சர்வதேச லயன்ஸ் கழகத்தின் உதவிக்கு ஜனாதிபதி பாராட்டு.

இலங்கையில் உள்ள இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக சர்வதேச லயன்ஸ் கழகம் வழங்கியுள்ள ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பாராட்டினார். பியகம தொழிற்பயிற்சி நிலையத்தை நிறுவுவதற்கு லயன்ஸ் கழகம் வழங்கிய உதவியை அவர் வரவேற்றார். இளைஞர்களின் ஆக்கத் திறன்களைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலம் 2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றும் ஜனாதிபதியின் தொலைநோக்கை நனவாக்குவதற்கு இத்தொழிற்பயிற்சி நிலையம் வழிவகுக்கும்.   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் … Read more

வலுவிழந்து கரையை நோக்கி நகர்கிறது மண்டோஸ் புயல்!

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர புயலான மண்டோஸ் வலுவிழந்து புயலாக மாறி கரையை நோக்கி நகர்ந்து வருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மண்டோஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மண்டோஸ் புயலின் வெளிப்பகுதி மாமல்லபுரம் அருகே … Read more

மருந்துக் கொள்முதலுக்கு வெளிநாட்டு நிதியுதவிகள் உரிய முறையில் பயன்படுத்தப்படாமை ………

மருந்துக் கொள்முதலுக்கு வெளிநாட்டு நிதியுதவிகள் உரிய முறையில் பயன்படுத்தப்படாமை குறித்து பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய பேரவையின் உப குழு கவலை இந்திய அரசாங்கம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வங்கி ஆகியவற்றினால் சுகாதார அமைச்சுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளபோதும் அவற்றை அரசதுறையினர் மருந்துக் கொள்முதலுக்கு உரிய முறையில் பயன்படுத்தப்படாமை குறித்து பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய … Read more

ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு எடுத்துவரப்பட்ட பொருட்களால் எழுந்த புதிய சர்ச்சை

தனியார் நிறுவனம் ஒன்றினால், நாடாளுமன்றில் அமைந்துள்ள ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு கட்டில், மெத்தை மற்றும் கதிரைகள் எடுத்து வரப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இத்தகவலை வெளியிட்டுள்ளார். விசாரணை இது தொடர்பான ரசீதுகளை சபையில் சமர்ப்பித்த நாடாளுமன்ற உறுப்பினர், 3லட்சத்து 42 ஆயிரம் பெறுமதியான இரட்டையர் கட்டில் மற்றும் மெத்தையும், 273ஆயிரம் ரூபா பெறுமதியான கதிரைகளும் ஜனாதிபதியின் அலுவலகத்துக்கு எடுத்து வரப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.  இந்த பொருட்கள் எதற்காக கொண்டு வரப்பட்டன? … Read more

சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் என்பன மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டன.  

சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் என்பன மேலதிக வாக்குகளால்  திருத்தங்களுடன் இன்று (09) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்தச் சட்டமூலங்கள் தொடர்பான விவாதம் இன்று (09) காலை முதல் நடைபெற்றதுடன், சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரியிருந்தனர். இதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக  82 வாக்குகளும், எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன் பின்னர் குறித்த சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு … Read more

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின்பல நிர்வாக சிக்கல்கள்

முறையான விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளருக்குப் பணிப்பு… அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் அழைப்பு…  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் கடந்த 08ஆம் திகதி அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) ஆராயப்பட்டது. இதில், கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள 21 அடிப்படை விடயங்கள் குறித்து … Read more

வானிலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு : இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை இன்றிலிருந்து படிப்படியாக குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.   தென்மேல் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள மாண்டஸ் சூறாவளி காரணமாக கடந்த இரு தினங்களாக நிலவும் குளிரான வானிலை இன்றிலிருந்து குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள மாண்டஸ் சூறாவளியின் தாக்கத்தினால் பதுளை, மொனராகலை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, கேகாலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் வீசிய கடும் காற்றினால் சுமார் 4,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய … Read more

சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் யுனிசெப் அமைப்புடன் இணைந்து பாராளுமன்றத்தில் விசேட நிகழ்வு

ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமை தொடர்பான சமவாயம் மற்றும் சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் விசேட வைபவம் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் நடைபெற்றது. சிறுவர்களின் உரிமைகளைத் தொடர்ந்து பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக, “சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம்” மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) என்பன இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. 1989ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமை தொடர்பான சமவாயத்துக்கு தற்பொழுது 33 … Read more