பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும், அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் மதிப்பு மாறாமல் உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 371.39 ரூபாவாகவும், கொள்வனவு விலை 360.55 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி இலங்கை மத்திய வங்கியின் தகவலுக்கமைய, பல வெளிநாட்டு … Read more

தொலைபேசியில் வரும் ஆபத்து! இலட்சக்கணக்கான பணத்தொகையை இழக்கும் நிலை

பிரபல தொலைபேசி வலையமைப்பு ஒன்றின் பெயரைப் பயன்படுத்தி  நடத்தப்படும் பாரிய மோசடி நடவடிக்கை தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.  இதன் மூலம் பொதுமக்கள் தங்களது பணத்தினை இழக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.  குறுஞ்செய்தி மற்றும் தொலைபேசி அழைப்புக்கள் ஊடாக இந்த மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.  பிரபல தொலைபேசி வலையமைப்பினால் நடத்தப்பட்ட குலுக்கள் பரிசுப் போட்டியில் தங்களது இலக்கம் வெற்றிப் பெற்றுள்ளதாகவும்,  மிகப்பெரிய பணப்பரிசினை வென்றுள்ளதாகவும், குறுஞ்செய்தி மூலம்  இதனை அறிவித்தபோதும்  தாங்கள் இதனை கவனத்திற் கொள்ளவில்லை என்று … Read more

இலங்கை – இந்தியா இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கருக்குமிடையில் இன்று காலை நடைபெற்ற சந்திப்பின்போது இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில் கூட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உடன்பாடு எட்டப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இங்கு வருகை தந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு ஜனாதிபதி மகத்தான வரவேற்பளித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியை உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்த ஜெய்சங்கர் … Read more

11 நாட்களில் நீங்களும் உடல் எடையை குறைக்கலாம்! பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா சீக்ரெட்

11 நாட்களில் உடல் எடையைக் குறைத்த அனுபவத்தை தனது பிரத்தியேக யூடியூப் சேனலில் பகிர்ந்துக் கொண்டுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா. பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா மயிலாடுதுறையில் பிறந்த ஹேமா, அங்குள்ள சேனலில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் ஆரம்பித்தார். அங்கிருந்து தான் அவரின் மீடியா பயணம் ஆரம்பமானது. பின்னர் சில தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். சில சீரியல்களில் தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். ஆனால் இவரின் பெயரை அறிந்துக்கொண்ட தொடர்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த … Read more

“மனோ கணேசன் என்னை ஏன் உற்றுப் பார்க்கின்றார்”! கொழும்பில் ரணில் வழங்கிய பதில் (Photos)

இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனி பிரச்சினை இருப்பதன் காரணமாகவே அவரவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கில் நாம் அனைவரையும் ஒன்றாக இணைத்துப் பேச்சு நடத்தவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அவர்களைத் தனித்தனியாக அழைத்துப் பேச்சை முன்னெடுக்கின்றோம், எனவே பிரச்சினைகளைக் கட்டம் கட்டமாகத் தீர்ப்போம், அப்போதுதான் 75ஆவது ஆண்டு சுதந்திர தின நிகழ்வின் போது நாம் அனைவரும் ஒரு தாய் மக்களாக வாழும் நிலை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார். கொழும்பு … Read more

உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஜனவரி 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்கமைய, உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் உயர்தர பரீட்சையின் போது இலத்திரனியல் சாதனங்களை கொண்டு செல்லவும்,வைத்திருக்கவும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பரீட்சாத்திகள் இந்த விதிகளை மீறினால் ஐந்தாண்டு காலத்திற்கு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தடை விதிக்கப்படும் என பரீட்சை திணைக்கள … Read more

வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு புதிய வரியா….! அரசாங்கம் வெளியிட்டுள்ள விளக்கம்

சமகால அரசாங்கம் வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு 60 டொலர் புதிய வரி விதித்துள்ளதாக வெளியான செய்தி உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான எவ்வித வரியும் தாம் விதிக்கவில்லை என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. விமான டிக்கெட் கட்டணத்தில் ஏற்கனவே அந்த வரி உள்ளடங்கியுள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. இதனால் தனியாக ஒரு கட்டணம் வரியாக அறவிடப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது. Source link

யாழ்ப்பாணம் தொடர்பில் சர்வதேச ஊடகம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், ஆசியாவிலேயே மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ள 18 இடங்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. CNN Travel’sஇனினால் மதிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை விபரிக்கும் CNN Travel’s, பெரும்பாலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் அழகிய தெற்கு கடற்கரை அல்லது அதன் மத்திய மலை நாட்டிற்குச் செல்வதாக குறிப்பிட்டுள்ளது. இவை இரண்டும் கொழும்பில் இருந்து இலகுவாக சென்றடைய கூடிய வகையில் உள்ளதென குறிப்பிடப்படுகின்றது. இலங்கை வரும் இன்ஸ்டாகிராம் பதிவாளர்களுக்கு இந்த … Read more