நுவரெலியாவின் கோர விபத்திற்கு காரணமான பேருந்து சாரதி கைது

நுவரெலியா நானுஓயா பகுதியில் நேற்று (20.01.2023) இரவு அதிவேகமாக பயணித்த பேருந்து ஒன்று வான் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து பேருந்து சாரதியை இன்று(21.01.2023) கைது செய்துள்ளனர். 62 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்து சாரதியின் கவனக்குறைவு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் போது குறித்த பேருந்து கவனக்குறைவாக செலுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது. அதிவேகமாக சென்ற குறித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் கொழும்பு தர்ஸ்டன் … Read more

இரவு 7 மணிக்கு பின்னர் மின்வெட்டு இல்லை!

உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தல் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இரவு 7.00 மணிக்கு பின்னர் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பரீட்சை திணைக்களம் விடுத்த கோரிக்கை பரீட்சை திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, மின்சார சபையின் தேவைகளையும் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இன்றும் (21) நாளையும் (22) இரண்டு மணித்தியாலங்கள் … Read more

சர்வதேச நீதியை முற்றாக மறுதலிக்கப்போகும் கனடாவின் தடை

Courtesy: கூர்மை ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்காக நேர்த்தியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பல காரியங்கள் – கடமைகள் சர்வதேச சமூகத்துக்கு இருக்கும் நிலையில், அவசர அவசரமாகக் குறுக்குவழியில் ராஜபக்ச குடும்பத்தை மாத்திரம் தண்டிப்பதாகக் கூறிக் கொண்டு, இலங்கைக்கு ஆறுதலான சமிக்ஞையைக் கொடுத்திருக்கிறது கனடா. இறுதிப் போரில் ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்படுவதையும் பல இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து அவலப்படுவதையும் ஐக்கிய நாடுகள் சபை தடுக்கத் தவறியது. வன்னியில் இருந்து ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச தொண்டு நிறுவனங்கள் இலங்கை … Read more

இலங்கையை உலுக்கிய நானுஓயா விபத்து! கவலை தரும் காணொளிகள் குறித்து எச்சரிக்கை

நானுஓயா பகுதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தின் கவலை தரும் காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என  அமைச்சர் ஜீவன் தொண்டமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  நானுஓயா – ரதெல்ல பகுதியில் நேற்று மாலை, கொழும்பில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த  பேருந்து ஒன்று  வான் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியவற்றுடன் மோதுண்டதில் ஏழு பேர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயமடைந்திருந்தனர்.  உயிரிழந்தவர்களின் விபரம் இதன்போது, வானில் பயணித்த 9 பேரில் ஆறு  பேரும் முச்சக்கர வண்டி சாரதியும் … Read more

தேர்தல் ஆணைக்குழுவின் கலந்துரையாடலை புறக்கணித்த கமல் குணரத்ன

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்த போதிலும், அவர் ஆணைக்குழுவிற்கு பிரசன்னமாகியிருக்கவில்லை. கடந்த புதன்கிழமை ஆணைக்குழுவிற்கு வருகை தருமாறு பாதுகாப்பு செயலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பொலிஸ்மா அதிபரை அழைத்து கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதால் , பாதுகாப்பு செயலாளர் இதில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இல்லை அத்தோடு இவ்வாறு செயலாளர்களை அழைத்து கலந்துரையாடுவதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு … Read more

அரபு நாடு ஒன்றில் இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள்! அமைச்சருக்கு வழங்கப்பட்ட உத்தரவாதம்

கடந்தாண்டு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக 35,572 இலங்கை பணியாளர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர், இது இலங்கையில் இருந்து வெளியேறிய மொத்த பயணங்களில் 11.4% ஆகும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.   ஐக்கிய அரபு அமீரகத்திற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போதே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  இதன்போது, ஐக்கிய அரபு அமீரகம் தமது நாட்டிற்குள் சட்டவிரோத குடியேற்றத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக   அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார்.  … Read more

விபத்தில் காயமடைந்த மாணவர்களை பார்வையிட நுவரெலியா செல்லும் கல்வி அமைச்சர் (video)

நுவரெலியா, ரதல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த 53 பேர் தொடர்ந்தும் நுவரெலியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ​​ ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மீதமுள்ளவர்கள் 5, 6, 7, 8 ஆகிய பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு, தேஸ்டன் கல்லூரியில் இருந்து சுற்றுலா பயணமாக சிறுவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன் … Read more

முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபா என அறவிக்கப்பட்டுள்ளது. சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் இன்று (21.01.2023) முதல் இந்த அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயத்தின் பிரகாரம் முட்டை விற்பனை செய்யப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் இந்த விலைக்கு முட்டை விற்பனை செய்ய முடியாது … Read more

தனவரவை பெறப்போகும் இரு ராசிக்காரர்கள்: அதிலும் தனுசு ராசிக்காரர்களுக்கு – இன்றைய ராசிபலன்

நாளை என்ன நடக்கும் என்று அறியும் சக்தி பொதுவாக மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்றாகும். ஆனால் வேதத்தின் கண்ணாக விளங்கும் ஜோதிடத்தின் மூலம் நமது நாளைய தினத்தின் பலனை நாம் அறியும் சாத்தியம் உள்ளது. எனவே நாளொன்றுக்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் … Read more

வார இறுதி மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

நாட்டில் எதிர்வரும் வார இறுதி நாட்களில் (21,22) சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் வார இறுதி நாட்களில் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 02 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு பகலில் ஒரு மணித்தியாலமும், இரவில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன், எதிர்வரும் திங்கட்கிழமையும் நாடளாவிய ரீதியில் … Read more