பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரன் ஜனாதிபதியை சந்தித்தார்

தனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்துள்ள பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரன் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்ட கெமரன், ஜனாதிபதிக்கு புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

கருணை காட்டுமா அமெரிக்கா….! மனைவியுடன் பரிதவிக்கும் கோட்டபாய (video)

அமெரிக்காவில் மீண்டும் குடியுரிமை பெற்றுக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முயற்சித்து வருவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது குடும்பத்துடன் டுபாயில் தங்கியுள்ள கோட்டாபய அங்கிருந்து அமெரிக்கா செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அமெரிக்க குடியுரிமையை மீள வழங்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறையிடம் தனது வழக்கறிஞர்கள் மூலம் கோட்டாபய வேண்டுகோள் விடுத்துள்ளார். 2019ஆம் இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நோக்கில் அமெரிக்க குடியுரிமையை நீக்கியிருந்தார். இந்நிலையில் அதனை மீண்டும் பெற்றுக்கொள்ள கோட்டபாய முயற்சித்து வரும் … Read more

இன்று முதல் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட முற்கொடுப்பனவு

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான 4,000 ரூபா விசேட கொடுப்பனவு இன்று (02) முதல் வழங்கப்படுகிறது. அந்த கொடுப்பனவை அடுத்த மாதம் இறுதி வரை  பெற்றுக் கொள்ள அரச ஊழியர்களுக்கு வாய்ப்பு உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.   இந்த விசேட முற்கொடுப்பனவு செலுத்துவது தொடர்பான சுற்றறிக்கை பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன்  வெளியிடப்பட்டுள்ளது.   2023 பெப்ரவரி 28 ஆம் திகதிக்குப் பின்னர், இந்த கொடுப்பனவை … Read more

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பல்துறை ஆய்வு தொடர்பான சர்வதேச மாநாடு (ICMR 2030)

“யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற தொனிப்பொருளில் பல்துறை ஆய்வு தொடர்பான சர்வதேச மாநாடு (ICMR 2030) நாளை  ( 03 ) மற்றும் நாளை மறுநாள்  (04)  கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நல்லையா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பல்துறை சார் ஆய்வுகள் மையம் மற்றும் இந்தியாவின் மனித திறன்களுக்கான ஸ்ரீசத்திய சாய் பல்கலைக்கழகம் ஆகியவற்றின்அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   இம்மாநாட்டில் பங்களாதேஷ் ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அனு முஹம்மது, உலகின் முன்னணி நுண்ணுயிரியல் … Read more

புத்தாண்டில் 2500 குடும்பங்களை இலக்காகக் கொண்ட சமூக சமையலறை வேலைத்திட்டம் ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்புமிக்க ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையை மையமாகக் கொண்ட சமூக சமையலறை திட்டம் நேற்று (01) ஆரம்பமானது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க இந்தத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். கொம்பனித்தெரு பொலிஸ் எல்லைக்குட்பட்ட ஹுனுபிட்டிய, கொம்பனித்தெரு, காலி முகத்திடல், இப்பன்வல, வேகந்த ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குள், உணவு கிடைப்பதில் சிரமம் உள்ள 2500 குடும்பங்களை இலக்காகக் கொண்டு இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த சமூக சமையலறைத் … Read more

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைப்பு

இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இரண்டு வகையான எரிபொருட்களின் விலையை குறைக்க இலங்கை பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, சிலோன் ஒயிட் டீசலின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் விலையை 10 ரூபாவினால் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சிலோன் ஒயிட் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 405 ரூபாவாகவும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 355 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Source link

வெகுஜன ஊடக அமைச்சில் புதிய வருடத்தில் கடமைகள் ஆரம்பம்

2023 ஆம் ஆண்டில் வெகுஜன ஊடக அமைச்சில் ஊழியர்கள் கடமைகளை ஆரம்பிப்பதற்கான் வைபவம் இன்று (01) காலை அந்த அமைச்சின் வளாகத்தில் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மற்றும் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.. செயலாலரினால் தேசிய கொடி ஏற்றப்பட்ட பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் உள்ளிட்ட அனைவரையும் நினைவு கூர்ந்து இரண்டு நிமிடம் மௌனம் அனுஷ்டிக்கப்பட்டது.

சாரதி அனுமதிப்பத்திலும் QR குறியீடு

இந்த ஆண்டு முதல் சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும் ஒவ்வொரு சாரதிகளுக்கும் QR குறியீட்டுடனான புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் (அபிவிருத்தி) குசலானி டி சில்வா தெரிவித்தார். தற்போது இலங்கையர்களிடம் நான்கு வகையான சாரதி அனுமதிப்பத்திரங்கள் உள்ளன, அவை அனைத்தும் மீண்டும் புதுப்பிக்கப்படும் போது, அவர்களுக்கு QR குறியீட்டுடனான புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன

பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் புதிய செயலாளராக நீல் பண்டார ஹபுஹின்ன பதவியேற்றார். அவர் அமைச்சில் தனது கடமைகளை ஆரம்பித்தார். பல அமைச்சுக்களில் செயலாளராக பதவி வகித்த அவர், இந்த அமைச்சின் செயலாளராக பதவி ஏற்கும் முன்னர் பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராக பணியாற்றினார்.