150வது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு தேசிய முத்திரைக் கண்காட்சி

150வது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு, நாளை (08) முதல் ஒக்டோபர் 12ஆம் திகதி வரை தேசிய முத்திரைக் கண்காட்சி ஒன்று இடம்பெறவுள்ளது. இக்கண்காட்சி நடைபெறும் நாட்களில் காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை தபால் தலைமையகத்தில் நடைபெற தபால் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. புத்தசாசனம், மதம் மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தலைமையில் இக் கண்காட்சி நடைபெறவுள்ளது. அதன்படி, … Read more

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை 

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  இந்த எச்சரிக்கை இன்று (07) காலை 9.30 மணி முதல் நாளை இரவு 9.30 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.  இதன்படி, காலி மாவட்டத்தின் நாகொட, எல்பிட்டிய, களுத்துறை மாவட்டத்தின் வல்லாவிட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு செம்மஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அத்துடன், காலி மாவட்டத்தின் நயாகம, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, மாத்தறை மாவட்டத்தின் … Read more

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய நியமனம்..

இலங்கை தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக முன்னாள் கிரிக்கெட் தலைவர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான சுற்றுப்பயணங்களின் போது இலங்கை அணியின் இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய பணியாற்றியதோடு, இலங்கை அணியின் செயற்பாடுகளை கருத்திற் கொண்டு இலங்கை கிரிக்கெட் செயற்குழு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த நியமனம் 2024 ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி முதல் 2026 மார்ச் மாதம் 31ஆம் … Read more

பாராளுமன்றத் தேர்தல் 2024 : அனைத்து அரச ஊழியர்களும் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்க வேண்டும்

1981 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 26 ஆம் பிரிவிற்கு இணங்க இப் பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து அரச ஊழியர்களும் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. மேலும், அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்காதிருத்தல் அல்லது சில குறைபாடுகளின் காரணமாக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படல் தேர்தல் கடமைகளில் இருந்து விடுபடுவதற்கான ஒரு காரணமாக அமையாது என்றும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக … Read more

அனைத்து வேட்பாளர்களினதும் சொத்து, பொறுப்புக்கள் பற்றிய வெளிப்படுத்தல்களை வழங்கும் தேவைப்பாடு 

2024.11.14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பெயர் குறித்த  நியமனங்களைக் கையளிக்கும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளதும் சுயேச்சைக் குழுக்களது அனைத்து வேட்பாளர்களினாலும்  தேர்தல் தினம் பிரகடனம் செய்யப்பட்ட தினத்தில் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய வெளிப்படுத்தல்களை உரிய தெரிவத்தாட்சி அலுவலருக்கு பெயர் குறித்த நியமனப்பத்திரங்களுடன் ஒப்படைக்க வேண்டுமென்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று (07.10.2024) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு?

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீததி, நியாயம் நிலைநாட்டப்படும்

மீண்டும் அவ்வாறானதொரு அழிவுக்கு இடமில்லை கட்டுவாபிட்டியவில் ஜனாதிபதி உறுதி ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துவதோடு, மீண்டும் அவ்வாறானதொரு அழிவுக்கு நாட்டுக்குள் இடமளிக்காத வகையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியும் நியாயமும் நிலை நிலைநாட்டப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார்.   ஈஸ்டர் தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் நேற்று (06) நீர்க்கொழும்பு, கட்டுவாபிட்டிய சென். செபஸ்தியன் தேவாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு உறுதியளித்தார்.   இன்று காலை கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு … Read more

ஜனாதிபதியின் ஆசிரியர் தினம் வாழ்த்துச் செய்தி

அண்மைக் காலத்தில் அபிவிருத்தி கண்ட அனைத்து நாடுகளிலும் முக்கிய அங்கம் வகிப்பது கல்வியாகும். அதன்படி நாட்டை முன்னோக்கி கொண்டுச் சென்று மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான காரணி கல்வி என்பதை அரசாங்கம் அறிந்துகொண்டுள்ளது. அதன் முன்னோடிப் பணியானது ஆசிரியர்களான உங்களையே சார்ந்திருக்கிறது. உங்கள் பாடசாலைக்கு வரும் பிள்ளையை உலகத்தில் வலுவான அறிவுடன் போராடக்கூடியவர்களாக மாற்றும் இயலுமை உங்கள் வசமுள்ளது. தொழிலாலும், சம்பளத்தினாலும் அளவிட முடியாத பெரும் அன்பு ஆசிரியர் தொழிலுடன் இணைந்துள்ளது. ஆசிரியத் தாய், ஆசிரியர் தந்தை என்று … Read more

ஒக்டோபர் 8 ஆம் திகதி தேசிய ஓய்வூதிய தினத்தை முன்னிட்டு பிரதமரின் வாழ்த்துச் செய்தி..

இலங்கை பிரதமர் மற்றும் நீதி, பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழில் அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் ‘தேசிய ஓய்வூதிய தினத்தை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி ஒன்றை விடுத்துள்ளார். நாட்டின் உயிர்நாடியாக விளங்கும் தொழிற் படையின் ஒரு பங்காளியாக இருந்து தாய்நாட்டின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் அரச பணி ஆற்றியவர்களின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரஜைகளின் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.  ‘தேசிய ஓய்வூதிய தினம்’ என்பது பல தசாப்தகால அவர்களின் சேவைக்கான ஒரு … Read more

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  ஒக்டோபர் 07ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஒக்டோபர் 06ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. … Read more

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்கு படுத்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை..

அரசியல் கட்சியில் இணையும் நபர்களுக்கு 50,000 ரூபாய் வழங்குவதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் திருமதி மேனகா பத்திரன தெரிவித்தார். இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான செய்திகள் தொடர்பாக, தமது தனிப்பட்ட வங்கிக் கணக்கை அணுகுவதற்குப் பயன்படுத்தப்படும் இரகசிய எண், கடவுச்சொல் மற்றும் OTP எண் போன்ற தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு அவர் அறிவுறுத்தினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு … Read more