சிறுபோக நெற்செய்கைக்கு இலவச உர விநியோகம் – கமத்தொழில் அமைச்சர்

நெற்பயிர்ச் செய்கைக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற உரமான (Triple Super Phosphate (TSP)) ஐ எதிர்வரும் சிறுபோக பயிர்செய்கைக்கு அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பெரும்போகத்தின்போது நெற்செய்கையாளர்களுக்கு உரம் விநியோகிக்கப்படவிருந்த போதிலும், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான யுத்தத்தால், அந்நாடு உரம் ஏற்றுமதி  இடைநிறுத்தியிருந்தது. அதனால் எமக்கு அதனை இறக்குமதி செய்ய முடியவில்லை. தற்போது 36,000 மெட்ரிக் டொன் உரம் அடங்கிய கப்பல் ஒன்று அடுத்த மாதம் முதல் இரண்டு வாரங்களில் … Read more

கொழும்பில் முடங்கிய வீதி! ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையில் அமைதியின்மை – பொலிஸார் குவிப்பு (Live)

கொழும்பு – விமலதர்ம மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை இலங்கை துறைமுக அதிகாரசபையின் தொழிற்சங்கத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு கோட்டையிலிருந்து கொட்டாஞ்சேனைக்கு செல்லும் வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர் குவிக்கப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னோக்கி செல்லாமல் தடுக்கும் வகையில் பொலிஸார் வீதியின் குறிக்காக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரை தாண்டி முன்னோக்கி செல்ல முற்பட்ட போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையில் … Read more

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி சவூதி அரேபியாவிற்கு விஜயம்

சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சௌதின் அழைப்பின் பேரில் 2023 ஜனவரி 23 – 27 வரை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி சவூதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். வெளியுறவு அமைச்சர் பர்ஹான் அல் சவுத்தை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலந்துரையாடவுள்ளார். இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, வளைகுடா ஒத்துழைப்பு பேரவை மற்றும் மக்கா … Read more

இரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் சுற்றிவளைப்பு! இலங்கையில் சிக்கிய வெளிநாட்டவர்

மிரிஹான பகுதியில் திடீரென மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நைஜீரிய பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் (22.01.2023) இடம்பெற்றுள்ளது. செல்லுபடியாகும் வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த நைஜீரிய பிரஜையே (40 வயது) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வீடொன்றில் வைத்து சிக்கிய சந்தேகநபர் மிரிஹான – கங்கொடவில பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது மடிக்கணினி ரக கணினியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த நபர் ஏதேனும் … Read more

பிரசார நடவடிக்கைகளை அமைதியான முறையில் முன்னெடுக்குமாறு கோரிக்கை

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை அமைதியான முறையில் முன்னெடுக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை, தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பான முறைப்பாடுகளை தொலைபேசி/ தொலைநகல்/ வைபர் மற்றும் வாட்ஸ்அப் மூலமாகவும், மின்னஞ்சல் மற்றும் முகநூல் மூலமாகவும் தெரிவிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இராஜகிரிய தேர்தல் செயலகத்தின் இரண்டாவது மாடியில் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்துடன் தொடர்புகொள்ள  011 2860056, 011 2860059, … Read more

தபால் மூல வாக்களிப்பிற்கான,விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்று நிறைவு

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைவாக இந்தத் தர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்று நள்ளிரவு 12 மணி வரை விண்ணப்பிக்க முடியும். 29 மாநகர சபைகள், 36 நகர சபைகள் உட்பட 275 பிரதேச சபைகளுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்புமுனுக்களைப் … Read more

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகிறது. பரீட்சையை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதற்கமைவாக நாடளாவிய ரீதியில் இரண்டாயிரத்து 200 பரீட்சை நிலையங்களில் இன்று பரீட்சை ஆரம்பமாகிறது.இந்த முறை மூன்று லட்சத்து 31 ஆயிரத்து 709 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். 317 பரீட்சை இணைப்பு மத்திய நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன. பரீட்சை அனுமதிப் பத்திரங்கள் கிடைக்கப் பொறாதவர்கள் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதளத்தில் பிரவேசித்து அதனை தரவிறக்கம் செய்துகொள்ள … Read more

காலநிலையில் மீண்டும் ஏற்பட்டுள்ள மாற்றம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் வளி மாசுவின் அளவு மீண்டும் இயல்பை விட உயர்ந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலை இன்று(22.01.2023) தொடர்ந்து காணப்படும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார். வளிமண்டலம் வழமைக்குத் திரும்பும் இது தொடர்பில் மேலும் கூறுகையில்,இலங்கையில் வளி மாசுவின் அளவு மீண்டும் இயல்பை விட உயர்ந்துள்ளது. இந்நிலைமையில் இருந்து நாளை (23.01.2023) வளிமண்டலம் வழமைக்குத் திரும்பும் என தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டின் தென்பகுதியில் மேல், சப்ரகமுவ, ஊவா, … Read more

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலி

சீன நாட்காட்டியின்படி இன்று புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.  சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாழும் சீனர்கள் தங்கள் புத்தாண்டு பிறப்பை கொண்டாடி வருகின்றனர்.   அமெரிக்கா இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மாண்டெரி பார்க் பகுதியில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் இன்று சீன புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அப்போது, புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது மர்ம நபர்கள் சிலர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூடில் … Read more