பல் திறன் அபிவிருத்தி சேவைப் படையணிக்கு உள்வாங்கப்பட்டவர்களுக்கு நிரந்தர நியமனம் 

அரசாங்க சேவையில் காணப்படும் வெற்றிடங்களுக்கு பல் திறன் அபிவிருத்தி சேவைப் படையணிக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட 32, 000 பேருக்கு அடுத்த வருடத்தில் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவர்களை அரச மற்றும் பொது நிறுவனங்களில் நிலவூம் வெற்றிடங்களைக் கண்டறிந்து, அவற்றுக்கு இணைப்புச் செய்து நிரந்தரமாக்கி பொருத்தமான சம்பள மட்டங்களில் அமர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். அரச மற்றும் பொது நிறுவனங்ளில் பல் திறன் … Read more

யாழ். மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்

காற்று மாசடைவது தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் பீதியடைய தேவையில்லை என யாழ். போதனா வைத்தியசாலையில் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி. ஜமுனானந்தா தெரிவித்துள்ளார். சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையத்தின் தரவுகளின் அடிப்படையில், காற்று மாசடைவு வீதம் அதிகளவில் காணப்படுகின்றது. முகக்கவசம் அணிவது சிறந்தது இது குறித்து அவர்  மேலும் தெரிவிக்கையில், சுற்றுப்புறக் காற்று தர கண்காணிப்பு நிலையத்தின் தரவின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் காற்று மாசடைவு வீதம் அதிகமாக காணப்படுகின்ற போதிலும், அது தொடர்பில் மக்கள் பயப்படத் … Read more

மோசடி வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்களிடமிருந்து

மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் மூன்றரை கோடி ரூபா (34,174,000) பணத்தை இந்த வருடத்தின் கடந்த 11 மாதங்களில் பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் பெரும் தொகை பணம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் பெற்றுக் கொடுக்கப்பட்ட தொகை 8,945,900 ரூபா என்றும்; பணியகம் குறிப்பிட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பின் போது நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகமான தொகையை அறவீடு … Read more

நாட்டு மக்களுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி! மீண்டும் ஆரம்பமாகும் வரிசையுகம்

நாட்டில் தொடர்ந்து எரிவாயு தட்டுபாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை லிட்ரோ நிறுவனம் அதிகரித்திருந்தது. எரிவாயு தட்டுபாடு இந்நிலையில் நாடு முழுவதும் லிட்ரோ சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். லிட்ரோ எரிவாயு சிலிண்டர் பெறுவதற்கு பல நாட்கள் அலைய வேண்டியுள்ளதாகவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர். லிட்ரோ சமையல் எரிவாயு விற்பனை முகவர்கள் தினமும் கையிருப்பு பெற்றாலும் கையிருப்பு போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ளனர். … Read more

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாடசாலைகளுக்கு விடுமுறை – கல்வி அமைச்சர்

வளிமண்டலத்தில் உள்ள தூசித் துகள்கள் அதிகரித்துள்ளமை மற்றும், புயலால் சில பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் என்பதனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (09) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதாக.  கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த் இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஆலோசனைக்கு பின்னரே அரச மற்றும் அரச சார்பற்ற பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

காற்று மாசடைவு: இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்பு படிப்படியாக குறைகிறது

இந்தியாவின் புது தில்லியில் நிழவுகின்ற காற்று மாசடைவு காரணமாக. இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு படிப்படியாக குறைந்து செல்கின்றது என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இலங்கையில் நேற்றைய தினம் பதிவான காற்று மாசடைவுடன் ஒப்பிடும் போது, தற்போது அது கணிசமான அளவு குறைந்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசடைவு, வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று இலங்கையில் மிக மோசமாக காற்று மாசடைந்துள்ளது. மேலும், இந்த விஷவாயுவை … Read more

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று(9) முதல் நடைமுறைக்கு வருகின்றது.  புதிய விலை விபரம் இதன்படி, ஒரு கிலோ கிராம் கீரி சம்பா அரிசியின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.  அத்துடன்,  பெரிய வெங்காயத்தின் விலை 16 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.   இதேவேளை,  425 கிராம் டின் மீன் டின் ஒன்றின் விலை 35 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், விலை குறைப்பிற்கமைய ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசியின் … Read more

வளிமண்டலத்தின் மீது ஏற்பட்ட தாக்கம் ஓரளவுக்கு குறைந்திருப்பதாக தெரிவிப்பு

வளிமண்டலத்தின் மீது நேற்று (10)  ஏற்பட்ட தாக்கம் தற்போது ஓரளவுக்கு குறைந்திருப்பதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் திரு.அனில் ஜாசிங்க தெரிவித்தார். சிறுபிள்ளைகள், சுவாசக் கோளாறு உள்ளவர்கள் போன்ற உணர்திறன் மிக்கவர்கள் இதுவிடயத்தில் அவதானத்துடன் செயல்பட வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என செயலாளர் திரு.அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு விசேட அறிவுறுத்தல்

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 டிசம்பர் 09ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தென் மேற்குவங்காள விரிகுடா கடற்பரப்புகளில் (திருகோணமலைக்கு வடகிழக்காக240 கிலோ மீட்டர் தூரத்தில்) நிலை கொண்டுள்ள“Mandous” என்றபாரிய சூறாவளியானது நேற்று இரவு11.30 மணிக்கு வட அகலாங்கு10.60 N இற்கும் கிழக்குநெடுங்கோடு 82.30 E இற்கும் அருகில் மையம் கொண்டிருந்தது. அதுமேற்கு– வடமேற்குதிசையில் நகரக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதுடன் டிசம்பர் 09ஆம் திகதி நள்ளிரவுப் பொழுதில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தென் ஆந்திரப் பிரதேசகரையோரப் பிரதேசங்களைகடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம்காரணமாக டிசம்பர் 09ஆம் திகதிவடக்கு மற்றும் கிழக்குகரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம்கூடிய மற்றும் ஆழம்குறைந்தகடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பு முதல் … Read more

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் 16 ஆவது பட்டமளிப்பு விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் 16 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று (08) பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முப்படைகளின் அதிகாரிகளுக்கு பட்டங்களை வழங்கும் பாதுகாப்பு கல்வித் துறையில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனமான பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி, முப்படை அதிகாரிகளின் கட்டளை மற்றும் பதவிநிலை என்ற இரண்டு பிரிவுகளிலும் தொழில்முறை அறிவையும் புரிதலையும் வளர்க்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டதாகும். … Read more