இந்தியா- இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான போட்டித்தொடர்

இலங்கை மற்றும் இந்தியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20 தொடர்களுக்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் பேரவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி ஜனவரி 3ஆம் திகதி முதல் ஜனவரி 15ஆம் திகதி வரை 3 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் மூன்று T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்தியா- இலங்கை தொடர் அட்டவணை வருமாறு: முதல்  T20 போட்டி – ஜனவரி … Read more

இலங்கைக்கு தங்கம் கொண்டு வருவது குறித்து வெளியான தகவல் – நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு சிக்கலா..!

24 கரட் தங்கத்தை நாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பில் குறிப்பாக 24 கரட் தங்கம் கடத்தப்படுவதை தடுக்கத் தேவையான சுற்றுநிரூபங்கள் மிக விரைவில் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தங்கக் கடத்தல்காரர்களால் இலங்கைக்கு மாதாந்தம் 100,000,000 அமெரிக்க டொலர் நட்டம் ஏற்படுகிறது. சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு தங்கம் கொண்டு வரப்படுகின்றமையே இதற்குக் காரணம். இலங்கை பாரிய அந்நியச் செலாவணி நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில், இந்த … Read more

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் மின்வெட்டை தடுக்க முடியாது! இ.மி.சபையின் பொறியியலாளர்கள்

மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மின்வெட்டை தடுக்க முடியாது என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்த ஆண்டு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. நீர் நிலைகளில் நீர் மட்டம் குறைவடைதல் மற்றும் நிலக்கரியின் விலை அதிகரிப்பு ஆகிய காரணிகளினால் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என சுட்டிக்காட்டியுள்ளனர். அடுத்த வருட ஆரம்பத்தில் மின் விநியோகம் அத்துடன் அடுத்த ஆண்டில் மழை வீழ்ச்சி குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிலக்கரி மற்றும் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு போதியளவு டொலர் இல்லாத காரணத்தினால் அடுத்த … Read more

புலம்பெயர் தொழிலாளர்களினால், இந்த ஆண்டு இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டோடலர்கள்

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களினால் 2022 ஆம் ஆண்டில் ,இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேற்பட்ட தொகை அனுப்பப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் இவர்கள் நாட்டுக்கு அனுப்பிய தொகை 384.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இத்தொகை 30 மில்லியன் அமெரிக்க டோலருக்கும் அதிகமாகும். ஒக்டோபர் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர்களினால் இலங்கைக்கு 355.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளன. 2021 ஆம் … Read more

சென்னை விமான நிலையத்தில்,இரண்டாவது நாளாக இன்றும் சேவைகள் பாதிப்பு

Mandous” புயல் எதிரொலியால் சென்னை விமான நிலையத்தில் ,இரண்டாவது நாளாக இன்றும் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மாண்டஸ் புயல் எதிரொலியாக நள்ளிரவில் சென்னை வந்த 7 விமானங்கள் ஐதராபாத், பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன. சென்னையில் இருந்து செல்ல வேண்டிய 20 விமானங்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டு காலதாமதமாக புறப்பட்டுள்ளன. இரண்டாவது நாளாக திருவனந்தபுரம், தூத்துக்குடி, திருச்சி, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், விஜயவாடா ஆகிய 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கொழும்பில் இன்று சில பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தம்

கொழும்பில் இன்று(10) சில பகுதிகளில் 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது. இன்று (10) காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை, 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலை நீர் விநியோக நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக பின்வரும் பகுதிகளுக்கான இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுகிறது: கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை,  கடுவெல மாநகர சபை, மஹரகம,கொலன்னாவ நகரசபை, கோட்டே, பொரலஸ்கமுவ  … Read more

“Mandous” மாண்டஸ் புயலின் மையப்பகுதி தமிழக கரையை கடந்தது

தமிழக மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயலின் மையப்பகுதி இன்று அதிகாலை 2.30 மணி அளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.  

இலங்கை பிரஜைகளுக்கு மீண்டும் இந்திய E-visas

இலங்கை பிரஜைகளுக்கான இ-விசாக்களைE-visas  வழங்கும் நடவடிக்கைகளை இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது. வசதியான பயணத்தை செயல்படுத்துவதன் மூலம், ஓய்வு, வணிகம், மாநாடு மற்றும் பலவற்றிற்காக இந்தியாவிற்கு வருகை தர விரும்பும் இலங்கையர்களுக்காக இந்த இணைய தள இ-விசாக்களை நடைமுறையை இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.  indianvisaonline.gov.in/evisa/tvoa.htm என்ற இணைய தள முகவரி மூலம் இதற்காக விண்ணப்பிக்க முடியும் 

நாட்டை பாதிக்கும் காலநிலை மற்றும் வானிலைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் ஜனாதிபதியின் “காலநிலை செழுமைத் திட்டத்தில்” உள்ளடக்கப்பட்டுள்ளன

நாட்டை பாதிக்கும் காலநிலை மற்றும் வானிலைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் ஜனாதிபதியின் “காலநிலை செழுமைத் திட்டத்தில்” உள்ளடக்கப்பட்டுள்ளன– காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன உலக நாடுகள் முகங்கொடுத்துள்ள காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகள் எதிர்காலத்தில் எமது நாட்டையும் பாதிக்கும் என்பதனை உணர்ந்ததன் காரணமாகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், “காலநிலை செழுமைத் திட்டத்தை” தயாரித்ததாக காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார். நாட்டின் வளிமண்டலத்தின் தரம் கடந்த … Read more