ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை ஒத்திவைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை இன்று (27) நள்ளிரவுடன் ஒத்திவைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்படும். இக்கூட்டத்தொடர் முடிவடைந்து புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகும் சந்தர்ப்பத்தில் சம்பிரதாயப்படி ஜனாதிபதியினால் அக்கிராசன உரை நிகழ்த்தப்படும். அந்தவகையில் பாராளுமன்றத்தில் ஆற்றப்படும் அக்கிராசன உரையில் 75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்துடன் … Read more

உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்

உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்தை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நாசி (மூக்கு) வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த மருந்துக்கு ‘இன்கோவேக்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு இந்திய மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்ததை தொடர்ந்து, இந்திய குடியரசு தினமான நேற்று (26) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் … Read more

இலங்கையில் ஒரு மாதத்தின் பின்னர் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 699,710 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் இலங்கையில் கடந்த இரு மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்றுடன் ஒப்பிடும்போது இன்றையதினம் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் தங்கத்தின் விலையில் பதிவான முதல் வீழ்ச்சி இதுவாகும்.   இந்த நிலையில், 24 கரட் … Read more

அமெரிக்காவில் இதய நோயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

அமெரிக்காவில் கொரோனா தாக்கிய முதல் ஆண்டில் இதய நோயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், கொரோனா தொற்று பரவலுக்கு முன்னர் 2019 ஆம் ஆண்டில் இதய நோயினால் 8 இலட்சத்து 74 ஆயிரத்து 613 பேர் இறந்துள்ளனர். 2020 ஆம் ஆண்டு இதய நோய்க்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 9 இலட்சத்து 28 ஆயிரத்து 741 ஆக அதிகரித்துள்ளது. இது 6.2 சதவீத அதிகரிப்பாகும். இதற்கமைய, 2020 ஆம் ஆண்டு உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் … Read more

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மேலதிக அதிகாரங்களுடன் மேலும் பலப்படுத்தப்படும் – பாதுகாப்பு செயலாளர்

வரும் ஆண்டில், முன்மொழியப்பட்டுள்ள தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன சட்டத்தின் மூலம் கூடுதல் அதிகாரங்களுடன் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் வலுப்படுத்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். ‘பொருளாதார சவால்களுக்கு மத்தியில் மீள்தன்மையை கட்டியெழுப்புதல்’ எனும் தொனிப்பொருளில் இன்று (ஜனவரி 26) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் 12வது ஆராய்ச்சி கருத்தரங்கு – 2022 இன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய … Read more

75 ஆவது சுதந்திர தினத்தை குறைந்த செலவில் பெருமையுடன் கொண்டாட வேண்டும் – ஜனாதிபதி அறிவுறுத்தல்

75 ஆவது சுதந்திர தினத்தை குறைந்த செலவில் பெருமையுடன் கொண்டாட வேண்டும் – ஜனாதிபதி அறிவுறுத்தல் • தேவையான செலவினங்களை மதிப்பிடும் போது நாட்டின் தற்போதைய நிதி நிலைமை குறித்துகவனம் செலுத்த வேண்டும் குறைந்த செலவில் பிரமாண்டமாகவும் பெருமையாகவும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (26) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. அதன்படி, 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பெப்ரவரி 02 ஆம் திகதி முதல் 19 … Read more

இலங்கையிலிருந்து உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு சென்றுள்ள அவசர செய்தி

இலங்கையிலிருந்து உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அவசர செய்தியொன்று அனுப்பப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறித்த செய்தியை உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அனுப்பியுள்ளது. இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே கூறுகையில், இலங்கை எதிர்கொண்டுள்ள மருந்து தட்டுப்பாட்டை நீக்குவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் தலையிடவேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. மருந்துப்பொருட்கள் மற்றும் உபகரணங்கள் தட்டுப்பாடு இலங்கைக்கு … Read more

மக்களின் கருத்துக்களைக் கருத்தில் கொண்ட நகர வளர்ச்சித் திட்டங்கள்

நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் அனைத்து நகரங்களினதும் வளர்ச்சித் திட்டங்கள் புதுப்பிக்கப்படுகின்றன. அதற்கு அந்தந்த நகரங்களில் தொடர்புடைய மக்களின் கருத்துக்களையும் கவனத்தில் கொள்வது கட்டாயமானது என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கதிர்காமம் புனித பூமியின் அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வுடனான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். குறித்த கலந்துரையாடல் (26) நகர அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நகர அபிவிருத்தி அதிகாரசபையால் தயாரிக்கப்பட்ட … Read more

மின்தடை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

க.பொ.த உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின்வெட்டினை நடைமுறைப்படுத்தாமல் இருக்க முடியாது என இலங்கை மின்சார சபையின் தலைவர் நலிந்த இளங்ககோன் அறிவித்துள்ளார்.  நேற்றும் மின்தடை க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின்வெட்டினை நடைமுறைப்படுத்தாமலிருக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இணக்கம் காணப்பட்டது. ஆனால் நேற்றும் நாட்டில் பரவலாக மின்தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், சட்டக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க, உறுதிப்பாட்டை … Read more

மும்பை நகரத்தில் கொரோனா பாதிப்பு, பதிவு செய்யப்படாத நாள்

2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து முதல் முறையாக இந்தியாவின் மும்பை நகரத்தில் நேற்று முன்தினம் (ஜனவரி 24) நிலவரப்படி ஒரு கொரோனா பாதிப்பு கூட பதிவாகவில்லை என மும்பை பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதோடு நேற்றைய தினத்தை (ஜனவரி 25) பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நிதி மூலதனமாக திகழும் மும்பை நகரை கொரோனா தொற்று வாட்டிவதைத்தது. அண்டை நாடான … Read more