பதவி விலகுகிறாரா தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்..! அவரே வெளியிட்டுள்ள தகவல்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகுவது தேர்தலை நடத்துவதற்கு தடையாக இருக்காது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அத்துடன் அவர் மேலும் தெரிவிக்கையில், நான் பதவி விலகுவதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை. வதந்திகளுக்கு பதில் பரவும் வதந்திகளுக்கு பதிலளிப்பதற்காக காலத்தை விரயம் செய்வதில் பலனில்லை. உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்து வருகிறது. ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி … Read more

இலங்கையில் மனிதவள ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ள துருக்கி

இலங்கையில் மனிதவள ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை துருக்கி மறுத்துள்ளது. சமூக ஊடகங்களில் இது தொடர்பில் சில தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக தூதரகத்தின் உடனடி கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள துருக்கிய தூதரகம் தெரிவித்துள்ளது. ஆட்சேர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை கொழும்பில் உள்ள துருக்கிய தூதரகமோ அல்லது துருக்கிய உள்துறை அமைச்சகமோ இதுபோன்ற ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்று தூதரகம் கூறியது. எனினும் இது சில தனியாட்களால் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.  Source link

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள்  வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான  www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமீத் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

லங்கா சதொச :6 அத்தியாவசிய பொருட்களுக்கான  விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் 6 பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று (26) முதல் அமுலுக்கு வருவதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு சலுகை வழங்கும் வகையில் சதொச நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.  இதற்கமைவாக செத்தல் மிளகாய், சிவப்பு மற்றும் வெள்ளைப் பச்சையரிசி, வெள்ளை நாட்டரிசி, பருப்பு, கீரி சம்பா ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.    இதன்படி, ஒரு கிலோ செத்தல் மிளகாயின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் … Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ரஷ்ய தம்பதி

ரஷ்யா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த ரஷ்ய தம்பதியரின் பயணப் பொதியில் துப்பாக்கி போன்ற இரண்டு சாதனங்களை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். 33 வயதான இந்த ரஷ்ய பிரஜை, அவரது 26 வயதுடைய ரஷ்ய மனைவி மற்றும் 09 வயதான மகன் ஆகியோர் நேற்று ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தி்றகு வருகைத்தந்தனர். கொழும்பு-05 பகுதியில் வசிக்கும் இவர்கள் ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் … Read more

தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான றறற.னழநநெவள.டம என்ற இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமீத் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பு

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல்நிலையத்தின்முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டது.. 2023 ஜனவரி 26ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஜனவரி 26ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல … Read more

சென்னை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்! இலங்கை பெண்கள் விமான நிலையத்தில் கைது

இலங்கையிலிருந்து இந்தியா சென்ற இரு பெண்கள் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்த நிலையில், சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் வந்து இறங்கும் பயணிகளை தீவிரமாக கண்காணித்துள்ளனர்.  பிண்ணனியில் உள்ளவர்கள் தொடர்பில் விசாரணை  இதன்போது கொழும்பிலிருந்து சென்னை வந்த விமானத்தில் வந்து இறங்கிய 2 இலங்கை பெண்களை சந்தேகத்தின் பேரில் தனியறைக்கு அழைத்து சென்று … Read more

முத்திரையிடப்படாத நிறுவைக் கருவிகளை பயன்படுத்துவோருக்கு எதிராக ……

கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்தக நிலையங்களில் உள்ள நிறுவை அளவு கருவிகளுக்கு முத்திரை பதிக்கும் பணி நேற்று (25) அந்த  மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள அளவீட்டு அலகுகள் திணைக்களத்தில் இடம்பெற்றது. வருடந்தோறும் தராசுகள் மற்றும் அளவை பொருட்களுக்கு முத்திரையிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஒரு வருட காலப்பகுதியில் முத்திரையிடாத கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட வர்த்தகர்களின் தராசுகளுக்கு முத்திரையிடப்பட்டது. முத்திரையிடப்படாத நிறுவை அளவு கருவிகளை பயன்படுத்தும் வர்த்தகர்களுக்கு எதிராக 1995ம் ஆண்டின் 35ஆம் இலக்க அளவீட்டு அலகுகள் … Read more