சர்வதேச லொட்ரி கழகத்திடமிருந்து இலங்கைக்கு 60 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்து வகைகள்

இலங்கை சுகாதார திட்டத்திற்கு அத்தியாவசியமான மருந்து பொருட்கள் சிலவற்றை சர்வதேச லொட்ரி கழகம் வழங்கியுள்ளது. இவற்றின் பெறுமதி 60 மில்லியன் ரூபா. இந்த அமைப்பின் சர்வதேச தலைவர் ஜெனிப்பர் சொன்ஜ் இந்த மருந்துகளை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் கையளித்தார். கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான மருந்து வகைகளும், சிறுவர்களுக்கான மருந்து வகைகளும் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வின் போது சுகாதார அமைச்சர் கருத்து தெரிவிக்கும் போது முதற்கட்டத்தின் கீழ் இந்த மருந்து வகைகளை சர்வதேச லொட்ரி கழகம் … Read more

யாழ். குருநகர் கடற்பரப்பில் 181 கிலோ கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் இன்று (15) காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 181 கிலோ கிராம் எடையுள்ள கேரள கஞ்சா (ஈரமான எடை) கொண்ட டிங்கி படகுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.    கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நாட்டைச் சூழவுள்ள கடல் மற்றும் கடற்கரையை உள்ளடக்கி, கடற்படையினர் வழக்கமாக ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.   இதன்படி, யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் … Read more

200 கிலோ ஐஸ் போதைப்பொருள் ,தெற்கு கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றல்

200 கிலோவுக்கு மேற்பட்ட ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஒரு தொகை ஹெரோயின் போதைப் பொருட்களுடன் 2 டிங்கி படகுகள் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படை, அரச புலனாய்வு சேவை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் ஒன்றிணைந்து தெற்கு கடற்படையில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடற்படையின் அறிக்கைக்கு அமைவாக பல்லின கடற்றொழில் 2 படகுகள் , மற்றும் போதை பொருளுடன் இலங்கையை சேர்ந்த சில சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 2 வள்ளங்களும் … Read more

ஜனசக்தி நிறுவனத்தின் தலைவர்

ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சந்தேக நபருக்கும் தினேஷ் ஷாப்டருக்கும் இடையில் 138 கோடி ரூபாய் கொடுக்கல் வாங்கல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கொலையின் முக்கிய சந்தேக நபராக பொலிஸாரால் தேடப்படுபவர், அந்த தொகையை செலுத்தாத காரணத்தால் இதற்கு முன்னர் ஒருமுறை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார். அவர் பொரளை மயானத்தில் காருக்குள் வைத்தே … Read more

இலங்கைக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையில் சட்ட மறுசீரமைப்பு குறித்து பேச்சுவார்த்தை

நீதி ,சிறைச்சாலை அலுவல்கள் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச சட்ட மறுசீரமைப்பு குறித்து இலங்கையில் உள்ள தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். இலங்கைக்கும், தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை மேம்படுத்தும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதன்போது இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு சர்வதேச ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இதேவேளை சட்ட மறுசீரமைப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் அடிப்படை மனித உரிமைகளை வலுப்படுத்துதல் மனித உரிமை ஆணைக்குழுவை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு தென்னாப்பிரிக்க … Read more

செங்கலடி, ஏறாவூர் பிரதேசங்களில் உணவகங்கள் சுற்றிவளைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகர் மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவுகளில் உணவகங்கள்  பொதுச் சுகாதார அதிகாரிகலால்  சுற்றிவளைக்கப்பட்டன.   இதன்போது இப்பிரதேசத்திலுள்ள ஹோட்டல்கள், பேக்கரிகள், பழக்கடைகள், சிற்றுண்டிச் சாலைகள், உணவு ப் பொருள் கடைகள் என 112 இடங்களை அதிகாரிகள் நேற்று (15) திடீர் பரிசோதனை செய்தனர். மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய  சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் மற்றும் 5 மருத்துவ சுகாதார அதிகாரிகள் பணிமனை ஆகியவற்றின்  60 அதிகாரிகள் இப்பரிசீலனையில் ஈடுபட்டனர். பொது மக்களின் … Read more

மருத்துவ,உயிரியல் கழிவுகளை அகற்றுவதற்கு கோம்பயன் மயானத்தில் சுத்திகரிப்பு நிலையம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை அகற்றுவது  தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைக் குழு கூட்டம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் இன்று (16) காலை யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ் போதனா வைத்தியசாலையில் வெளியேற்றப்படுகின்ற மருத்துவ கழிவுகள் ( Medical Waste) மற்றும் உயிரியல் கழிவுகளை (Bio Medical Waste) அகற்றுவதற்காக கோம்பயன் மயானத்தில் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவுவது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க … Read more

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச சந்தர்ப்பம்

வரவிருக்கும் தேர்தலில் புதிய கூட்டணி போட்டியிடும் என்பதனை எதிர்காலத்தில் முடிவெடுப்போம் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் ஆளுங் கட்சியின் பிரதம அமைப்பாளரும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் நேற்று (15) நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமையுமா என ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தற்போது ரணில் -ராஜபக்ச அரசாங்கம் இருப்பதாக குறிப்பிட்டார். இரு தரப்பும் அனுபவம் வாய்ந்த இரு அணிகள் என்பதால் கூட்டணி பிரச்சினை … Read more

பாலின சமத்துவம் ,பெண்களை வலுவூட்டுவது தொடர்பான சட்டமூலத்தின் முதலாம் வரைபு நிறைவு  

பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவது தொடர்பான சட்டமூலத்தின் முதலாம் வரைபு நிறைவடைந்துள்ளதாக இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் தெரியவந்தது. விசேட குழு அதன் தலைவர் பாரளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி பர்னாந்துபுல்லே தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த … Read more

எதிர்வரும் சில மாதங்களில் சமூக பாதுகாப்பு வலையமைப்பு பலப்படுத்தப்படும். – பிரதமர் தினேஷ் குணவர்தன

எதிர்வரும் சில மாதங்களில் சமூக பாதுகாப்பு வலையமைப்பை பலப்படுத்த அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் தெரிவித்தார். தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபையில் நேற்று (2022/12/15) நடைபெற்ற ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகள் கூட்டத்தில், சமூக பாதுகாப்பு வலையமைப்பை பலப்படுத்த சர்வதேச நாணய நிதியம் ஒத்துழைப்பை வழங்குவதாக ஏற்கனவே உறுதியான வாக்குறுதியை அளித்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் சமூக பாதுகாப்பு வலையமைப்பு வசதிகளை குறைக்காமல் பேணுவதற்கு வரவுசெலவுத்திட்டத்தில் அரசாங்கம் … Read more