உபவேந்தர்கள் , பணிப்பாளர்களின் அமர்வு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில்

 இலங்கை விமானப்படையின் 8வது குழு மத்திய ஆபிரிக்காவில் ஐக்கிய நாடுகளில் அமைதிகாக்கும் கடமைகளில் பங்கேற்பதற்காக டிசம்பர் நான்காம் திகதி இலங்கையையில் இருந்து வெளியேறியது. பல்வேறு தொழில் துறைகளைச் சேர்ந்த 20 அதிகாரிகள் மற்றும் 89 விமானப்படை வீரர்களை உள்ளடக்கிய இலங்கை விமானப்படை குழு, துணைத் தளபதி விங் கமாண்டர் காஞ்சன லியனாராச்சி தலைமையில் செல்லவுள்ளது

எம்.பி.பதவியை இழக்கும் நிலையில் இரண்டு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டம் இரட்டைப் குடியுரிமை கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பேரிடியாக மாறியுள்ளது. இந்நிலையில், இரட்டை குடியுரிமை விவகாரத்தால் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் எம்.பி. பதவியை இழக்கக்கூடும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றது. இரண்டு பெண்கள் உறுப்பினர்கள் அவர்களில் ஒருவர் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ‘மொட்டு’க் கட்சியில் காலி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அவர் சுவிஸ்லாந்தின் குடியுரிமையை வைத்துள்ளார் என்று சொல்லப்படுகின்றது. அடுத்தவர் டயனா கமகே,அவரும் … Read more

இலங்கையின் தற்போதைய நிலை! முக்கிய தகவலை வெளியிட்ட மத்திய வங்கி ஆளுநர்

இம்மாதத்தில் சீனாவிடமிருந்து நிதி உத்தரவாதம் கிடைத்தால், ஜனவரியில் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் அனுமதி கிடைக்கும் என நம்பலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் நிலைமை குறித்து விளக்கமளிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். அடுத்த முக்கியமான நடவடிக்கை, எங்கள் இருதரப்பு கடன் வழங்குனர்களும் நிதி உத்தரவாதம் வழங்க சம்மதிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளையே செய்து வருகின்றோம். நாங்கள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்று நினைக்கிறேன். … Read more

13 ஆவது திருத்தத்தினை பலப்படுத்தி அதனை முன்னெடுப்பதையே எமது மக்களின் அரசியல் ரீதியான பிரச்சினைக்கு ஆரம்பத் தீர்வாகக் கருதுகிறோம்

அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ளுமாறு இனவாதிகளும் சொல்வதற்குரிய சூழலை ஏற்படுத்த வேண்டுமே தவிர, இனவாத சக்திகளுக்கு மெல்வதற்கு அவலை கொடுக்க கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (06.12.2022) இடம்பெற்ற கடற்றொழில் அமைச்சு தொடர்பான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த விவாதத்தில், கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள், கடந்த கால அடைவுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்திய கடற்றொழில் அமைச்சர் … Read more

எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படாது

பெரும்போகத்திற்குத் தேவையான உர விநியோகம் இடம்பெற்றுள்ளதாக விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் 12ஆவது . நாளான நேற்றைய (06) தினம் உரையாற்றிய அமைச்சர் மஹிந்த அமரவீர, பண்டி உர விநியோக நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டது. எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்பட மாட்டாது. சோள உற்பத்தியாளர்களுக்கும் உரம் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு 20 ஆயிரம் ரூபா பெறுமதியான சேதனப் பசளையும் விநியோகிக்கப்படுகிறது. ஒரு ஹெக்டெயரை விட குறைந்த … Read more

வட மாகாணத்திலும், திருகோணமலை மாவட்டத்திலும் 100 மி.மீக்கும் அதிகமான வீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 டிசம்பர்07ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு2022 டிசம்பர்07ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது தென்கிழக்கு வங்காள விரிகுடாகடற்பரப்புகளில்(திருகோணமலைக்கு வடகிழக்காக 570 கிலோ மீட்டர் தூரத்தில்) நிலைகொண்டுள்ள தாழமுக்கம் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 07ஆம் திகதி மாலையளவில் ஒருசூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம்காணப்படுகின்றது. இத் தொகுதியானது டிசம்பர் 08ஆம் திகதியளவில் வடதமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் தென் ஆந்திரப் பிரதேச கரையோரப்பிரதேசங்களை அடையக் … Read more

உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்களின் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை பெண்

2022ஆம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்குமிக்க நூறு பெண்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் இலங்கையின் மனித உரிமை ஆர்வலர் சந்தியா எக்னெலிகொடவும் இடம்பெற்றுள்ளார். உலகின் செல்வாக்கு மிக்க பெண்களின் பட்டியல் உலகின் செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் நடிகை பிரியங்கா சோப்ரா, விண்வெளி பொறியாளர் Sirisha Bandla உள்ளிட்ட 4 இந்திய பெண்கள் இடம்பெற்றுள்ளனர். சந்தியாவின் கணவரான பிரகீத் எக்னெலிகொட (Prageeth Eknaligoda), இலங்கை அரசை கடுமையாக விமர்சித்த ஒரு பத்திரிகையாளர் ஆவார். இவர் 2010 ஆம் … Read more

இலங்கையில் குறிவைக்கப்படும் இளைஞர்கள்! மற்றுமொரு மோசடி அம்பலம்

மாத்தளை, உக்குவெல பிரதேசத்தில் தோட்டங்களை அண்மித்து வாழும் இளைஞர்கள் மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்களை தெரிவு செய்து தரகர்கள் மேற்கொள்ளும் சிறுநீரக வியாபாரம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு குறிவைக்கப்டும் சிறுநீரகம் மூன்று முதல் ஐந்து இலட்சம் ரூபா வரை கொள்வனவு செய்யப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான உடல் உறுப்பு விற்பனையினால் மோசமான நிலை உருவாகியுள்ளதாகவும்,சிறுநீரக விற்பனையால் அப்பகுதி மக்கள் அதிகளவில் நோய்வாய்ப்பட்டு கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்றுமொரு மோசடி அம்பலம் தற்போது நிலவும் … Read more

கொழும்பில் சில மணி நேரங்களில் ஈட்டப்பட்ட பல இலட்சம் ரூபாய் வருமானம்

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நேற்று காலை 06.30 மணி முதல் 10.00 மணி வரை இடம்பெற்ற விசேட பயணச்சீட்டு பரிசோதனையின் போது செல்லுபடியான பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்த 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலா பயணச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும் கோட்டை ரயில் நிலைய ஊழியர்கள் இணைந்து இந்த விசேட பரிசோதனையை மேற்கொண்டதாக புகையிரத வர்த்தக பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார். அங்கு கைது செய்யப்பட்ட 78 பேர் இது தொடர்பான அபராதத் தொகையை … Read more