யுத்தத்தினால் இழந்த உயிர்களை மீட்க முடியாவிட்டாலும் பொருளாதாரப் போரில் இழந்த வருமானத்தை மீள வழங்க முடியும்

யுத்தத்தினால் இழந்த உயிர்களை மீட்க முடியாவிட்டாலும் பொருளாதாரப் போரில் இழந்த வருமானத்தை மீள வழங்க முடியும் – ஜனாதிபதி· முப்படைகளின் 77 சிரேஷ்ட அதிகாரிகளுக்கு சிறப்பான சேவைக்கான விபூஷண விருதுகள் போரினால் இழந்த உயிர்களை மீட்டெடுக்க முடியாவிட்டாலும், பொருளாதாரப் போரில் இழந்த வருமானத்தை மீள வழங்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தியுள்ளார். ஒரு நாட்டின் அரசியல் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் ஸ்திரத்தன்மையே பொருளாதாரப் போரில் வெற்றி பெறுவதற்கான சிறந்த காரணியாகும் என்றும் ஜனாதிபதி … Read more

75வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு தொல்பொருட்கள் மற்றும் ஆவணங்களின் கண்காட்சி

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தொல்பொருட்கள் மற்றும் ஆவணங்களின் கண்காட்சி பெப்ரவரி 4 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் திறக்கப்படவுள்ளது. எதிர்வரும் 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் இந்த கண்காட்சியை இலவசமாக பார்வையிட பொது மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று புத்த சாசனம் மற்றும் மத அலுவல்கள் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன குறிப்பட்டார். இந்த கண்காட்சி தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (01) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கருத்து … Read more

கிழக்கு கடற்கரையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு! வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல்

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை இன்று பிற்பகல் நிலவரப்படி மட்டக்களப்புக்கு கிழக்கே சுமார் 110 கிலோமீற்றர் தொலைவில் வலுப்பெறும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை கிழக்கு கடற்கரையை நெருங்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலையின் தாக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய மாகாணங்கள், திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் சில பிரதேசங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் … Read more

பொருளாதாரப் போரில் இழந்த வருமானத்தை மீள வழங்க முடியும்! ஜனாதிபதி

போரினால் இழந்த உயிர்களை மீட்டெடுக்க முடியாவிட்டாலும், பொருளாதாரப் போரில் இழந்த வருமானத்தை மீள வழங்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். ஒரு நாட்டின் அரசியல் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் ஸ்திரத்தன்மையே பொருளாதாரப் போரில் வெற்றி பெறுவதற்கான சிறந்த காரணியாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று இடம்பெற்ற முப்படைகளின் 77 சிரேஷ்ட அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான விபூஷண விருதுகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க … Read more

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு! புதிய விலை விபரம்

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.  நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் நான்கின் விலை இவ்வாறு குறைக்கப்படடுள்ளதாக சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.   புதிய விலை விபரம் இதன்படி,  ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 25 ரூபா குறைக்கப்பட்டு, 1675 ரூபாவாகவும், ஒரு கிலோ பெரிய வெங்காயம் 15 ரூபா குறைக்கப்பட்டு 165 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உள்நாட்டு சிவப்பரிசி … Read more

இந்தியாவில் முக்கிய சந்திப்புக்களில் மிலிந்த மொரகொட (Photos)

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். புதுடில்லியில் உள்ள வெளிவிவகார அமைச்சிலே நேற்று (31.01.2023) இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளின் தற்போதைய நிலை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஜெய்சங்கரின் இலங்கை விஜயம் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகர் ஆகியோர், ஜெய்சங்கரின் அண்மைய இலங்கை பயணத்தின் பின்தொடர்தல் நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, இந்த சந்திப்பின்போது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவிகளை … Read more

தாழமுக்கம் இலங்கையின் கரையை அடையக் கூடிய சாத்தியம்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது.  2023 பெப்ரவரி02ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023பெப்ரவரி 01ஆம் திகதிநண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாகக் காணப்படுகின்ற தாழமுக்கம் 2023 இன்று பெப்ரவரி01ஆம் திகதிகாலை வடஅகலாங்கு 8.20 N இற்கும்கிழக்கு நெடுங்கோடு 82.60 E இற்கும் அருகில்  மட்டக்களப்புக்கு கிழக்கு- தென்கிழக்காக 110 கிலோ மீற்றர் தூரத்தில் மையம்கொண்டுள்ளது. அதுமேற்கு – தென்மேற்குத் திசையில் நகர்ந்து இன்று … Read more

நிதி உத்தரவாதங்களைப் பெற இலங்கையின் நடவடிக்கை! சர்வதேச நாணய நிதியம்

நிதி உத்தரவாதங்களைப் பெறுவதற்கு இலங்கை அதன் உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் இன்னும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. நாணய நிதியத்தின் பொருளாதார ஆலோசகரும் ஆராய்ச்சி இயக்குநருமான ப்யர்ஸ் ஒலிவர் கௌரிஞ்சர்ஸ் இதனை தெரிவித்துள்ளார். இந்த உத்தரவாதங்கள் கிடைத்தவுடன் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிக்கான அணுகல் திறக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள இந்தியாவின் அறிவிப்பு நாடு அதன் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க உதவுவதுடன், நிதியுதவி மற்றும் கடன் நிவாரணத்தை வழங்க … Read more

சீன தூதரக கடிதத் தலைப்பில் வெளியான போலி கடிதம் குறித்து விசாரணை

சீன தூதரக கடிதத் தலைப்பில் வெளியான போலி கடிதம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இலங்கையின் கடன் தொகைகளுக்கு தவணை வழங்க முடியாது என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த போலிக் கடிதம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாக சீனத் தூதரக அதிகாரியொருவர், அமைச்சருக்கு அறிவித்துள்ளார். வெளியான போலி கடிதம் சீனத் தூதரகத்தின் அதிகாரபூர்வ கடித தலைப்பில் கடந்த 18ம் திகதி இடப்பட்டு இந்த போலி கடிதம் வெளியிடப்பட்டுள்ளது என … Read more

பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து உலக வங்கி – அரசாங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை

முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் உலக வங்கியின் பூர்வாங்க நடவடிக்கைகள்” தொடர்பிலான மீளாய்வுக் கலந்துரையாடல் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் இடம்பெற்றுள்ளது. பொருளாதாரத்தின் போட்டித்தன்மை உலக வங்கியின் உதவித் திட்டம் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், நிதி மேற்பார்வை மற்றும் கடன் முகாமைத்துவத்தை மேம்படுத்துதல், வரி நிர்வாகக் கொள்கையை மேம்படுத்துதல், இறையாண்மை நிதித் துறையில் ஏற்படும் படிப்படியான அபாயத்தைக் குறைத்தல், சமூகப் … Read more