அணி 249 ஓட்டங்கள் முன்னிலை

நிஷான் மதுஷ்கவின் இரட்டைச் சத்தத்தினால் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது உத்தியோகபற்றற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை ஏ அணி 249 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. காலியில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று (02) ஆட்டநேர முடிவின்போது இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 580 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்மூலம் இலங்கை அணி ஏழு விக்கெட்டுகளுடன்விக்கெட்டுகளுடன் இரண்டாவது இன்னிங்ஸில் 249 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது. நேற்று … Read more

இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தின விழாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து

இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கைக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், விஸ்தரிக்கவும் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்விற்கும், இலங்கை மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தவாறு அமெரிக்க ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த, அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உப இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்டினால் ஜனாதிபதியிடம் இந்த … Read more

மல்வத்து அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஜனாதிபதி ஆசி பெற்றார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நேற்று (02) முற்பகல் மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார். முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அங்கு, வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகாநாயக்க தேரரை சந்தித்து நலம் விசாரித்ததோடு அட்டப்பிரிகரவையும் அவருக்கு அன்பளித்தார்.   மல்வத்து மகாநாயக்க தேரர் தலைமையிலான மகாசங்கத்தினர் ஜனாதிபதிக்காக பிரித் பாராயணம் செய்து ஆசீர்வதித்ததோடு மல்வத்து மகாநாயக்க வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க … Read more

நெல்,சோளம் செய்கைக்காக யூரியா உரம் – பத்து பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு நடவடிக்கை

எதிர்வரும்சிறுபோகத்தின் போது, நெல் மற்றும் சோளம் செய்கைக்காக யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு பத்து பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தற்போது, உர மற்றும் வர்த்தக உர நிறுவனங்களுக்;கு சொந்தமான களஞ்சியசாலைகளில் 30ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரம் காணப்படுகிறது. அதனைத் தவிர, மேலும் 25 ஆயிரம்மெற்றிக் தொன் யூரியா உரம் கொள்வனவு செய்யப்படவுள்ளது. இதற்கென பத்து பில்லியன்ரூபா ஒதுக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார். … Read more

டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம் கையடக்கத் தொலைபேசியின் ஊடாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி

ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கில்இ டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்த டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை, தமது கையடக்கத் தொலைபேசியின் ஊடாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இந்த புதிய சாரதி அனுமதிப் பத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ,இந்தப் பத்திரம் அனைத்து தரவுகளிலும் சேர்க்கப்படும்.

பொருளாதார பலம் இல்லாத நாடு சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கையை முன்னேடுத்துச் செல்ல முடியாது

சுதந்திரமான பொருளாதார பலம் இல்லாத நாடு சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கையை முன்னேடுத்துச் செல்ல முடியாது என வெகுஜன ஊடக அமைச்சின் ஆலோசகர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய வானொலியில் சமீபத்தில் இடம்பெற்ற சுபாரதி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்,இன்று நாம் வாழும் உலகத்தின் வடிவம், அதன் உள்ளடக்கம் மற்றும் தாக்கத்தில் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையின் அமைவிடம், வணிக மற்றும் மூலோபாயம் அனைத்து உலக வல்லரசுகளுக்கும் இலக்காக மாறியுள்ளது. கடந்த வருடம் இடம்பெற்ற அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பின்னணில் உலக … Read more

ஓஜா பலகையால் பறிபோன உயிர்! நடுநடுங்க வைக்கும் சம்பவம்

மனித வாழ்வில் எந்தளவிற்கு தெய்வ சக்தியின் ஆதிக்கம் இருக்கிறதோ அந்தளவு அமானுஷ்யங்களும் நடக்கின்றன என்பது பலரது நம்பிக்கை. இவற்றில் பலர் திகிலூட்டும் அனுபவங்களை பெற்றுள்ளதாக பகிர்ந்துள்ளனர். அந்த அனுபவங்களை நேரடியாக நாமே பெறாவிட்டாலும் கூட கதையாக கேட்கும் போதே பீதியில் ஆழ்த்தும் சம்பவங்கள் பல. ஒரு சில சம்பவங்கள் உலகளவில் பலரையும் நடுங்க வைத்து ஆட்டங்காண வைத்துள்ளன. அப்படியொரு கதிகலங்க வைக்கும் விடை தெரியாத மர்மம் அடங்கிய உண்மைச் சம்பவமொன்று தொகுப்பாக, Source link