காலநிலை தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை – சூறாவளி ஏற்படும் அபாயம்

இலங்கையில் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலநிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அந்த நாட்களில் மழை அதிகரிக்குமா அல்லது சூறாவளி ஏற்படுமா என்பது உறுதி செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை அந்தமான் தீவைச் சூழவுள்ள நிலைமை தற்போதும் காணப்படுவதாகவும், காற்றழுத்தத் தாழ்வு நிலை சிறிதளவு வளர்ச்சியடைந்து வருகிறது. இது … Read more

மாண்டஸ் சூறாவளியினால் இலங்கையில் பதிவான சேதவிபரங்கள் வெளியானது!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் கடற்பகுதியில் ஏற்பட்ட ‘மாண்டஸ்’ சூறாவளியினால் 16 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த சூறாவளியினால் வீசிய பலத்த காற்று மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக 5,640 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், அதில் 5 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது. சேத விபரங்கள் வெளியானது பதுளை, மொனராகலை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, இரத்தினபுரி, கேகாலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், அம்பாந்தோட்டை, அனுராதபுரம் மற்றும் புத்தளம் … Read more

யாழ். – சென்னை விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

யாழ் சர்வதேச பலாலி விமான நிலையத்திற்கும் ,சென்னைக்கும் இடையிலான விமான சேவைகள் மீண்டும் இன்று (12) ஆரம்பமாகிறது. இரண்டு வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பமாகும் இந்த விமான சேவைக்கு அமைவாக , சென்னை விமான நிலையத்தில் இருந்து பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு அலையன்ஸ் ஏர் விமானம் இன்று காலை 10:50 அளவில் பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைய உள்ளது. அதே விமானம் முற்பகல் 11:50 மணிக்கு சென்னைக்கு புறப்பட உள்ளதாக பலாலி … Read more

வடக்கு, கிழக்கு ,ஊவா மாகாணங்களில் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 டிசம்பர்12ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 டிசம்பர்12ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. புத்தளம்,அம்பாறை,மட்டக்களப்பு, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் … Read more

சர்வதேச முதல் பெண் ரோட்டரி தலைவர் இலங்கைக்கு விஜயம்

ரோட்டரி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் ஜெனிபர் ஜோன்ஸ் இலங்கைக்கு விஜயம் மெற்கொண்டுள்ளார். இவர் ரோட்டரியின் 115 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் தலைவராக திகழ்கிறார். நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணமாக, இன்று (11) இலங்கை வந்துள்ளார்.  ஜெனிபர் ஜோன்ஸ் கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள ரோட்டரி கிளப் ஆஃப் வின்ட்சர்-ரோஸ்லேண்டின் உறுப்பினரான ஜோன்ஸ், வின்ட்சரில் விருது பெற்ற ஊடக நிறுவனமான Media Street Productions Inc. இன் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். அவர் வின்ட்சர் பல்கலைக்கழகத்தின் ஆளுநர் … Read more

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகப் பிரதிநிதிகள் ஓமானுக்கு விரைவு

ஓமானில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் ஆட்கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட சம்பவம் குறித்த விசாரணையை மேற்கொள்வதற்காக, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகப் பிரதிநிதிகள் ஓமானுக்குச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அங்குள்ள இலங்கையர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இவர்கள் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.   வெளிநாட்டு வேலைவாய்ப்பு சட்டவிதிகளை மீறிய வகையில் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பிய சம்பவம் தொடர்பாக வெளியான செய்திகள் தொடர்பில் விசேட கவனத்தை இவர்கள் செலுத்தியுள்ளனர்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் மீது தாக்குதல்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் மற்றும் அவரது புதல்வரைத் தாக்கியவர்களை கண்டுபிடிப்பதற்கு பொலிசார் விசேட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். நேற்றிரவு முன்னாள் உபவேந்தரின் உத்தியோகபூர்வ வீட்டை முற்றுகையிட்டு சுமார் 300 மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவத்தை அடுத்து பேராதனைப் பொலிசார் சிலர் அங்கு விஜயம் செய்துள்ளனர். இருப்பினும் அந்த சந்தர்ப்பத்தில்தாக்குதல் நடத்தியவர்கள் எவரும் அங்கு காணப்படவில்லை. முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அத்துல சேனாரத்னவின் புதல்வர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் நிலை காரணமாக இந்தத் தாக்குதல் … Read more

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் – ஜனாதிபதி வலியுறுத்தல்

நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் இளைஞர்களின் பங்களிப்பு அத்தியாவசியமானதென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.இத்தீர்வு அடுத்த 25 வருடங்களை கருத்திற் கொண்டதாக அமைய வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைக்கும் அப்பால் சென்று இளைஞர்களின் எதிர்காலத்துக்காக நாட்டைத் தயார்படுத்த தான் தீர்மானித்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். இளைஞர் சந்ததியினருக்கு உதவும் வகையில் அடுத்த 25 ஆண்டுகளுக்குப் பொருந்தும் வகையில், டிஜிட்டல் அபிவிருத்தியுடன் கூடிய எதிர்காலத்திற்கு ஏற்ற தீர்வுகள் குறித்தே நாம் கவனத்திற் கொள்ள வேண்டுமென்றும் அவர் … Read more

உலகக் கிண்ண உதைபந்தாட்டப்போட்டித் தொடரின் இறுதிச் சுற்று: 4 அணிகள் தகுதி

உலகக் கிண்ண உதைபந்தாட்டப்போட்டித் தொடரின் இறுதிச் சுற்றுப் போட்டிக்கு ஆர்ஜென்டீனா – குரோஷியா-பிரான்ஸ் மற்றும் மொரக்கோ அணிகள் தகுதி பெற்றுள்ளன. முதல் அரையிறுதிச் சுற்றுப்போட்டி எதிர்வரும் 14ம் திகதி இடம்பெறவுள்ளது. ஆர்ஜென்டீனா மற்றும் குரோஷிய அணிகளுக்குஇடையில் இந்தப் போட்டி நடைபெறும்.   இரண்டாவது அரையிறுதிப் போட்டிஎதிர்வரும் 15ம் திகதி நடைபெறும். இதில் பிரான்ஸ் மற்றும் மொரக்கோ அணிகள்பலப்பரீட்சை நடத்தவுள்ளன.  மொரக்கோ அணி உலகக் கிண்ணஉதைபந்தாட்டப் போட்டியில் இறுதிச் சுற்றுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள முதலாவதுசந்தர்ப்பம் இதுவாகும்.