19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் கிண்ணத்தை இந்தியா கைப்பற்றியது

முதல் முறையாக நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட வு20 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்றியது. இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியை 07 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி  தோற்கடித்தனர். முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து மகளிர் அணியினர் 17.1 ஓவரில் 68 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர். 69 ஓட்டங்கள் என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியினர் 14 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றிபெற்றனர்.

பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

சுதந்திர தின வைபவம் நடைபெறவுள்ள பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பு பிரதேசத்தைச் சுற்றி விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும். குறித்த தினத்தில் காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பல வீதிகளின் போக்குவரத்து நிறுத்தப்படும் என்று மேல் மாகாண போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை திடீர் வீழ்ச்சி

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (30) மரக்கறி வகைகளின் மொத்த விலை பாரியளவு வீழ்சியடைந்துள்ளது. கோவா ஒரு கிலோவின் மொத்த விலை ரூபாய். 25 முதல் 35 வரை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், வெள்ளரிக்காய் ஒரு கிலோ ரூபாய் 50 முதல் 60 வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போஞ்சி ஒரு கிலோ மொத்த விலை ரூபாய் 300 முதல் 350 வரை குறைவடைந்துள்ளதுடன், லீக்ஸ் மற்றும் கெரட் ஆகியவற்றின் மொத்த விலை ரூபாய் 90 முதல் 150 வரை … Read more

பெரும் கவலையில் பொதுஜன பெரமுன எம்.பி

இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் துரதிஷ்வசமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி தமது அணி என்று கூறினால் அது தவறில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிந்தக அமல் மாயாதுன்ன தெரிவித்துள்ளார். எமக்கு நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்கப்படுவதில்லை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு தமக்கு கிடைக்காமையே இதற்கு காரணம். அந்த நிதியை பயன்படுத்தி பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் இருந்தது. நாங்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட … Read more

அதிக விலைக்கு முட்டை விற்பனை: 83 பேருக்கு எதிராக வழக்கு

கட்டுப்பாட்டு விலைக்கும் அதிகமான விலையில் முட்டைகளை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் முட்டைகளை பதுக்கி வைத்துள்ள இடங்கள் குறித்து தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இவ்வாறுஇ கடந்த ஜனவரி 21 ஆம் திகதி முதல் இதுவரையிலும் 83 இடங்கள் சோதனையிடப்பட்டுள்ளதாகவும் இவற்றுக்கெதிராக அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி ஷாந்த கிரிஎல்ல தெரிவித்துள்ளார்.

மீண்டும் வரியை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும்! அரசாங்கம் சார்பில் வெளியான அறிவிப்பு

 IMF இற்குச் செல்லாமல் தற்போதிருக்கும் நிலையில் இருந்து மீள்வதற்கு  அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்றால் வரியை அதிகரிக்க வேண்டும். பண வீக்கம் அதிகரித்துள்ள வேளையில் அவ்வாறு செய்வதால் மக்கள் பாதிப்படைவார்கள்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,   இவ்வாறான நெருக்கடியான சந்தர்ப்பத்தில் சரியான மற்றும் ஒரேவழி IMF மாத்திரமே. இதைத்தவிர மாற்று வழியை கண்டுபிடிப்பது இலகுவல்ல. இதன் மூலம் எமக்கு நிதி உதவி மாத்திரம் அல்ல சர்வதேச … Read more

யாழ். மக்களுக்கு அவசர அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் பொது மக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் வன்முறையாளர்கள் தொடர்பில் தகவல் வழங்கினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ன அறிவித்துள்ளார். மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்து துன்புறுத்திய கும்பல் தொடர்பில் வெளியாகிய காணொளிகள் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டமையை சுட்டிக்காட்டிய அவர் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைளின் … Read more

பாண் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாண் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. பாண் விலை குறைப்பு அதன்படி மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், மின்சாரக் கட்டணம் தற்போதைய விலையை விட இருமடங்காக அதிகரித்துள்ளது. மீண்டும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால் பேக்கரி தொழில்துறையால் அதனை தாங்கிக் கொள்ள முடியாது. பேக்கரி … Read more

அரசாங்கத்தில் பணிபுரியும் பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம்

பாடசாலை ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கில் அரச சேவையில் பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அவர்களில் இருபத்தாறாயிரம் பேர் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 2018, 2019, 2020ஆம் ஆண்டுகளில் அரசாங்க சேவையில் இணைந்து கொண்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பட்டதாரிகளுக்கு இந்த நியமனம் வழங்கப்படவுள்ளது. 40 வயதுக்குட்பட்ட அரச பணியில் பணிபுரியும் எந்தப் பட்டதாரியும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஒன்லைன் முறை மூலம் விண்ணப்பங்களை அனுப்ப இரண்டு … Read more