கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெருந்தொகை தங்கம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெருந்தொகை தங்கத்துடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடமிருந்து 22 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது இதன் சந்தைப் பெறுமதி 400 மில்லிய் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடத்தல் தங்கத்துடன் நான்கு இலங்கையர்கள் விமான நிலையத்தை வந்தடைந்த போதே, அவர்கள் சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களில் பயண பொதிகளில் தங்கம் மறைத்து வைத்திருந்த நிலையில் அதிகாரிகள் மீட்டுள்ளனர். குறித்த தங்க தொகுதி டுபாயில் இருந்து சென்னை ஊடாக இலங்கைக்குள் கொண்டு … Read more

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு (video)

 இலங்கையில் முகக் கவசம் அணியுமாறு உத்தரவிடப்பட்டுள்ள பகுதிகளில் தொடர்ந்து நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மீள் அறிவிப்பு வரும் வரை முகக் கவசம் அணிய வேண்டும் என பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தூசித் துகள்களின் தாக்கத்தினால் ஏற்பட்ட வளி மாசு பாரியளவில் குறைந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதைய காற்றின் நிலை மற்றும் அதன் அபாயம் குறித்து அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் சில நாட்களில் முகக் கவசம் அணிவது … Read more

10 வருடங்களின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட பாதகமான மாற்றம் – அரசு எடுத்துள்ள நடவடிக்கை

இலங்கையில் சுமார் ஒரு தசாப்தத்தின் பின்னர் வளிமண்டலத்தில், அதிகளவான மாசு நேற்று படிந்ததாக மத்திய சுற்றாடல் அதிகாரச் சபை தெரிவித்துள்ளது. மெண்டௌஸ் சூறாவளியினால் இந்தியாவில் இருந்து அதிகளவான மாசுகள் இலங்கையை சூழ்ந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் சஞ்ஜய ரத்நாயக்க குறிப்பிட்டார். இதன் காரணமாக நாடளாவிய ரீதியில், அதிக குளிருடனான வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தூசுப் படிமங்கள் இன்று முதல் குறைவடையும் … Read more

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இரண்டாம் மொழி பயிற்சிநெறி  

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்துறை அரச நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கு அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் இரண்டாம் மொழி சிங்கள பயிற்சிநெறி வகுப்பு  (08)  முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நோர்வே நாட்டு நிதி அனுசரணையில் UNDP நிறுவனம் மற்றும் OfeRR (Ceylon) நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் 200 மணித்தியாலங்களை உள்ளடக்கியதாக இந்த கற்கை நெறி நடைபெறவுள்ளது. இக் கற்கைநெறி வாரத்தில் இரு நாட்கள் நடைபெறும் .  80 வீதமான வரவு கட்டாயமானதென வலியுறுத்தப்பட்டது. … Read more

வவுனியாவில் சேதன பசளை: வீட்டுத்தோட்டங்களில் வெற்றிகரமாக அறுவடை

தேசிய உணவு உற்பத்தி மற்றும் பாதுகாப்புத் திட்டத்துடன் இணைந்ததாக வவுனியா மாவட்டத்தில் சேதன பசளையை மாத்திரம் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட 29,000க்கும் மேற்பட்ட வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் தற்போது மிகவும் வெற்றிகரமானதாக அறுவடை செய்யப்பட்டுவருவதாக வவுனியா மாவட்ட செயலாளர் திரு.பி.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார். மரக்கறி விலைகள் அதிகரித்துள்ள இக்காலப்பகுதியில் குறித்த நச்சுத்தன்மையற்ற மரக்கறிகளுக்கும் சந்தையில் அதிக வரவேற்பு காணப்படுகின்றது. நச்சுத்தன்மையற்ற மரக்கறிகள் மற்றும் ஏனைய பயிர்கள் உற்பத்தியாளர்களால் பாவனைக்காக எடுத்துச் கொள்ளப்பட்டதன் பின்னர் மேலதிகமானவை சந்தைக்கு அனுப்பப்படுவதாகவும் மாவட்ட செயலாளர் … Read more

இந்தியாவை போன்று ஆபத்தான நிலையில் கொழும்பு – மரணங்கள் ஏற்படும் அபாயம்

இந்தியாவின் டெல்லியில் மோசமான காற்று மாசுபாட்டின் விளைவு, வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆகியவற்றுடன், இலங்கை தற்போது மிக மோசமான காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கொழும்பு நகரம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 16 மாவட்டங்கள் காற்று மாசுபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், நச்சு வாயுக்களை சுவாசிப்பது சில நேரங்களில் மரணத்திற்கு கூட வழிவகுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. இதனால் முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், வீட்டை விட்டு வெளியே சென்றால் முகக் கவசங்களை … Read more

ஜனவரி முதல் காகித பயன்பாடற்ற மின் கட்டணப் பட்டியல்

ஜனவரி முதல் காகிதமல்லா மின்பட்டியல் மற்றும் பற்றுசீட்டு முறைமையை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக  மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையின் செலவுகளைக் குறைப்பது தொடர்பில், உயரதிகாரிகளுடனான இணையவழி மூலமான சந்திப்பின் போது, செலவினங்களைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் மின்சாரசபையின் செலவுகளைக் குறைக்க எடுக்கப்படக்கூடிய மேலதிக நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் கலந்துரையாடினார். இலங்கை மின்சார சபையின் புதிய தலைமையகத்தின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துமாறும் அமைச்சர் இதன்போது கேட்டுக் கொண்டுள்ளார்.காகிதமல்லா மின்பட்டியலை அறிமுகப்படுத்தல் தொடர்பிலும், … Read more

புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது: இந்திய வானிலை ஆய்வு நிலையம் அறிவிப்பு

வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகருகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) இரவு முதல் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை  ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் கடந்த 5 ஆம்திகதி உருவான இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் காலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைக்கொண்டிருந்தது. பின்னர், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று அதிகாலையில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று … Read more

மக்களே அவதானம்! நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் (திருகோணமலைக்கு கிழக்காக 300 கிலோ மீட்டர் தூரத்தில்) நிலைகொண்டுள்ள“Mandous” என்ற சூறாவளியானது இன்று காலை 8.30 மணிக்கு வட அகலாங்கு 9.50 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 83.80 E இற்கும் அருகில் மையம் கொண்டிருக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அது மேற்கு- வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதுடன் இன்று நள்ளிரவுப் பொழுதில் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் வடதமிழ் நாடு, பாண்டிச்சேரி மற்றும் தென் ஆந்திரப் … Read more